Published:Updated:

திடீர் நெஞ்சுவலி! - மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரா

லாரா
லாரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 400 ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் லாரா.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் போது வர்ணணையாளார் பணியை மேற்கொண்டிருந்த லாரா, தற்போது உலகக்கோப்பை தொடரிலும் வர்ணனையாளராக உள்ளார். இதற்காகதான் லாரா தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவின் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரச்னை எதுவும் இல்லை எனக் கூறியதாக லாராவின் நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

லாரா
லாரா

லாரா கடந்த மே மாதம்தான் தனது 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளும், 299 ஒருநாள் போட்டிகளும் விளையாடியுள்ளார். லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் எதிர்த்து விளையாடிய அனைத்து அணிக்கு எதிராகவும் சதம் விளாசியுள்ளார். மேலும், ஒரே போட்டியில் 400 ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு