Published:Updated:

ஸ்டீவ் ஸ்மித்துக்கு விராட் கோலி செய்ததை இயான் மார்கன் செய்யமாட்டார்! #ENGvAUS

மார்கன் ( AP )

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆட்டத்தில் ரசிகர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதனை தன்னால் தடுக்க முடியாது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:

ஸ்டீவ் ஸ்மித்துக்கு விராட் கோலி செய்ததை இயான் மார்கன் செய்யமாட்டார்! #ENGvAUS

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆட்டத்தில் ரசிகர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதனை தன்னால் தடுக்க முடியாது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

மார்கன் ( AP )

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கேப்டன்கள்
உலகக் கோப்பை கேப்டன்கள்

உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிகள் அரையிறுதியில் தங்களின் இடத்தை உறுதி செய்யும் பொருட்டு தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள். அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் அணிகள் எப்படியாவது கடும் சவால் அளித்து டாப் 4 -க்குள் நுழைய முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்படியோ அப்படி அங்கு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம். இந்த மோதல் களத்துக்குள் மட்டுமல்லாது களத்துக்கு வெளியேயும் நீடிக்கும். இருநாட்டு ரசிகர்களும் அதிக எமோஷனுடன் இந்தப் போட்டிகளை எதிர்கொள்வார்கள்.

ரசிகர்கள்
ரசிகர்கள்
AP

இவ்விரண்டு அணிகள் மோதும் உலகப் புகழ் பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் போது வீரர்கள் எல்லைக் கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்யத் தயங்குவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களில் வசைபாடல் இருக்கும். பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் ஸ்மித் தங்களின் தடை காலம் முடிந்து அணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து சந்திக்கும் பிரச்னை என்பது மன ரீதியாக பாதிக்கக் கூடியது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை `சீட்டர்’ என்னும் வார்த்தையால் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருந்தனர். அப்போது இந்திய கேப்டன் கோலி ரசிகர்களுடன் அதனை நிறுத்துமாறு தெரிவித்தார். எங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தக் கைதட்டல் போதும் என்பது போல் சைகை செய்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்மித் களத்திலேயே கோலிக்கு நன்றி தெரிவித்ததும் நடந்தது.

கோலி
கோலி
AP

ஆனால் இன்று நடக்கும் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆட்டத்தில் ரசிகர்கள் அவ்வாறு ஸ்லெட்ஜிங் செய்தால் அதனை தன்னால் தடுக்க முடியாது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்கன், ``விளையாட்டு எப்போதுமே அழகானது. அது பல இடங்களில் இருக்கும் மக்களை ஒன்றாக இணைக்கிறது. ரசிகர்கள் போட்டியை காண அதிக பணம் செலவழித்து வருகிறார்கள். அப்படி வரும் ரசிகர்கள் வெவ்வேறு மாதிரி இருப்பார்கள். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரசிகர்கள் வெவ்வேறு விதமாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.

செய்தியாளர் சந்திப்பில் மர்கன்
செய்தியாளர் சந்திப்பில் மர்கன்
AP

மேலும் மைதானத்தில் இரண்டு அணிகளை ஊக்கப்படுத்தும் ரசிகர்களையும் பார்க்கலாம். விளையாட்டு ரசிகர்கள் எப்படி எதிர்வினை செய்வாய்கள் என்று கணிக்க முடியாது. தவறு செய்த இருவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தண்டனை முடிந்து அணிக்குத் திரும்புகிறார்கள் என்றால் கிரிக்கெட் சமூகம் அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று இல்லை. கொஞ்சம் நேரம் ஆகும்” என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர், இந்த விவகாரம் தொடர்பாக பேசும்போது, ஸ்மித் மற்றும் வார்னர் ஏற்கெனவே போதுமான அளவுக்குத் தண்டனையை அனுபவித்துவிட்டனர். அவர்கள் இங்கு விளையாட வந்துள்ளார்கள் என்றார். ஆனால் இங்கிலாந்து வீரர் ஜானி பயர்ஸ்டோ, ஆஸ்திரேலியா இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.

மார்கன்
மார்கன்
AP

அவர், ``ஆஸ்திரேலிய வீரர்களிடம் எளிமையாக நடக்கச் சொல்கிறார்கள். ஆனால் முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லேஹ்மேன், முன்னர் நடைபெற்ற தொடரின்போது இங்கிலாந்து அணியின் பிராட் -க்கு எதிராக ரசிகர்களைத் தூண்டிவிட்டார்” என்றார். இது தொடர்பாக மார்கனிடம் கேட்டபோது, ``அவர் சொன்னதை நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு கட்டமும் வேறுவேறு. ஒவ்வொரு அணியும வேறு வேறு. மேலும் அது குறித்து நான் அறியவில்லை” என்றார்.

மார்கனின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ``ரசிகர்கள் கிரிக்கெட்டை தான் பார்க்க வேண்டும். அனைவரும் ஒரு கட்டத்தில் தவறு செய்பவர்கள் தான். அதற்காகக் காலம் முழுவதும் அவர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் மார்கன்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

ஸ்மித் - வார்னர்
ஸ்மித் - வார்னர்

ரசிகர்களின் ரியாக்‌ஷனை களத்தில் இருக்கும் வீரர்களால் கட்டுப்படுத்த முடியும். இந்திய கேப்டன் கோலி, பாகிஸ்தான் கேப்டன் ஸர்ஃப்ராஸ் என பலர் இதனைச் செய்துள்ளனர். ஆனால் ரசிகர்களின் உணர்வுக்கும் அணிக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் உள்ள மார்கனின் பேச்சு என்பது தவறானது. எப்படியோ இன்று இன்று நடக்கும் போட்டி, மழைக்கு மத்தியில் அனலாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிஜம்!