Published:Updated:

வான் டெர் டஸன் #PlayerBio

மாரியப்பன் பொ

பெரும்பாலும் பவுண்டரி, சிக்ஸர்கள் தான் இவரின் மொழி. எட்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி அவரின் ஸ்ட்ரைக் ரேட் 88.25, டி20 போட்டிகளில் 133.15. லிமிடட் ஓவர் போட்டிகளில் இவரின் ஸ்ட்ரைக் என்பது எதிரணிக்கு கொஞ்சம் கிலி தான் #PlayerBio

வான் டெர் டஸன்
வான் டெர் டஸன்

பெயர்: ரஸ்ஸி வான் டெர் டஸன்.

பிறந்த தேதி: 07.02.1989

ஊர்: பிரிட்டோரியா தென்னாப்பிரிக்கா.

ரோல்: பேட்ஸ்மேன்.

பேட்டிங் ஸ்டைல்: வலது கை பேட்ஸ்மேன்

பௌலிங் ஸ்டைல்: வலது கை லெக் பிரேக் பவுலர்

அறிமுகம்: 19.01.2019

செல்லப்பெயர்: டஸி, வான்டர்

வான் டெர் டஸன்
வான் டெர் டஸன்

ப்ளேயிங் ஸ்டைல்

வான்டர் டசன் ஒரு ஹார்ட் ஹிட்டர். அவரின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் வித்தியாசமானதாக இருக்கும். 100 மேற்பட்ட முதல்தர போட்டிகளில் 15 சதங்களுக்கு மேல் அடித்தவர். அவர் எதிர்கொள்கிற பந்து எப்படி வந்தாலும் சரி முரட்டுத்தனமாக அடிப்பார். கீரிஸில் இருந்து இறங்கி வந்து ஆடக்கூடியவர். பெரும்பாலும் பவுண்டரி, சிக்ஸர்கள் தான் இவரின் மொழி. எட்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி அவரின் ஸ்ட்ரைக் ரேட் 88.25, டி20 போட்டிகளில் 133.15. லிமிடட் ஓவர் போட்டிகளில் இவரின் ஸ்ட்ரைக் என்பது எதிரணிக்கு கொஞ்சம் கிலி தான்.

கிரிக்கெட் பயணம்

தன் 19வது வயதில் முதல்தர போட்டிகளில் ஆட ஆரம்பித்தவர். இதுவரை 110 முதல்தர போட்டிகளிலும், 97 list A போட்டிகளிலும் ஆடி பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்தவர். 2017-18 ம் ஆண்டில் நடந்த சன் ஃபாயில் தொடரில் 958 ரன்களடித்து அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார். அதன்பின் 2018 அக்டோபரில் ஜிம்பாவேவிற்கு எதிரான போட்டியில் ஆடத் தொடங்கியவர் இதுவரை ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும், ஏழு டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

"அறிமுக வீரர்கள் எப்போதும் மெதுவாக ஆடுவதையே கண்ட எனக்கு, வான்டரின் முதல் போட்டி ஆச்சரியமாக இருந்தது. அணியில் நிரந்தர இடம் கிடைக்க போராடிக் கொண்டிருக்கிறார்."
ஃபாப் டூ பெளஸ்ஸி

சிறந்த பர்ஃபாமன்ஸ்

93 (101) vs பாகிஸ்தான்

பாகிஸ்தானிற்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டி முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணியில் வன்டர் டசனும், ஆம்லாவும் இரண்டாவது விக்கெட்டிற்கு 171 ரன் சேர்த்தனர். தன் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடிய வான்டர் டசன் 93 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்தாலும் வான்டர் டசனின் அதிரடி ஆட்டம் மெச்சத்தக்கதாக இருந்தது. இவரின் இந்த அதிரடி தான் தென்னாபிரிக்காவின் புதிய பலமாக இருக்கிறது.

வான் டெர் டஸன்
வான் டெர் டஸன்

80* (75) vs பாகிஸ்தான்

அதே தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 80-5 என்ற நிலையில் தத்தளிக்க. அணியை சரிவிலிருந்து மீட்டார் வான்டர் டசன்‌. பாகிஸ்தான் பவுலர்களை சிதறடித்த அவர் 80 ரன்னிலிருந்து அணியை 203 ரன்களுக்கு உயர்த்தினார். பிகுலுக்வாயோவும் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி எளிதாக வென்றது. அனுபவ வீரர்களே சொதப்பிய நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி தன்னை நிரூபித்தார் வான்டர் டசன்.

வான் டெர் டஸன் ஸ்பெஷல்

2008 ஆம் ஆண்டிலிருந்து முதல்தர போட்டிகளில் ஆடத்தொடங்கிய வான்டர் டசன் அடிக்கடி காயங்களால் அவதிப்பட அவருக்கு கிடைக்கவிருந்த தேசிய அணிக்கான வாய்ப்பு தவறிக் கொண்டே இருந்தது. இறுதியில் தன் 30வது வயதில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். உள்ளூர் போட்டிகளில் 4வது 5வது ஆடியவர். தென்னாபிரிக்க அணியில் ஒன் டவுனில் இறங்கி பிரித்து மேய்கிறார்.

மாரியப்பன் பொ