Published:Updated:

``பவுண்டரிகள் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா..?” - `ஐசிசி’ முன் வைக்கப்படும் கோரிக்கைகள் ! #ICCRules

ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் டையில் முடியும்போது , சூப்பர் ஓவர். சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால..? இந்த இடத்தில் இருக்கும் ஐசிசி-யின் விதிக்கு எதிராகத்தான் பல முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இப்படி ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த கிரிக்கெட் உலகம் கண்டிருக்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டம் டையில் முடிகிறது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் சூப்பர் ஓவரும் டையில் முடிகிறது.

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ்

கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ஒருபக்கம் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தாலும், பலரின் மனநிலை என்பது நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதாக இருந்தது. பலரும் வெற்றிக்கு வாழ்த்துகள் இங்கிலாந்து. ஆனால், எங்கள் இதயம் நியூசிலாந்து அணியுடன் இருக்கிறது என ட்வீட் செய்து வருகின்றனர் .

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஐசிசி விதி முறைகள் குறித்து கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. அதெப்படி அதிக பவுண்டரி கணக்கை கையில் எடுக்க முடியும்? பவுண்டரி அடிப்பது தான் கிரிக்கெட்டா. குறைந்தது கோப்பையைப் பகிர்ந்தாவது கொடுத்திருக்கலாம் எனப் பல்வேறு ரசிகர்களும் தங்களின் ஆதங்கத்தை வெள்படுத்தி வருகின்றனர்.

கோப்பையுடன் இங்கிலாந்து அணி வீரர்கள்
கோப்பையுடன் இங்கிலாந்து அணி வீரர்கள்

முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ட்விட்டரில், ``கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஐசிசி விதிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இன்னொரு சூப்பர் ஓவராவது கொடுத்திருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டக்வொர்த் - லீவிஸ் முறை என்பது ரன்கள் மற்றும் விக்கெட் இழப்பு வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், இன்னமும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை பவுண்டரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தீர்மானிக்கிறோம். இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்” என்றுள்ளார்.

கம்பீர்
கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர், ``என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது பவுண்டரிகளின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிக அபத்தமாக இருக்கிறது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ``இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

ஆனாலும், எனது இதயம் நியூசிலாந்து அணி பக்கம்தான் செல்கிறது. மிகச் சிறப்பான ஃபைனல்” என்றார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கைஃப், ``இறுதியில் பவுண்டரிதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். வாழ்த்துகள் இங்கிலாந்து . ஆனாலும், இதயம் இங்கிலாந்து அணியிடம்தான் செல்கிறது. இதிலிருந்து வெளிவர அதிக காலம் எடுக்கும்.

பவுண்டரி விதியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . தொடர்ச்சியான சூப்பர் ஓவர் இதற்கு தீர்வாகப் இருந்திருக்கலாம். ஒரு வெற்றியாளர்தான் இருக்க முடியும். எனினும், கோப்பையை பகிர்வது என்பது பவுண்டரி மூலம் தீர்மானிப்பதை விடவும் நல்ல முடிவாக இருக்கும்” என்றார்.

கிரிக்கெட்டில் இருக்கும் சில விதிகளைக் கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் !
ரோஹித் ஷர்மா

நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷம், இந்த விதியைக் சாடும் விதமாக, ``வருங்காலத்தினர் தயவு செய்து விளையாட்டைத் தேர்வு செய்யாதீர்கள். பேக்கிங் அல்லது எதுவேண்டுமானாலும் எடுங்கள். 60 வயது வரை மகிழ்ச்சியாக இருந்து செல்லுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`த்ரோ’வால் கைமாறிய கோப்பை - வருந்திய வில்லியம்சன்; மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ்!

ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ஐசிசி ரூல்ஸ் (ICC Rules) என்னும் சொல்தான் டாப்பில் இருக்கிறது. இங்கிலாந்து வெற்றியைக் குறைத்து சொல்வதற்கு இல்லை. ஆனால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக விதிமுறைகள் வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது .

``பவுண்டரிகள் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா..?” - `ஐசிசி’ முன் வைக்கப்படும் கோரிக்கைகள் ! #ICCRules

இறுதிப் போட்டி டையில் முடிந்தால், என்ன என்ன அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்வு செய்யலாம் என உங்களின் கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள் மக்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு