Published:Updated:

லார்ட்ஸில் இங்கிலாந்து Vs நியூசிலாந்து! #AUSvENG

சார்லஸ்.டி

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் உடனடி அப்டேட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்கோர் மட்டுமல்லாமல், பல சுவாரஸ்யமான பகிர்வுகளும் உண்டு. உரையாடலாம்!

#AUSvENG
#AUSvENG
11 Jul 2019 9 PM

லார்ட்ஸில் சந்திப்போம்!

இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து. பெளலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை மோசமாகத் தோற்கடித்திருக்கிறது. ஜேஸன் ராயின் இன்னிங்ஸ்தான் இங்கிலாந்தின் எனர்ஜி பூஸ்டர்!

11 Jul 2019 9 PM

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாம்பியன்!

இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதப்போகின்றன.நியூஸிலாந்தைவிட இங்கிலாந்து பலம் பொருந்திய அணியாக இருக்கிறது. ஆனால் லீக் போட்டிகளில் பாகிஸ்தான், இலஙகை அணிகளிடம் தோற்றது இங்கிலாந்து. அதனால் ஞாயிறு யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்கள் கையில் சாம்பியன் கோப்பை!

11 Jul 2019 9 PM

இங்கிலாந்தில் சூப்பர் சன் டே!

இந்த ஞாயிறு இங்கிலாந்தில் ஸ்போர்ட்ஸின் சூப்பர் சன் டே... உலகக்கோப்பை இறுதிப்போட்டி, விம்பிள்டன் ஆண்கள் இறுதிப்போட்டி, பிரிட்டிஷ் ஜீபி ஃபார்முலா - 1 கார் ரேஸ் பந்தயம் என மூன்று முக்கிய போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

11 Jul 2019 9 PM
11 Jul 2019 8 PM

தர்மசேனா செய்த தவறு!

85 ரன்களில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜேஸன் ராயின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. தர்மசேனாவின் பிழையால் ஆட்டம் இழந்திருக்கிறார் ராய். பேட், கிளவுஸ் என எதிலும் படாமல் கீப்பரிடம் சென்ற பந்தை ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்க தர்மசேனாவும் அவுட் கொடுத்துவிட்டார். பேர்ஸ்டோ ஏற்கெனவே ரிவியூ கேட்டுவிட்டதால் ராயால் ரிவியூ கேட்கமுடியவில்லை. சில நிமிடங்கள் அதிருப்தியில் வாக்குவாதம் செய்த ராய் களத்தைவிட்டு வெளியேறினார்.

11 Jul 2019 8 PM
11 Jul 2019 8 PM

பேர்ஸ்டோ அவுட்!

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்திருக்கிறார் ஸ்டார்க். சரியான லைன் அண்ட் லெங்த்தில் வந்த ஸ்டார்க்கின் பந்து மிடில் ஸ்டம்புக்கு நேராக பேர்ஸ்டோவின் காலில் பட்டது. தர்மசேனா அவுட் கொடுக்க ரிவியூ கேட்டார் பேர்ஸ்டோ. ரிவியூவில் கிளீன் அவுட் என்பது நிரூபனமானது!

11 Jul 2019 8 PM

எடுபடாத ஆஸ்திரேலிய பெளலிங்!

ஆஸ்திரேலிய பெளலிங்கை சிதைத்து வருகிறார் ஜேஸன் ராய்... விக்கெட் இழப்பின்றி 17 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்திருக்கிறது இங்கிலாந்து!

11 Jul 2019 6 PM

223 ரன்களில் ஆல் அவுட்!

300 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடிய பிட்சில் 223 ரன்களில் ஆல் ஆவுட் ஆகியிருக்கிறது ஆஸ்திரேலியா. 1 டவுன் பேட்ஸ்மேனான ஸ்மித் மட்டுமே களத்தில் நின்று 85 ரன்கள் அடித்தார். கேரியின் 46 ரன்கள் முக்கியமானது. இனி ஸ்டார்க், பெரன்டார்ஃப், கமின்ஸ், லயான் கைகளில்தான் ஆஸ்திரேலியாவின் வெற்றி இருக்கிறது.

11 Jul 2019 6 PM

ஸ்மித் அவுட்!

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 85 ரன்களில் அவுட். கிட்டத்தட்ட தோனி போலவே ரன் அவுட் ஆனார் ஸ்மித்.

11 Jul 2019 6 PM

ஸ்மித் - ஸ்டார்க் கூட்டணி!

ஸ்மித் - ஸ்டார்க் கூட்டணி எட்டாவது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டிருக்கிறது.

11 Jul 2019 6 PM
11 Jul 2019 5 PM

அசத்தும் ஆதில்!

லார்ட்ஸில் இங்கிலாந்து Vs நியூசிலாந்து! #AUSvENG

மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் ஆதில் ரஷீத். இந்த உலகக்கோப்பையில் இதுவரை சிறப்பாக விளையாடாத ஆதிலின் மீது நம்பிக்கைவைத்து அவரைப் ப்ளேயிங் லெவனில் வைத்திருந்தார் இயான் மோர்கன். இதற்குக் காரணமும் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே ஆதிலின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். மோர்கனின் நம்பிக்கை வீணாகவில்லை. இன்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் ஆதில். ஸ்மித்- கேரி பார்ட்னர்ஷிப்பை உடைத்ததோடு ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் ஆதில்.

11 Jul 2019 5 PM

மேக்ஸ்வெல் அவுட்

அதிரடி இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் அவுட். பவுன்சாகி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தை சரியாகக் கணிக்கத் தவறிய மேக்ஸ்வெல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்திருக்கிறது.

11 Jul 2019 5 PM

ஸ்டைலிஷ் ஸ்மித்!

லார்ட்ஸில் இங்கிலாந்து Vs நியூசிலாந்து! #AUSvENG

இந்த உலகக்கோப்பையில் தனது 4-வது அரை சதத்தை நிறைவு செய்திருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித். மிகச்சிறப்பான கிரிக்கெட்டிங் ஷாட்ஸ் ஆடிவரும் ஸ்மித்தின் இன்னிங்ஸ் 100-ஐத் தொடுமா?

11 Jul 2019 5 PM
11 Jul 2019 5 PM

ஸ்டாய்னிஸ் அவுட்!

அடுத்தடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஸ்டாய்னிஸ் ஆதில் ரஷித் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் அவுட். 28 ஓவர்களில்118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா.

11 Jul 2019 5 PM

கேரி அவுட்!

நான்காவது விக்கெட்டை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. நிதானமாக ஆடிவந்த கேரி, பன்ட்டைப் போலவே ஸ்பின்னில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஆதில் ரஷீத் பந்துவீச்சில் அவுட் ஆகியிருக்கிறார். கேரி 70 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.

11 Jul 2019 4 PM

ஸ்மித் - கேரி பார்ட்னர்ஷிப்!

50 ரன்களைத் தொட்டிருக்கிறது ஸ்மித் - கேரி பார்ட்னர்ஷிப். ஸ்மித் மீண்டும் தனது ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். இதுவரை 32 ரன்கள் அடித்திருக்கிறார் ஸ்மித்!

11 Jul 2019 4 PM

குறைந்துபோன ரன் வேட்டை!

லீக் போட்டிகளில் 300, 350 ரன்கள் என ரன் வேட்டை நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், இதுவரையிலான செமி ஃபைனல் இன்னிங்ஸ்களில் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் பேட்ஸ்மேன்கள்.

இந்தியா, நியூஸிலாந்துக்கு இடையிலான போட்டியில் முதல் 10 ஓவர்களில் நியூஸிலாந்து 27 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், இந்தியா 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது!

11 Jul 2019 3 PM

உடைக்கப்படாத சச்சின் ரெகார்டு!

உலகக்கோப்பை போட்டிகளில் 2003 உலகக்கோப்பையில் சச்சின் அடித்த 673 ரன்களே அதிகபட்சம். ரவுண்ட் ராபின்படி இந்தமுறை உலகக்கோப்பை நடைபெற்றதால் இந்த சாதனை உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடி லீக் போட்டிகளின் முடிவில் ரோஹித் ஷர்மா 647 ரன்கள் அடித்திருந்தார். டேவிட் வார்னர் 638 ரன்களில் இருந்தார். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததோடு ரோஹித் ஷர்மா 1 ரன்னில் வெளியேறியதால் ஷர்மாவின் உலகக்கோப்பை ரன்கள் 648-ல் முடிந்திருக்கிறது.

டேவிட் வார்னர் இன்று 9 ரன்களில் அவுட் ஆகியிருக்கும் நிலையில் அவரின் ஸ்கோர் 647. ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றால் சச்சினின் சாதனை வார்னரால் முறியடிக்கப்படலாம்.

11 Jul 2019 3 PM
11 Jul 2019 3 PM

ஹேண்ட்ஸ்கோம் அவுட்!

நேற்றைய இந்திய இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவருகிறது ஆஸ்திரேலியா. வோக்ஸ் மிகச்சிறப்பாக பந்துவீசிவருகிறார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர், ஹேண்ட்ஸ்கோம் என இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் வோக்ஸ்.

11 Jul 2019 3 PM

ஓப்பனர்களை இழந்தது ஆஸ்திரேலியா!

ஃபின்ச், வார்னர் என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரையுமே அடுத்தடுத்து இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஃபின்ச் முதல் பந்திலேயே அவுட். ரிவ்யூ கேட்டதால் அடுத்து ரிவ்யூ கேட்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா.

11 Jul 2019 2 PM

டாஸ் வென்றது ஆஸ்திரேலியா!

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை!

இங்கிலாந்தின் ஜேசன் ராய் இதுவரை 9 சதங்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டது. அதேப்போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதில் ரஷித்தும் சிறப்பாக பந்துவீசுவது வழக்கம்!

11 Jul 2019 2 PM

லார்ட்ஸில் நியூஸியை எதிர்க்கப்போவது யார்?

இந்தியா உலகக்கோப்பையைவிட்டு வெளியேறியிருக்கும் நிலையில் ஞாயிறு நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று முடிவாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு இடையிலான இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக வெற்றிவாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.