Published:Updated:

ஷதாப் கான் - பாகிஸ்தானின் மிடில் ஓவர் ஆயுதம்! #PlayerBio

ஷதாப் கான்
News
ஷதாப் கான்

சுழலுக்கு சாதாகமற்ற பிட்ச்களிலும் இவரிடம் உள்ள லெக் ப்ரேக், கூக்ளி, பந்தை தாமதமாக ரிலீஸ் செய்வது என வேரியேஷன்ஸ் மூலம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைப்பார்.

பெயர் : ஷதாப் கான்
பிறந்த தேதி : 4-10-1998
ஊர் :மியன்வாலி, பாகிஸ்தான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரோல் : பெளலிங் ஆல்ரவுண்டர்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
பெளலிங் ஸ்டைல் : லெக் ப்ரேக்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 26-3-2017

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ப்ளேயிங் ஸ்டைல்

ஷதாப் கான், பாகிஸ்தான் அணியின் தற்போதைய துருப்புச்சீட்டு வீரர். லெக் ஸ்பின்னர் என்ற ஒரு காரணமே போதும். சுழலுக்கு சாதாகமற்ற பிட்ச்களிலும் இவரிடம் உள்ள லெக் ப்ரேக், கூக்ளி, பந்தைத் தாமதமாக ரிலீஸ் செய்வது என வேரியேஷன்கள் மூலம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைப்பார். இவர் விக்கெட் எடுக்காமல் போன போட்டிகள் குறைவுதான். எப்படியும் விக்கெட் எடுத்துவிடுவார். விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் இவர் கில்லாடி.

ஷடாப் கான்
ஷடாப் கான்

ஒருநாள் போட்டிகளில் 5–க்கு குறைவாகவே எகானாமி வைத்துள்ளார். பெளலிங் மட்டும் இல்லாமல் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். கீழ் வரிசையில் வந்து ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்கும் ஆற்றல் இவரிடம் உள்ளது. ஃபிட்னஸ் அவரின் மிகப்பெரிய பலம். பாகிஸ்தான் வீரர்களிடம் காணமுடியாத ஒரு விஷயம், இவரிடம் உண்டு. துடிப்பான ஃபீல்டிங்! பேட்டிங்,பெளலிங் ஃபீல்டிங் என அனைத்து பாக்ஸ்களிலும் டிக் செய்யும் 20 வயதே ஆன இந்த சென்சேஷனை ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் என்றே கூறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்

12 வயதில் பள்ளி அணிக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஷதாப் கான், அப்போதே கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்கத் தொடங்கினார். லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் முன்னாள் வீரர்களிடம் பெற்ற பயிற்சி, அவரது வளர்ச்சிக்கு வித்தட்டது. 2016-ல் லிஸ்ட் A போட்டிகளில் இஸ்லமாபாத் அணிக்காக களமிறங்கி, அதே ஆண்டில் தேசிய டி20 கோப்பை தொடரில் ராவல்பண்டி அணிக்காக விளையாடினார்.

யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காத அந்த வாய்ப்பு ஷதாப் கானுக்கு சீக்கிரமே கிடைத்தது. ஆம், பாகிஸ்தான் தேர்வு குழுவிலிருந்து அந்த அழைப்பு வந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தார்.

ஷதாப் கான் - பாகிஸ்தானின் மிடில் ஓவர் ஆயுதம்!  #PlayerBio

முதல் போட்டியிலேயே நான்கு ஓவர் போட்டு சிறந்த எகானாமிக்கல் பெளலர் என்ற பெயரைப் பெற்றார். ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். 2017 சாம்பியண்ஸ் டிராபி தொடரில் இடம்பெற்று ,அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தார்.

அஃப்ரிடிக்கு பிறகு பாகிஸ்தான் எதிர்பார்த்த தரமான லெக் ஸ்பின்னர் கிடைத்துவிட்டதாக நம்பினர் பாகிஸ்தான் ரசிகர்கள். கடந்த ஓராண்டாக சிறப்பாகச் செயல்பட்டு 19 வயதிலேயே டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகைப்போட்டிகளிலும் இடம்பெற்றுவிட்டார்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன் அறிமுக டி20 போட்டியில் ஷதாப் கான் போட்டது வேற லெவல் பெளலிங். நான்கு ஓவர்கள் வீசி, வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து (எகனாமி 1.75) மூன்று விக்கெட்டையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அறிமுக டி20 போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி குறைவான எகனாமி வைத்துள்ள வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

ஷதாப் வேகமானவர். அவர் பந்தைக் கணித்து விளையாடுவது சிரமம். நல்ல பேட்ஸ்மேன்; நல்ல ஃபீல்டர். ஷதாப், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரம்!
டேனியல் வெட்டோரி

2017- இலங்கைக்கு எதிரான போட்டியில் 101-6 என இக்கட்டான நிலையில் இருந்தது பாகிஸ்தான். இந்தமுறை 52 ரன்கள் அடித்து, அணியைச் சரிவில் இருந்து மீட்க உதவினார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் அந்தப் போட்டியில் பெளலிங்கிலும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். தான் ஒரு தேர்ந்த ஸ்பின்னர் மட்டுமல்ல, பேட்டிங்கும் ஆடத் தெரியும் என நிரூபித்தார். அந்தப் போட்டியின் ஆட்ட நாயகனும் அவரே.

ஷதாப் கான் ஸ்பெஷல்

டி20 அறிமுக போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி குறைந்த எகனாமி வைத்திருக்கும் பெளலர்.
ரோல் மாடல் : ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வார்னே
2017 –ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் வழங்கப்படும், சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றார்.