Published:Updated:

`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு?' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

ராம் பிரசாத்

கோலி, ரவி சாஸ்திரி இருவரும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம்.

விராட் கோலி
விராட் கோலி ( AP )

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியையே இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை. தோனியின் ரன் அவுட் இன்னும் பலரின் கண்களை விட்டு மறையவில்லை. அரையிறுதிப்போட்டியில் மழை பெய்யாமல் இருந்து இருக்காலம். ஒரு நாள் முழுவதும் மழை பெய்து இருக்கலாம். கோலி, ராகுல் , ரோஹித் ஒற்றை இலக்கில் வெளியேறியது. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட்க்கு முன்பாக தோனியை ஆடவிட்டு இருக்கலாம். அவ்வளவு நேரம் பொறுமை காத்த ஜடேஜா போல்ட்டின் கடைசி ஓவரை விட்டு இருக்கலாம்' என ரசிகர்கள் பேசிவரும் சூழலில் இந்தி பத்திரிகை டைனிக் ஜக்ரான் இந்திய அணியில் பிளவு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா
விராட் கோலி, ரோஹித் ஷர்மா

கோலிக்கு ஆதாரவாக சிலரும், சிலர் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுடன் கலந்தோலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தனது சொல்லை கேட்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கோலி அணியில் இடம்கொடுப்பதாகவும். தனக்கு சரிபட்டு வராதவர்களை கழற்றி விடுவதாக சொல்லப்படுகிறது.

உலகக்கோப்பை அணித்தேர்வின் போது கூட துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் ஷர்மாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நான்காவது வீரருக்கான தேர்வின் போது கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ராயுடு ஆகியோர் பெயர் அடிபட்டது. ராகுல் அப்போது மோசமான ஃபார்மில் இருந்தார். ஆனால் அவர் உலகக்கோப்பை அணிக்கு அழைக்கப்பட்டார். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளராகவும் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என சங்கர் தேர்வுக்கு சில நியாயங்களை கூறி ராயுடு கழற்றிவிடப்பட்டார். தவான் வெளியேறிய பின் பன்ட் அழைக்கப்பட்டார்.

சாஹல்
சாஹல்

ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இணக்கமாக செயல்படுகின்றனர். தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.பிரசாத் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார். அவர்களுக்கு தேவையான வீரர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகின்றனர். போட்டியின் போது கோலி, ரவி சாஸ்திரி இருவரும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம். சாஹல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்கள், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தேர்வு இப்படியாகத் தான் நடக்கிறது. இந்த விவகாரம் இன்னும் பெரிய அளவுக்கு வெடிக்கவில்லை. இது ஒருநாள் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.