Published:Updated:

மீண்டும் நியூசிலாந்து... மீண்டும் நாக் அவுட்? முடிவை மாற்றுமா தென்னாப்பிரிக்கா? #NZvSA

முதல் வெற்றியை அடுத்து நியூசிலாந்தை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்கா, அரை இறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்த போட்டியில் வெற்றி அவசியம். #NZvSA

#NZvSA
#NZvSA

2015 உலகக் கோப்பையில் பெஸ்ட் மேட்ச்சை கொடுத்த தென்னாப்பிரிக்கா – நியூஸிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த உலகக்கோப்பையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த தென்னாப்ரிக்கா அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டது. முதல் வெற்றியை அடுத்து நியூசிலாந்தை எதிர்கொள்ளும் தென்னாப்ரிக்கா, அரை இறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டியது அவசியம். நியூசிலாந்த்தைப் பொறுத்தவரை நான்கில் மூன்று போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்தானது.

#NZvSA
#NZvSA

சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான வரலாறு தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருந்தாலும், உலகக்கோப்பை போட்டிகளில் நியூசிலாந்தே ஆதிக்கம் செலுத்திவருகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளின் பர்ஃபாமன்ஸை வைத்து கணக்கிட்டால், நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு தென்னாப்ரிக்கா முற்றுப்புள்ளி வைக்குமா என்பது சந்தேகமே!

நியூசிலாந்து
நியூசிலாந்து

+2.163 ரன் ரேட் உடன் அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருக்கும் நியூசிலாந்து, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியிலும் அதிக ரன் / விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்து வரும் போட்டிகளின் முடிவால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

காயத்தில் இருந்து குணமாகியிருக்கும் தென்னாப்ரிக்கா வேகப்பந்துவீச்சாளர் லுங்கி எங்கிடி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படலாம். இம்ரான் தாஹிர், ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ் ஆகியோரின் பந்துவீச்சு தென்னாப்ரிக்காவுக்கு ஆறுதல்.

தென்னாப்ரிக்கா
தென்னாப்ரிக்கா

பேட்டிங்கை பொறுத்தவரை தென்னாப்ரிக்க வீரர்கள் இன்னும் அதிரடியில் இறங்கவில்லை. இந்த உலகக்கோப்பையில் பவர்பிளேவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழக்கும் தென்னாப்ரிக்கா அணி, சுதாரித்து கொண்டால் மட்டுமே 250+ ஸ்கோரை எட்ட முடியும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கும் தென்னாப்ரிக்கா, வெற்றிகளைத் தொடர போராடும்.

நேருக்கு நேர்

#NZvSA
#NZvSA

இதுவரை 70 ஒரு நாள் போட்டிகளில் தென்னாப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா 41 போட்டிகளிலும், நியூசிலாந்து 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவு இல்லை. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தென்னாப்ரிக்காவும், உலகக்கோப்பையில் நியூசிலாந்தும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் 7 முறை மோதியுள்ளன. நியூசிலாந்து 5 முறையும், தென்னாப்ரிக்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதிய 2015 அரை இறுதி போட்டியில், (D/L முறைப்படி) 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

#NZvSA
#NZvSA

ப்ளேயிங் லெவன்

தென்னாப்ரிக்கா (உத்தேசம்)

டு ப்ளெஸ்ஸி (கேப்டன்), டி காக், ஹிஷிம் ஆம்லா, மார்க்ரம், வான் டெர் டுசன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், கசிகோ ரபாடா, ஃபெலுக்வாயோ, இம்ரான் தாஹிர், லுங்கி எங்கிடி

நியூசிலாந்து (உத்தேசம்)

கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, மார்டின் குப்தில், ராஸ் டெய்லர், டாம் ஹாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரந்தோம், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

இதுவரை

நியூசிலாந்து

vs இலங்கை - 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - மழையால் போட்டி ரத்து

தென்னாப்ரிக்கா

vs இங்கிலாந்து - 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இந்தியா - 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs வெஸ்ட் இண்டீஸ் - மழையால் போட்டி ரத்து

vs ஆப்கானிஸ்தான் - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி