Published:Updated:

வார்னரின் ஷாட்டில் காயமடைந்த இங்கிலாந்து பௌலர்! - வலைப்பயிற்சியில் சோகம்

ராம் பிரசாத்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டின் போது ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹூக்ஸ் தலையில் பந்துதாக்கியதில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைப்பயிற்சியில் காயமடைந்த வீரர்
வலைப்பயிற்சியில் காயமடைந்த வீரர்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்தப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா வீரர்கள்
ஆஸ்திரேலியா வீரர்கள்

அதேபோல் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று டேவிட் வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்குதலில் ஜெய் கிஷான் என்ற வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதன் காரணமாக வார்னர் சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபடாமல் அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வலைப்பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து, ஜெய் கிஷான் தலையில் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் நிலைக்குலைந்துப்போனவர் மைதானத்திலே சுருண்டுவிழந்தார். இதனைக்கண்ட வார்னர் உடனடியாக அவர் அருகே சென்று கண்கலங்கிய படி அமர்ந்தார்.

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019

அந்த வீரரை மைதானத்தை விட்டு ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் வார்னர் சற்று மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிகிறது.

வார்னர்
வார்னர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டின் போது ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹூக்ஸ் தலையில் பந்துதாக்கியதில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பிலிப் ஹூக்ஸ் வார்னரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் வார்னர் கண்கலங்க காரணமாக அமைந்தது. வலைபயிற்சியில் பந்துதாக்கிய வீரரின் நிலைக்குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் விரைவில் நலம்பெற்று திரும்புவார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பந்து தாக்கியதில் காயமடைந்த ஜெய் கிஷான் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது உறவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பந்துதாக்கியதில் கிஷானுக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். 48 மணி நேரத்தில் வீடு திரும்புவார் என அந்தப்பதிவில் கூறியுள்ளார்.