Published:Updated:

போல்டாகி சிக்ஸருக்குப் பறந்த பந்து... என்னவொரு ஆ(ர்)ச்சர்யம்!

மு.பிரதீப் கிருஷ்ணா

ஸ்டம்பில் பட்ட வேகத்தில், பெயில்ஸைக் கீழே தள்ளிவிட்டவுடன் 54 மீட்டர் பயணம் செய்திருக்கிறது அந்த பந்து.

Jofra Archer
Jofra Archer

நேற்று நடந்த இங்கிலாந்து - வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியில், ஸ்டம்பில் பட்ட பந்து சிக்ஸராகிய நம்பமுடியாத ஒரு விஷயம் நடந்தது!

ஏழு போட்டிகள்... ஏழு 300+ ஸ்கோர்... வங்கதேசத்தைப் பந்தாடிய இங்கிலாந்து! #ENGvBAN

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஜேசன் ராயின் அதிரடி சதத்தாலும், பட்லர் பேர்ஸ்டோ ஆகியோரின் அதிரடியாலும் 386 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 280 ரன்களில் ஆல் அவுட் ஆகி 106 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது.

ஓவருக்கு கிட்டத்தட்ட 8 ரன்கள் வேண்டும் என்று களமிறங்கிய வங்கதேசத்தை, தன் வேகத்தால் மிரட்டினார் ஆர்ச்சர். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 145 - 150 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணித்தன. சிலமுறை தொடர்ந்து 150+ வேகத்திலும் வீசினார். அதனால், தொடக்கத்தில் வங்கதேசத்தின் ரன்ரேட் பிக் அப் ஆகவில்லை. 4-வது ஓவரில் சௌம்யா சர்காருக்கு ஒரு பந்து வீசினாரே!

அந்த ஓவரின் இரண்டாவது டெலிவரி. 143 km/hr வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்சான பந்து, ஸ்விங்காகி உள்ளே வந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அற்புதமான பந்து. அதைவிட பேரற்புதம் என்னவென்றால், ஸ்டம்பில் பட்ட பந்து, எங்கேயும் பிட்சாகாமல் நேரே சிக்ஸ் லைனில் விழுந்ததுதான். ஸ்டம்பில் பட்ட வேகத்தில், 54 மீட்டர் பயணம் செய்திருக்கிறது அந்த பந்து. கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டம்ப் சிக்ஸரடித்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்!

மு.பிரதீப் கிருஷ்ணா