Published:Updated:

விஜய் சங்கரை பதம் பார்த்த யார்க்கர் - இந்திய அணிக்கு மீண்டும் சிக்கலா?

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

இந்திய அணியில் நான்காவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற கேள்விக்கு விடையாக கே.எல்.ராகுலும், விஜய் சங்கரும் கிடைத்தனர்.

உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் வெளியேறிய நிலையில் தற்போது விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது பும்ரா வீசிய யார்க்கர் சங்கரின் கால்களை பதம்பார்த்தது. அவருக்கு கால்களில் வலி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியில் நான்காவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற கேள்விக்கு விடையாக கே.எல்.ராகுலும், விஜய் சங்கரும் கிடைத்தனர்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. தவானுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுலும், நான்காவது வீரராக விஜய் சங்கரும் களமிறங்கினார். இந்தப்போட்டியில் புவனேஸ்வர்குமார் தனது 3-வது ஓவரை வீசும்போது கால்களில் காயம் ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து பாதியில் விலகினார். 2. 4 ஓவர்களை வீசிய நிலையில் அவர் வெளியேறினார். இதனையடுத்து அந்த ஓவரை நிறைவு செய்வதற்காக விஜய் சங்கர் பந்துவீச அழைக்கப்பட்டார்.

அவர் வீசிய முதல் பந்திலே சர்ப்ராஸ் அஹமது அவுட்டனார். இந்தப்போட்டியில் ஆல் ரவுண்டராக அவரது செயல்பாடு திருப்திகரமாகவே இருந்தது. தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

இந்த நிலையில் விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும். நம்பர் 4 இடத்திற்கு யாரை ஆட வைப்பது என்ற குழப்பமான சூழல் உருவாகும். விஜய் சங்கருக்கு பந்து பட்ட இடத்தில் வலிதான் இருக்கிறது, பயப்படும் படியாக எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

அடுத்த கட்டுரைக்கு