Published:Updated:

அபிநந்தன்... பாகிஸ்தானின் சர்ச்சை சேட்டை!

Karthikeyan KG

அபிநந்தனை வைத்து சர்ச்சை விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது பாகிஸ்தான் சானல்

#INDvPAK
#INDvPAK

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே மக்களோடு மக்களாக விளம்பர நிறுவனங்களும் கோதாவில் குதித்துவிடுகின்றன. சென்ற முறை மௌக்கா மௌக்கா என்றது ஒரு சானல். அது வைரல் ஹிட் அடிக்க, மௌக்கா மௌக்காவுக்கு வெவ்வேறு வெர்ஷன்கள் எல்லாம் வெளிவந்தது தனிக்கதை. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்பதை போர்களாக மட்டுமே காட்சிப்படுத்தும் காலமிது. இந்திய முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் அதற்கு மேலும் தூபம் போட்டு வருகிறார்கள். பாகிஸ்தானிலும் நிலைமை அதே தான்.

Virat
Virat

இரு தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருக்கும் ஒருவர் பச்சை நிறத்தில் விராட் கோலியின் ஜெர்ஸியை அணிந்து வலம் வந்தது வைரலானது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த புல்வாமா தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்றாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்த உறவின் விரிசல் இன்னும் அதிகமானது அப்போதுதான். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவமும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை வீழ்த்தியதாக சொல்லப்பட்டது.

#INDvPAK
#INDvPAK

அதில் அபிநந்தன் என்பவரை சிறைப்பிடித்தது பாகிஸ்தான். பின்பு அவரை நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியது பாகிஸ்தான்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் போட்டிகளில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. விராட் கோலியும் இந்திய அரசாங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார்.

இந்நிலையில், அபிநந்தனை வைத்து விளம்பரம் ஒன்றை தயார் செய்திருக்கிறது பாகிஸ்தான் செய்திச் சானல். அதில் அபிநந்தன் போல் தோற்றமளிக்கும் ஒருவரிடம் சில கேள்விகள் கேட்கிறார்கள். அவர் காபி குடிக்கும் கப்பை அவர் கொண்டு செல்ல, 'கப்பை விட்டுச்செல் ' என 'கோப்பை ' அரசியல் செய்திருக்கிறது அந்த விளம்பரம்.

இது தற்போது வைரல்! .

வரும் ஞாயிறன்று , இந்தியா பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யவும்.