Published:Updated:

99.99 சதவீதம் உறுதி... நியூஸிலாந்துதான் ஜெயிக்கும்! #WorldCup2019

99.99 சதவீதம் உறுதி... நியூஸிலாந்துதான் ஜெயிக்கும்! #WorldCup2019
99.99 சதவீதம் உறுதி... நியூஸிலாந்துதான் ஜெயிக்கும்! #WorldCup2019

நியூசிலாந்துக்கு இதைவிட எளிதாக உலகக் கோப்பை தொடங்க வாய்ப்பில்லை. நம் ஊர் விளம்பரங்களில் வருவதுபோல் 99.99 சதவிகிதம் அவர்கள்தான் வெல்வார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

போட்டி எண் : 3

நியூஸிலாந்து – இலங்கை

நேரம்: மாலை 3 மணி

இடம்: கார்டிஃப்

2019 உலகக் கோப்பை
2019 உலகக் கோப்பை

2015 உலகக் கோப்பை ரன்னர் அப் நியூஸிலாந்து, இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கப் போகிறது. ஏனெனில், எதிர்த்து ஆடப் போகும் இலங்கை அணியின் சமீபத்திய சாதனைகள் அப்படி. 1996-ல் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியின் ரேங்கிங் 9. இணையத்தில் தேடாமல் இலங்கையின் பிளேயிங் லெவனை சொல்பவனுக்கு கிரிக்கெட்டில் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. பயிற்சிப் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது நியூஸிலாந்து. ஆனால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு பயிற்சிப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது இலங்கை. இதே ஃபார்ம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி நடக்கும் கார்டிஃப் மைதானம் பேட்டிங்குக்குச் சாதகம். இங்கு நடந்த இரு பயிற்சிப் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிகள் அநாயசமாக 340 ரன்களை நெருங்கியது. (தென்னாப்பிரிக்கா 338, இந்தியா 359) முடிவில் வெற்றியும் பெற்றது. இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே நினைக்கும்.

மேட்ச் ப்ரிவியூ
மேட்ச் ப்ரிவியூ

2015 உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரர் மார்ட்டின் கப்டில் (547 ரன்), கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் என சீனியர் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் டிபார்ட்மென்ட்டுக்கு சார்ஜ் எடுத்துக்கொள்வார்கள். அதிலும் டெய்லர் கடந்த 18 மாதங்களில் 80+ சராசரி வைத்திருக்கிறார். பெளலிங்கைப் பொறுத்தவரைபயிற்சிப் போட்டியில் இந்திய டாப் ஆர்டரின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய டிரென்ட் போல்ட்டை இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

இலங்கை கேப்டன் கருணரத்னே, திரிமன்னே உடன் மேத்யூஸ் வார்ம் அப் போட்டிகளில் அரைசதம் அடித்திருப்பது அவர்களுக்கு ப்ளஸ். அதே ஃபார்மைத் தொடரவில்லை எனில் போல்ட் – செளதி கூட்டணி தங்கள் வேலையைக் காட்டிவிடும். லசித் மலிங்கா இன்னும் முழு அளவில் தயாராகவில்லை. ஆனால், ஐ.பி.எல் போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்த அனுபவத்தை உலகக் கோப்பையிலும் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். அவருடன் நுவன் பிரதீப், சுரங்கா லக்மல் வேகப்பந்து கூட்டணி கைகொடுக்கும் என நம்பலாம்.

இரு அணிகளும் இதுவரை..!
இரு அணிகளும் இதுவரை..!

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் மோதிய சர்வதேசப் போட்டிகளில் இலங்கையின் கையே ஓங்கியிருக்கிறது. 98 போட்டிகளில் இலங்கை 48, நியூஸிலாந்து 41 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி டை. எட்டு போட்டிகளில் முடிவு இல்லை. உலகக் கோப்பையிலும் இலங்கையே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பத்து போட்டிகளில் ஆறில் இலங்கையும், நான்கில் நியூஸிலாந்தும் வென்றுள்ளன. கார்டிஃப் மைதானத்தில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ரெக்கார்டுகள் இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும், சமீபத்திய ஃபார்ம் அவர்களுக்கு மைனஸ் என்பதால், நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

உலகக் கோப்பையில் இதற்கு முன்..!
உலகக் கோப்பையில் இதற்கு முன்..!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் காயம் காரணமாக பயிற்சிப் போட்டியில் ஆடவி்ல்லை. ஒருவேளை அவர் முதல் போட்டிக்கு முழு அளவில் தயாராகவில்லை என்றாலும் நியூஸிலாந்துக்குப் பிரச்னையில்லை. ஏனெனில், பேக் அப் விக்கெட் கீப்பர் பிளெண்டில், பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து ஃபார்மில் இருக்கிறார்.

நியூஸிலாந்து: கப்டில், நிகோல்ஸ், வில்லியம்சன், டெய்லர், லாதம்/பிளெண்டில், நீஷம், கிராந்தோம், சான்ட்னர், டிரென்ட் போல்ட், டிம் செளதி, பெர்குசன்

இலங்கை: கருணரத்னே, குசல் பெரேரா, திரிமன்னே, மேத்யூஸ், குசல் மெண்டிஸ், அவிஸ்கா பெர்ணான்டோ/ஜெஃப்ரி வாண்டர்சே, திசாரா பெரேரா, தனஞ்செயா டி சில்வா, மலிங்கா, நுவான் பிரதீப், சுரங்கா லக்மல்.முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட்

இலங்கை: கருணாரத்னே, மேத்யூஸ், மலிங்கா

வெற்றி வாய்ப்பு : நியூசிலாந்துக்கு இதைவிட எளிதாக உலகக் கோப்பை தொடங்க வாய்ப்பில்லை. நம் ஊர் விளம்பரங்களில் வருவதுபோல் 99.99 சதவிகிதம் அவர்கள்தான் வெல்வார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால் 350+ உறுதி. 400 ரன்களைக்கூட எதிர்பார்க்கலாம்

அடுத்த கட்டுரைக்கு