Published:Updated:

`ஓய்வு குறித்து தோனிதான் முடிவு செய்ய வேண்டும்!'- சச்சின்

கலிலுல்லா.ச

``எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தோனிதான் முடிவு செய்யவேண்டும்; அவரது முடிவில் யாரும் தலையிடக்கூடாது''

சச்சின்
சச்சின்

உலகக் கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நுழைந்தன. அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழைகாரணமாக போட்டி நிறுத்தப்பட்டது

யூகங்களை தவிர்த்துவிட்டு, தோனி இந்திய அணிக்கு ஆற்றிய பங்கை நாம் அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்
சச்சின்
தோனி
தோனி

நேற்றும் ஆட்டம் தொடர 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை அந்த அணி எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. நேற்றைய போட்டிக்கு பின் சமூகவலைதளங்களில் `தேங்க்யூ தோனி’ என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது.

தோனியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ரசிகர்கள் அவரை பாராட்டியும், அவரது ஓய்வு குறித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ``தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம். அதில், நாம் யாரும் தலையிடக்கூடாது.

தோனி
தோனி

அவரது முடிவுக்கு மற்றவர்கள் மதிப்பு தரவேண்டும். அவருக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் அவரவர், யூகங்களை தவிர்த்துவிட்டு, தோனி இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். அணிக்கு இவ்வளவு பங்களிப்பு செய்த, அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் மக்கள் அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவார் என நம்புகின்றனர். அவர் வெளியில் இருக்கும்வரை ஆட்டம் முடிவதில்லை” என்றார். தோனியின் ஓய்வு குறித்து கோலியிடம் கேட்டபோது, ``இதுவரை அவர் ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.