Published:Updated:

`இது ஒன்னும் போர் கிடையாது தம்பி... அமைதியா இருங்க!' - ரசிகர்களுக்கு அக்ரமின் `நச்' அட்வைஸ்

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

சில கசப்பான சம்பவங்களின் போதுகூட இருநாட்டு எல்லைகளும் அமைதி நிலவியது. அதனால் இந்தப் போட்டியை அவ்வளவு பெரிதாக ஒன்றும் கருத வேண்டாம்.....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இதோ... இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. ஆம், நாளை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கப்போகிறது. கிரிக்கெட் என்றில்லை, எந்த ஒரு விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும். களத்துக்கு வெளியிலும் அனல் பறக்கும்.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்

வீரர்கள், ரசிகர்கள் கடந்து இரு நாட்டு மக்களிடையிலும் பெரும் பதற்றமும் எதிர்பார்ப்பும் நிலவும். சாதாரண போட்டிக்கே அப்படியென்றால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் எனில் சொல்லவே வேண்டாம். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 12 முறை நேரடியாக மோதியும் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை.

ஒவ்வொரு முறை உலகக்கோப்பை தொடர் என்று வரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒரு கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவை வெல்வோம் எனச் சவால்விட்டு பாகிஸ்தான் கிளம்பும். இந்த முறையும் அதேபோல் பாகிஸ்தான் அணி சவால்விட்டுள்ளது. இதனால் நாளைய போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துள்ளது.

Vikatan
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்
cricbuzz

இதற்கிடையே நாளைய போட்டியில் ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். அதில், ``இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பையில் பில்லியன் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடவுள்ளது. இது கிரிக்கெட்டில் பெரிய விஷயம். இந்தப் போட்டியை இருநாட்டு ரசிகர்களும் அமைதியாக ரசித்து பார்த்தால் போதுமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு அணி வெற்றி பெறும். ஒரு அணி தோற்கும். அதனால் ரசிகர்கள் இதனை போராகக் கருத வேண்டாம். நாளைய போட்டியை போர் என கருதி பார்ப்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது. சில கசப்பான சம்பவங்களின் போதுகூட இருநாட்டு எல்லைகளும் அமைதி நிலவியது. அதனால் இந்தப் போட்டியை அவ்வளவு பெரிதாக ஒன்றும் கருத வேண்டாம்.

இந்தியா
இந்தியா

இது தான் என்னுடைய கருத்து" என்று கூறியவர், இந்தியாவுடன் தான் ஆடிய உலகக்கோப்பை ஆட்டம் குறித்து பேசியவர், ``உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவுடன் ஆடிய உலகக்கோப்பை குறித்த எந்த நியாபகமும் இல்லை.

ஆனால் அந்த போட்டிகள் எல்லாம் டிவியில் ஒளிபரப்படுவதை ஆண்டு முழுவதும் பார்த்து ரசிக்கிறேன். நாளைய போட்டியும் அப்படி தான் இருக்கும். இந்தியா சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் லைன் அப் வைத்துள்ளது. இதை மறுக்க முடியாது. ஆனால் அதனை பாகிஸ்தான் அணி சமாளித்து விடும்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

போட்டியின் போது எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாளுகிறதோ அந்த அணி நிச்சயம் வெற்றிபெறும். பாகிஸ்தான் அணி ஆரவாரத்தை கன்ட்ரோல் செய்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. இரு நாட்டு ரசிகர்களுக்காவே நாளை மழை விலகி நிற்கும்'' எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு