Published:Updated:

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

சற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது.

ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!
ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!

கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி தருவது, சர்ச்சைகள் எழுவது, தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றில் சொதப்புவது என உலகக் கோப்பைக்கென ஒரு டெம்ப்ளேட்டே இருக்கும். இந்த டெம்ப்ளேட்டில் ஆஸ்திரேலியா கப் அடிக்கும் என்பதையும் சேர்த்து விடலாம். இப்படி உலகக் கோப்பையின் வழக்கமான டெம்ப்ளேட்டின் படியே 2015 உலகக் கோப்பையும் நடந்தது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது அணியாக திகழ்ந்தது ஆஸ்திரேலியா. கடந்த 2015 உலகக் கோப்பையின் சில சுவாரஸ்யங்கள்…

உலகக் கோப்பை நினைவுகள்
உலகக் கோப்பை நினைவுகள்

மெளகா மெளகா…..மெளகா மெளகா!

2015 உலகக் கோப்பை தொடங்கியதே ‘மெளகா மெளகா’ விளம்பரம் மூலம் தான். தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பே ‘மெளகா மெளகா’ விளம்பரம் செம வைரல் ஹிட்டடித்தது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக அவர்கள் ரைவல்ரியை கொஞ்சம் காமெடி, கலாய் கலந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய விளம்பரம் தான் இந்த ‘மெளகா மெளகா’. வாட்ஸ் ஆப் ஃபேஸ்புக் என எல்லா சமூகவலைத்தளங்களிலும் ‘மெளகா மெளகா’ தான் ஒளித்துக்கொண்டிருந்தது..

உலகக் கோப்பையில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லாமல் இருந்த்தை கொஞ்சம் காலாய்த்து எடுக்கப்பட்டது அந்த விளம்பரம். 1992-ல் இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்துவதை பட்டாசு வெடித்துக் கொண்டாடக் காத்துக்கொண்டிருக்கும்படியாக தொடங்கும் அந்த விளம்பரம், 2011-ல் அதே ரசிகர், அதே பட்டாசுடன் தன்னுடைய மகனுடன் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும் தருணத்துக்காக காத்துக்கொண்டிருப்பதாக முடியும். முதலில் வெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அந்த விளம்பரம் பலத்த வரவேற்பை பெற்றதால் இந்தியா பங்குபெறும் ஒவ்வொரு போட்டிக்கும் புதியதாக ஒரு ‘மெளகா மெளகா’ விளம்பரம் உருவாக்கப்பட்டு அந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சென்சேஷனாக அமைந்தது.

உலகக் கோப்பையின் மிரட்டலான ஸ்பெல்!

“நீ கையில் பேட் வைத்திருக்கிறாயா? “
வாட்சன்

காலிறுதி போட்டியில் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸிடம் உதிர்த்த வார்த்தைகள் இவை. உலகக் கோப்பையின் ஒரு மகத்தான பெளலிங் ஸ்பெல்லின் ஆரம்பப் புள்ளி இந்த வார்த்தைகள் தான். ஸ்டார்க்கின் 150 கி.மீ வேகத்தில் வரும் பெளன்சர்களுக்கும் யார்க்கர்களுக்கும் தட்டு தடுமாறிக்கொண்டிருந்த வஹாப் ரியாஸிடம் ஆஸ்திரேலியருக்கே உரிய தனித்துவமான ‘ஸ்லெட்ஜிங்’கில் ஈடுபட்டார் வாட்சன்.அந்த வார்த்தைகள் வாஹாபின் காதுகளில் நீங்காமல் ஒளித்துக்கொண்டிருந்தது. அந்த வார்த்தையின் தாக்கத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு வெறிக்கொண்ட மிருகம் போல் பந்து வீசினார்.

அந்த வெள்ளை ஆயுதம் வஹாப் கையில் வரும் போதெல்லாம் எல்லோரும் குஷியானார்கள், ஒருவரைத் தவிர. ஆம்! ஷேன் வாட்சன். அவர் உதிர்த்த வார்த்தைகளுக்கு பல மடங்கு சேர்த்து திருப்பித் தந்தார் வஹாப். பெளன்சர்களால் அவரின் தலையை குறிவைத்தார். ஷேன் வாட்சன் அப்படியே நிலைக்குலைந்து போனார். வாட்சன் தடுமாறுவதை பார்த்து அவர் கிட்டே சென்று கைத்தட்டிய விதம் எல்லாம் நிச்சயமாக THUG LIFE தான்! அன்று தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஸ்பெல்லை போட்டார் வஹாப். மிகச்சிறந்த ஸ்பெல் என்பது நம்பரை வைத்து இல்லை. தன்னை கேலியாக பேசியவரிடம், சற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது. கிரிக்கெட் போட்டியில் ஹலைட்ஸ் ஒளிப்பரப்பும் போது பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர்களும், பெளலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் ஒளிபரப்பப்படும்.ஆனால் இந்த மேட்சின் ஹைலைட்சில் வாஹாபின் அதிரடியான ஸ்பெல்லும் இடம்பெற்றது. விதிகளை மீறி வாட்சனிடம் நடந்துக்கொண்டதால் தொடரின் ஊதியத்தில் 50 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. “அவரின் அபராதத்தை நான் கொடுக்கிறேன்” என லாரா சொன்னார். இதுபோதாதா அந்த ஸ்பெல்லின் சிறப்பைக் கூற?!

கிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அந்த காட்சி !

காலிறுதியில் இலங்கையை வீழ்த்தி ‘நாக்-அவுட்’ போட்டிகளில் தனக்கு பிடித்திருந்த சாபம் நீங்கிவிட்டதாக நினைத்திருந்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்று அவர்கள் எண்ணத்தில் இடியை விழச்செய்தது. எப்போதும் தென்னாப்பிரிக்கா பங்குபெறும் நாக் அவுட் போட்டிகளில் எமனாக மழை வந்து அவர்களின் வெற்றியை பறித்துவிடும். இந்த போட்டியிலும் மழை வந்து குறிக்கிட்ட்து. ஆனால் எமனாக வந்தவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து வீரர் கிராண்ட் எலியாட். ஆம்! தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் மூலமே அன்று அந்நாட்டின் கனவு கலைக்கப்பட்டது. அந்த சோக்க் காட்சிக்கு காரணமாக அமைந்தவரும் இவர் தான்.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

D/L விதிப்படி 42 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. பிறகு இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவை. ஸ்டெயின் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் எலியாட். நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் எலியாட்டை நோக்கி வர, கேமரா அந்த வீரரின் பக்கம் திரும்பியது. அவர் கண்களில் நீர் வழியும் காட்சியை பார்த்ததும் மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சும் பிதுங்கியது. சக வீரர்கள் ஒவ்வொருவரையும் கண்ணில் நீரோடு அவர் தேற்றும் காட்சியை இன்று நினைத்தாலும் நம் கண்களிலும் நீர் ததும்பும். தன்னுடைய சுயசரிதையில் “ என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம்” என அந்த நிமிடங்களை விவரித்து கடந்துச்சென்றார் அந்த மாவீரன் டி வில்லியர்ஸ்.

அவுட்- நாட் அவுட்……..நாட் அவுட்- அவுட்!

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய ஆட்டத்தின் போது ஜேம்ஸ் டெய்லருக்கு LBW முறைப்படி அவுட் தரப்பட்டது. அதே நேரத்தில் சிங்கில் எடுக்க முயன்ற போது ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் அவுட் செய்யப்பட்டார். டெய்லர் lbw-க்கு ரிவ்யூ கேட்க அது நாட்-அவுட்டாக அமைந்தது. இருந்தும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரன் அவுட்டை கணக்கில் கொண்டார்கள் நடுவர்கள்.ஐ.சி.சி விதியின் படி lbw விதி மாற்றியமைக்கும் போது ரன் அவுட் செய்யப்பட்டால் அந்த பாலை ‘டெட் பால்’ என அறிவிக்க வேண்டும். ஆனால் அன்று ஆண்டர்சனுக்கு அவுட் வழங்கப்பட்டது. இந்த தவறுக்காக ஐ.சி.சி பின்பு மன்னிப்பு கேட்டது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இந்தியா – வங்கதேசம் இடையேயான காலிறுதி போட்டியில் 40-வது ஓவரில் ரோஹித் ஷர்மா, ரூபல் ஹுசைன் போட்ட ஃபுல் டாஸ் பந்தை அடித்து கேட்ச்சானார். ஆனால் ஸ்கொயர் லெக் அம்பயர் அதை இடுப்புக்கு மேல் வீசப்பட்டதாக எண்ணி நோ- பால் என உடனே அறிவித்தார். ரீப்ளேவில் பந்து இடுப்புக்கு கீழ் தான் சென்றது என தெரியவந்தது. அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டிருந்தால் வங்கதேசம் வெற்றிப்பெற்றிருக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் கடித்துக்கொண்டார்கள். இந்த நிகழ்வும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நான்கு சதங்கள்……இரட்டைச் சதங்கள்

இந்த தொடரில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். லீக் சுற்றில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து என தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் சதமடித்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்த நான்கு சதங்கள் அடித்த வீரர் மற்றும் ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்ரானார்.

சங்கக்காரா
சங்கக்காரா

அதுமட்டுமில்லாமல் முதல் இரட்டைச் சதம் அடித்ததும் இந்த உலகக் கோப்பையில் தான். கெயில் ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் இரட்டைச் சதமும் அதைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அடித்த 237 ரன்கள் உலகக் கோப்பையில் தனி மனிதன் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.

இந்த தொடரில் அரையிறுதி போட்டியைத் தவிர எல்லா போட்டிகளிலும் இந்தியா எதிரணியை ஆல்-அவுட் செய்த்து என்பது குறிப்பிடத்தக்கது