Published:Updated:

`இவர்கள் இருவரையும் ப்ளேயிங் லெவனில் சேர்க்கலாம்!’ - சச்சின் சொல்லும் காரணம்

ஜடேஜா மற்றும் ஷமியை நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தேர்வு செய்யலாம் எனச் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சின்
சச்சின்

உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் முன்னேறியுள்ளன. நாளை மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில், இந்தியாவுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.11-ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அரையிறுதியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதனால் இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஜடேஜா
ஜடேஜா

இந்த அரையிறுதிப் போட்டியின் ப்ளேயிங் லெவனில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சச்சின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சச்சின்,``ஜடேஜாவை தேர்வு செய்யலாம் என்பதை தேர்வுக்குழுவுக்கு நான் பரிந்துரைப்பேன். தினேஷ் கார்த்திக் 7வது இடத்தில் பேட்டிங் செய்வதற்காக எடுக்கப்பட்டால், அந்த இடத்தில் ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம். அவரது இடதுகை சுழற்பந்துவீச்சு அணிக்கு பலம் சேர்க்கும். அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் சரியாக 5 பௌலர்களுடன் களமிறங்கக் கூடாது. ஒரு பௌலிங் ஆப்சன் கூடுதலாகத் தேவை.

ஷமி
ஷமி

எனவே, ஜடேஜாவை அணியில் எடுக்க வேண்டும். அதேபோல அணியில் ஷமியை மீண்டும் கொண்டு வர வேண்டும். காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினால் விக்கெட்டுகளை வீழ்த்த சரியான தேர்வாக இருக்கும். அதனால் அவரையும் ப்ளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.