Published:Updated:

`நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை; இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது?' - கேள்வியெழுப்பும் யுவராஜ் சிங்

விராட் கோலி, ரவி சாஸ்திரி ( AP )

2011 உலகக்கோப்பை தொடரில் தோனியின் சிக்ஸர், கவுதம் கம்பீரின் ஓப்பனிங் போன்று யுவராஜின் ஆட்டமும் இந்திய அணி கோப்பை கைப்பற்ற காரணமாக இருந்தது.

Published:Updated:

`நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை; இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது?' - கேள்வியெழுப்பும் யுவராஜ் சிங்

2011 உலகக்கோப்பை தொடரில் தோனியின் சிக்ஸர், கவுதம் கம்பீரின் ஓப்பனிங் போன்று யுவராஜின் ஆட்டமும் இந்திய அணி கோப்பை கைப்பற்ற காரணமாக இருந்தது.

விராட் கோலி, ரவி சாஸ்திரி ( AP )

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணிக்கு நான்காவது வீரரை தேர்வு செய்வது பெரும் பிரச்னையாக இருந்தது. அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களில் யாரை தேர்வது என்ற குழப்பம் இருந்தது. 2018-ல் அம்பதி ராயுடு சிறப்பாகவே ஆடி வந்தார். நான்காவது வீரருக்கான பிரச்னை தீர்ந்தது. அந்த இடத்தை ராயுடு நிரப்புவார் எனக் கூறப்பட்டது. ஆனால் 2019-ல் ராயுடு சொதப்ப மீண்டும் அந்த இடத்தை யார் நிரப்புவது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு

நம்பர்-4 என்ற இடத்திற்கு கே.எல்.ராகுலையும், விஜய் சங்கரையும் தேர்வு செய்தது பிசிசிஐ. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. தொடக்க ஆட்டக்காரர் தவான், விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக வெளியேறினார். நான்காவது இடத்திற்கு தேர்வான கே.எல்.ராகுல் ஓப்பனிங் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனுக்குள் வந்தார்.

லீக் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் சதங்கள் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் அசத்தலான பந்துவீச்சு மூலம் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதிப்போட்டி நியூசிலாந்துடன் நடந்தது. முதல் நாள் 45.1 ஓவர்கள் இந்திய அணி வீசிய நிலையில் ஆட்டம் மழையால் தடைபட்டது. இரண்டாம் நாள் வரை போட்டி சென்றது. நியூசிலாந்து 239 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித், கோலி, ராகுல் மூவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். ஜடேஜா- தோனி கூட்டணி வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தது. ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட் போட்டியை தலைகீழாக மாற்றியது. இந்தியா உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

2011 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் நம்பர்-4 இடத்தில் விளையாடினார். அந்தத் தொடரில் அவர் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். தோனியின் சிக்ஸர், கவுதம் கம்பீரின் ஓப்பனிங் போன்று யுவராஜின் ஆட்டமும் இந்திய அணி கோப்பை கைப்பற்ற ஒரு காரணம்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேசியுள்ள யுவராஜ் சிங் , ``உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இந்திய அணி நான்காவது வீரர் மீது கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த வீரர் சிறப்பாக செயல்படாதபட்சத்தில் நீங்கள் தான் 4-வது வீரர் என அவருக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். 2003-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது இந்திய அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆனால், அதே அணி தான் உலகக்கோப்பை தொடருக்கு சென்றோம். அம்பதி ராயுடு விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ அவரை கையாண்ட விதம் கவலை அளிக்கிறது. உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது நீங்கள் அணியில் இல்லை எனக் கூறும்போது அது கடினமானதாக இருக்கும்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவராக ராயுடு இருந்தார். ஆனால், அவருக்கு நடந்ததை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது அவர் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் அதற்கு அடுத்த 2, 3 தொடர்களில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக அவரை நீக்கி இருக்கக்கூடாது. அதன் பின் ரிஷப் பண்ட் அணிக்குள் வந்தார் அவரும் ட்ராப் செய்யப்பட்டார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நம்பர் -4 என்ற இடம் முக்கியமானது. அந்த இடத்தில் ஒருவர் சிறப்பாக விளையாடுவார் என்றால் அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக யாரையும் நீங்கள் ட்ராப் செய்யக்கூடாது.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் நம்பர்- 4 இடத்தில் ஆடவைக்கப்பட்டார். இந்திய அணியிடம் 4-வது இடம் குறித்து என்ன திட்டம் இருந்தது எனத் தெரியவில்லை. மீண்டும் ரிஷப் பண்ட் அந்த இடத்தில் ஆடவைக்கப்பட்டார். அரையிறுதிப்போட்டியில் ரோஹித், கோலி இருவரும் விரைவிலே அவுட்டாகி வெளியேறினர். அதன்பின் இந்திய அணி தடுமாறியதை நாம் அனைவருமே அறிவோம். இவர்கள் எந்த திட்டத்தின் அடிப்படையில் விளையாடினார்கள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை” என யுவராஜ் தெரிவித்துள்ளார்.