Published:Updated:

ஷிம்ரான் ஹிட்மேயர் - கரீபிய அணியின் அடுத்த தலைமுறை நாயகன்! #PlayerBio

ஷிம்ரான் ஹிட்மேயர்
News
ஷிம்ரான் ஹிட்மேயர்

ஹிட்மேயர் - ஒரு முழு பேக்கேஜ்... சர்க்கிளுக்குள் இருக்கும் பந்துக்கே, மின்னலெனப் பாய்ந்து இரண்டு ரன்கள் எடுக்கக்கூடியவர். அதனால்தான், அவர் ஒரு முழு பேக்கேஜ்.

பெயர் : ஷிம்ரான் ஓடிலான் ஹிட்மேயர்
பிறந்த தேதி : 26 - 12 - 1996
ஊர் : கம்பெர்லேண்ட், கயானா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
பௌலிங் ஸ்டைல் : லெக் பிரேக்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 21 - 4 - 2017
செல்லப்பெயர் : ஹிட்டீ

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹிட்மேயர் - ஒரு முழு பேக்கேஜ். இன்றைய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தான 'ஹார்ட் ஹிட்டிங்' ஆட்டத்தில் வல்லவர். லெக் சைடு பந்துவீசினால் அவ்வளவுதான். பௌண்டரி எல்லைக்கு வெளியில்தான் பந்தை எடுக்கவேண்டும். கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரஸல் போல் திடமான உடல்வாகு இல்லாவிட்டாலும், பந்தை பௌண்டரி எல்லைக்கு வெளியே அனுப்புவதில் கில்லாடி. ஆனால், இவரை மற்ற வெஸ்ட் இண்டீஸ் டி-20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் மட்டும் வைக்க முடியாது. நல்ல ஃபூட் வொர்க் கொண்டவர். கிளாசிக்கலான ஆஃப் டிரைவ்கள் அடிப்பார். ஸ்வீப் ஷாட் ஆடுவார். அதைவிட, சர்க்கிளுக்குள் இருக்கும் பந்துக்கே, மின்னலெனப் பாய்ந்து இரண்டு ரன்கள் எடுக்கக்கூடியவர். அதனால்தான், அவர் ஒரு முழு பேக்கேஜ்.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்

ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஹிட்மேயர், பத்தாவது படிக்கும்போது, தன் பள்ளி அணியின் கேப்டனானார். அவரது அசாத்திய பேட்டிங் திறமையும், தலைமைப் பண்பும் அவரை பெர்பைஸ் உயர்நிலைப்பள்ளியின் தவிர்க்க முடியாத வீரராக்கியது. பள்ளி அளவில் சிறப்பாக விளையாட, கயானாவின் 15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.

முதல் 'அண்டர் - 19' உலகக் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் இவர்தான்! அந்தத் தொடரின் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார். வெஸ்ட் இண்டீஸின் முதல்தர கிரிக்கெட் தொடரான புரொஃபஷனல் கிரிக்கெட் லீக் (PCL) தொடரில் கயானா ஜேகுவார்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது.

ஷிம்ரான் ஹிட்மேயர்
ஷிம்ரான் ஹிட்மேயர்

2016-17 சீசனில், அந்த அணியின் இரண்டாவது டாப் ஸ்கோரர் (496 ரன்கள்) இவர்தான். அவரது அந்த அசத்தல் செயல்பாடு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதவுகளைத் திறந்தது. டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் அந்த அணியின் மிகமுக்கிய வீரராகத் திகழ்கிறார் ஹிட்மேயர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தில் இவர் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், கடினமான பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து, இன்னிங்ஸைக் கட்டமைப்பதிலும் இவர் வல்லவர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 259 ரன்கள் (5 போட்டிகள்) எடுத்து மிரட்டினார். அவரது அந்த அதிரடி ஆட்டம், ஐ.பி.எல் ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4.2 கோடி கொடுத்து அவரை வாங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிட்மேயரின் சிறந்த இன்னிங்ஸ்

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹிட்மேயர் ஆடியது வேற லெவல் ஆட்டம். முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா என முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையெல்லாம் பதம் பார்த்து 78 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை திணறடித்த இந்திய அணி, ஹிட்மேயரின் இந்த ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. அதுவும், அவர் அடித்த அந்த ஆறு சிக்ஸர்களும், 'ஒருவேளை கிறிஸ் கெய்ல்தான் ஆடுகிறாரோ' என்று யோசிக்க வைத்தன.

ஷிம்ரான் ஹிட்மேயர்
ஷிம்ரான் ஹிட்மேயர்

அந்த அசத்தல் சதத்துக்குப் பிறகு, அடுத்த போட்டியிலேயே மீண்டும் இந்தியாவை மிரட்டினார் இந்த இளம் கயானா வீரர். தன் துருப்புச்சீட்டு குல்தீப்பை கோலி பயன்படுத்த, அவரையும் விட்டுவைக்காமல் பந்தாடினார் ஹிட்மேயர். 321 என்ற மிகப்பெரிய இலக்கை அந்த அணி துரத்த, அந்த பதற்றம் கொஞ்சமும் இல்லாமல் வெளுத்தார். 64 பந்துகளில் 94 ரன்கள். இந்த முறை 7 இமாலய சிக்சர்கள்!

ஷிம்ரான் ஹிட்மேயர் ஸ்பெஷல்

அண்டர் - 19 உலகக் கோப்பை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்
கரீபியன் பிரீமியர் லீகில் சதமடித்த இளம் வீரர்
வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் எல்லா இளம் வீரர்களுக்கும் ஐ.பி.எல் தொடரில் ஆடவேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சரியானது. ஏனெனில், கிரிக்கெட் அரங்கில், அதைவிடப் பெருமையான விஷயம் எதுவும் இல்லை!
ஷிம்ரான் ஹிட்மேயர்
ரோல் மாடல் - பிரயன் லாரா
ஃபேவரிட் ஷாட் - புல் ஷாட்