Published:Updated:

``அதை `லக்’ என்றுதான் சொல்ல வேண்டும்..!” - தோனி ரன்அவுட் நிமிடங்களை விவரிக்கும் கப்தில்

தோனி ரன்அவுட்டானபோது, 30 யார்டுக்கு வெளியே 6 வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக குற்றசாட்டு எழுந்தது.

தோனி
தோனி ( AP )

உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, பாயின்ட் டேபிளில் டாப்பாக இருந்து, அரையிறுதிக்கும் நுழைந்தது இந்திய அணி. அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. யாரும் எதிர்பார்க்காத இந்தத் தோல்வியால் ஏற்பட்ட சோகத்திலிருந்து வீரர்கள் இன்னும் மீளவில்லை.

தோனி
தோனி
AP

இந்திய அணி பேட்டிங்கின்போது, 48 -வது ஓவரில் ஃபெர்குசன் வீசிய பந்தில் தோனியை குப்தில் ரன் அவுட் செய்தார். இந்த ரன் அவுட்டே தோல்விக்கு காரணமாக அமைந்தது. தோனியின் அவுட்டில் சர்ச்சைகளும் எழுந்தன. ரன்அவுட்டானபோது, 30 யார்டுக்கு வெளியே 6 வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக குற்றசாட்டு எழுந்தது.

அம்பயர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார் என்று வீடியோக்கள் வைரலாகின. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், திரையில் காண்பிக்கப்பட்ட கிராஃபிக் காட்சியில்தான் தவறு என்றும் பின்னர் தெரிய வந்தது. இதற்கிடையே, தோனியை ரன் அவுட் செய்த கப்தில் அந்த மேஜிக் மொமென்ட் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில், ``அந்தப் பந்து என்னை நோக்கி வரும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

குப்தில்
குப்தில்

முடிந்தளவுக்கு அதைச் சீக்கிரம் பிடித்துவிட வேண்டும் என நினைத்தேன். பந்தைப் பிடித்து துரோ செய்யும்போது அது எப்படியும் நேராக வேறு எங்காவது செல்லும் என்றுதான் நினைத்தேன். நல்லவேளை அது டிரைக்ட் ஹிட் அடித்து அவுட்டாக மாறிவிட்டது. தோனி அவுட் ஆனது எங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இந்தியாவின் தலைவிதியை அந்த ரன் அவுட் மாற்றியது" எனக் கூறியுள்ளார்.