Published:Updated:

20 ஆண்டுக்குப் பின் பழி தீர்க்க வாய்ப்பு... மேஜிக் நிகழ்த்துமா பாகிஸ்தான்?!

ஏற்ற இறக்கங்களுடன் தொடங்கிய உலகக்கோப்பை பயணம் இன்று வெற்றியோடு முடிய வேண்டும் என இரு அணி ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியின் முடிவு, பாகிஸ்தான் ரசிகர்களின் உலகக்கோப்பையை கலைத்துவிட்டது. பாகிஸ்தான் மட்டுமில்லை, வங்கப் புலிகளின் அரை இறுதி வாய்ப்பையும் பறித்தது. ஏற்ற இறக்கங்களுடன் தொடங்கிய உலகக்கோப்பை பயணம் இன்று வெற்றியோடு முடிய வேண்டும் என இரு அணி ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும், நெட் ரன் ரேட் (-0.792) குறைவாக இருப்பதால், பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு மிகக் குறைவு. மிராக்கிள் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்!

#PAKvBAN
#PAKvBAN

முதலில் பேட் செய்யும் அணிக்கு லார்ட்ஸ் சாதகமாக இருப்பதால், டாஸ் ஜெயிக்கும் அணி பேட்டிங்கையே தேர்ந்தெடுக்கும். உலகக்கோப்பையின் இரண்டாம் பாதியில் செட்டான பாகிஸ்தான், பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. ஓப்பனிங்கில் சுதாரித்து கொண்ட ஃபகர் ஜமான், இமாம் -உல்-ஹக், ஒன் டவுனில் அசத்தும் பாபர் ஆசம், மிடில் ஆர்டரில் ஹஃபீஸ், ஹாரிஸ் சோஹைல் என பேட்டிங்கில் மாற்றமிருக்காது. வஹப் ரியாஸ், முகமது அமீர், ஷாயின் ஷா அப்ரிடி வேகக் கூட்டணி விக்கெட்டுகளை எடுப்பதிலும், டெத் ஓவர்களிலும் கலக்கி வருகிறது. எல்லாம் சரிதான், ஆனால் தாமதாக எழுச்சி கண்ட பாகிஸ்தான் லீக் சுற்றுடன் முடித்து கொள்வதில் வருத்தம் இல்லாலமல் இல்லை.

Shakib al Hasan
Shakib al Hasan

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷைஃபுதின் வரை பேட்டிங்கில் அதிரடி காட்டியது வங்கதேசம். இந்த உலகக்கோப்பையில் ஷகிப் அல் ஹசனின் அசத்தலான ஃபர்பாமன்ஸ் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.இனிமேல் 'கத்துக்குட்டி' என்று அழைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடிய வங்கதேசம், கடைசி போட்டியை வெற்றியோடு முடிக்க போராடும்.

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத மஹமதுல்லா இன்றைய போட்டியில் களமிறக்கப்படலாம். செளமியா சர்க்கார், முஷ்ஃபிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், முஸ்தாஃபிசுர், ஷைஃபுதின் என அதே அணியுடன் வங்கதேசம் களமிறங்கும்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதியுள்ள 36 போட்டிகளில், 31 வெற்றிகளுடன் பாகிஸ்தானின் கை ஓங்கியுள்ளது. வங்கதேச அணி, 5 முறை மட்டுமே பாகிஸ்தானை வென்றுள்ளது. 2015 உலகக்கோப்பைக்கு பிறகு நடந்த போட்டிகளில்தான், வங்கதேசத்தின் இந்த 5 வெற்றிகளும் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

#PAKvBAN
#PAKvBAN

உலகக்கோப்பையை பொறுத்தவரை, ஒரு முறைதான் இரு அணிகளும் மோதியுள்ளன. 1999 உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 229 ரன்கள் எடுத்தது. சயித் அன்வர், ஷாகித் அஃப்ரிடி, இன்சமாம் - உல் - ஹக், வாசிம் அக்ரம், வக்கர் யூனிஸ், சோயப் அக்தர் இருந்த அதிரடியான பாகிஸ்தான் அணி இப்போட்டியை வென்றுவிடும் என்று எதிர்பார்த்தபோது, இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி அசத்தியது. கலேத் மஹமுத் மூன்று விக்கெட்டுகள் எடுக்க, மற்ற பெளலர்களும் பந்துவீச்சில் கலக்க, 161 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது பாகிஸ்தான். சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இன்று மோத உள்ளன.

1999 தோல்விக்குப் பழித்தீர்க்க பாகிஸ்தானும், சீனியர்களின் ரெக்கார்டை தக்கவைக்க வங்கதேசமும் முனைப்பு காட்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ளேயிங் லெவன்

வங்கதேசம் (உத்தேசம்)

மஷரஃப் மொர்டசா (கேப்டன்), தமீம் இக்பால், செளமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், மொசடெக் ஹூசெயின், முகமது ஷைஃபுதின், ருபெல் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹமான், மஹமதுல்லா / ஷபிர் ரகுமான்

பாகிஸ்தான் (உத்தேசம்)

சர்ஃபராஸ் அகமது (கேப்டன்), இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம், ஹாரிஸ் சொஹைல், முகமது ஹஃபீஸ், இமாம் வாசிம், ஷதாப் கான், வஹப் ரியாஸ், முகமது ஆமீர், ஷாயின் ஷா அப்ரிடி

இதுவரை

வங்கதேசம்

vs தென்னாப்ரிக்கா - 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 106 வித்தியாசத்தில் தோல்வி

vs இலங்கை - மழையால் போட்டி ரத்து

vs வெஸ்ட் இண்டீஸ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs ஆப்கானிஸ்தான் - 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

பாகிஸ்தான்

vs வெஸ்ட் இண்டீஸ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியா - 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இந்தியா - 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs தென்னாப்ரிக்கா - 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு