Published:Updated:

`இந்தியாவை ஜெயிச்சுடுவோம்னு மட்டும் நினைச்சுடாதீங்க!' - அக்தரை உசுப்பேற்றிய சேவாக்

பிரேம் குமார் எஸ்.கே.

அக்தர் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்காற்றும் என்றார். அதாவது டாஸ் வெல்லும் அணிக்குச் கூடுதல் சாதகம் இருக்கும் என்றார்.

சேவாக்
சேவாக்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அணிகள் விளையாடுவதை விட மழை தான் அதிகம் ஆடுகிறது என விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. எந்தப் போட்டி தடை பெற்றாலும் பரவாயில்லை, ஆனால் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி மட்டும் தடை பெற்றுவிடக் கூடாது என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டிக்கொள்கிறார்கள்.

உலகக் கோப்பை
உலகக் கோப்பை

இந்தத் தொடரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இந்தத் போட்டி குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று ஒரு விவாதம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தரின் யூ டியூப் பக்கத்திலும் நடைபெற்றது.

இந்த போட்டி குறித்தும் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை அப்போது அக்தருடன் கலந்துரையாடினார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக். அப்போது அக்தர், போட்டி எந்த அணிக்குச் சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை சேவாக்கிடம் கேட்டார்.

அக்தர் -சேவாக்
அக்தர் -சேவாக்

``அதற்கு சேவாக் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் எந்த விதத்திலும் பாகிஸ்தானால் இந்தியாவை வெற்றி கொள்ள முடியாது” என்றார் தனது வழக்கமான அதிரடியான பாணியில். ஆனால் அக்தர் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்காற்றும் என்றார். அதாவது டாஸ் வெல்லும் அணிக்குச் கூடுதல் சாதகம் இருக்கும் என்றார். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றுவிட்டால், நிச்சயம் பாகிஸ்தான் வெற்றி பெறும்” என்றார்.

மேலும் இந்தத் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளில் ஒரு அணி கோப்பை கைப்பற்றும் என அக்தர் கணித்திருக்கிறார். இந்த யூ டியூப் வீடியோ இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் செம வைரல்.

அக்தர்
அக்தர்

இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் மற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று 4 -வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இடு போட்டி மழையால் கைவிடப்பட மற்றப் போட்டிகளில் 2 தோல்வி ஒரு வெற்றி என புள்ளிப் பட்டியலில் தற்போது 8 வது இடத்தில் இருக்கிறது.