Published:Updated:

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?

கார்த்திகா ராஜேந்திரன்

குளறுபடியான அம்பயரிங்கால் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகள் பாதிக்கப்பட்டதைப்போல உலகக்கோப்பையில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என ரசிகர்கள் காத்திருக்க, 2019 உலகக்கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களைப் பற்றிய சிறிய அலசல்

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?
அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?

மைக்கேல் கோவ் - இங்கிலாந்து

2013-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் அம்பயராகப் பணியாற்றிவரும் மைக்கேல் கோவ், அம்பயரிங் கரியர் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் உலகக்கோப்பைக்குத் தேர்வுசெய்யப்பட்டார். 2019 உலகக்கோப்பைக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ள அவர், இன்னும் ஐசிசி-யின் எலைட் அம்பயர் பேனலுக்குத் தேர்வுசெய்யப்படவில்லை.தென் ஆப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டு கிரிக்கெட்டரான மரைஸ் எராஸ்மஸ், 2006-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துவருகிறார். 2011-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கென்யா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் அம்பயரிங் செய்ததே, எராஸ்மஸின் உலகக்கோப்பை என்ட்ரி. 2011, 2015 உலகக்கோப்பையில் பங்கேற்று, இப்போது 2019 உலகக்கோப்பையிலும் கால் பதிக்கிறார் மரைஸ் எராஸ்மஸ்.டுவர்களாகவும் 6 பேர் மேட்ச் ரெஃப்ரிகளாகவும் பணியாற்ற உள்ளனர். சைமன் டோஃபல், பில்லி பவுடன் போன்ற லெஜெண்டு அம்பயர்களை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள். ஆடுகளங்களில் விக்கெட், சிக்ஸர், பவுண்டரிகளை வித்தியாசமாக அறிவிக்கும் ஆல் டைம் ஃபேவரைட் அம்பயர் பில்லி பவுடன் உடல்நலப் பிரச்னையால் 2016-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். கடந்த 21 வருடங்களாக 200 ஒருநாள், 84 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராகப் பணியாற்றிய பில்லி பவுடனுக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நடுவர்கள் விவரம்

அலீம் தர்
பாகிஸ்தான்

2000 பிப்ரவரி 16-ம் தேதி இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டியில் அறிமுகமான அம்பயர் அலீம் தர், இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஐசிசி வழங்கும் `சிறந்த நடுவருக்கான விருதை' தொடர்ந்து மூன்று முறை வென்றுள்ள இவர், ஐசிசி அம்பயர்களின் எலைட் பேனலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாகிஸ்தானியர். 2007, 2011, 2015 ஆண்டுகளைத் தொடர்ந்து நான்காவது முறையாக உலகக்கோப்பை அம்பயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குமார் தர்மசேனா
இலங்கை
அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?

1996 உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் விளையாடியவர் குமார் தர்மசேனா. 2009-ம் ஆண்டு அம்பயராக அறிமுகமான தர்மசேனா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராகப் பணியாற்றிய இளம் இலங்கைக்காரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். இதுவரை 60 டெஸ்ட், 90 ஒரு நாள், 22 டி-20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ளார். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2015 ஃபைனலில் அம்பயரிங் செய்ததன் மூலம் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியதோடு, அம்பயரிங் பணியும் செய்த முதல் கிரிக்கெட்டர் என்ற பெயர் பெற்றார். ஐசிசி-யின் 2018 கிரிக்கெட் நடுவர்களுக்கான விருதை வென்ற அவர், 2011, 2015 ஆண்டுகளை தொடர்ந்து 2019 உலகக்கோப்பையிலும் அம்பயரிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.லாந்து அணிகள் மோதிய 2015 ஃபைனலில் அம்பயரிங் செய்ததன் மூலம் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியதோடு, அம்பயரிங் பணியும் செய்த முதல் கிரிக்கெட்டர் என்ற பெயர் பெற்றார். ஐசிசி-யின் 2018 கிரிக்கெட் நடுவர்களுக்கான விருதை வென்ற அவர், 2011, 2015 ஆண்டுகளை தொடர்ந்து 2019 உலகக்கோப்பையிலும் அம்பயரிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மரைஸ் எராஸ்மஸ்
தென் ஆப்ரிக்கா

தென் ஆப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டு கிரிக்கெட்டரான மரைஸ் எராஸ்மஸ், 2006-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துவருகிறார். 2011-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கென்யா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் அம்பயரிங் செய்ததே, எராஸ்மஸின் உலகக்கோப்பை என்ட்ரி. 2011, 2015 உலகக்கோப்பையில் பங்கேற்று, இப்போது 2019 உலகக்கோப்பையிலும் கால் பதிக்கிறார் மரைஸ் எராஸ்மஸ்.

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?
கிறிஸ் கஃபனே
நியூசிலாந்து

இதுவரை 60 ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டுமே அம்பயரிங் செய்துள்ள கிறிஸ் கஃபனே, தனது துல்லியமான அம்பயரிங்கால் 2015 உலகக்கோப்பையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே ஐசிசி-யின் எலைட் அம்பயர்களின் பட்டியலில் இடம்பிடித்த கஃபனே, 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அம்பயர்களின் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளார்.

இயன் கோல்டு
இங்கிலாந்து

2019 உலகக்கோப்பை அம்பயர்களின் சீனியரான இயன் கோல்டுக்கு வயது 61. 2007 உலகக்கோப்பையில் அறிமுகமான இயன், 2011 மொஹாலியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை அரை இறுதி போன்ற முக்கியப் போட்டிகளில் நாட்டாமையாகப் பணியாற்றியவர். 2019 உலகக்கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பயர்களில் அதிக அனுபவம்வாய்ந்த இயன் கோல்டு, இந்தத் தொடருடன் அம்பயரிங் பணிக்கு ஓய்வளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?
ரிச்சர்டு இல்லிங்வர்த்
இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான ரிச்சர்டு இல்லிங்வர்த், 2009 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துவருகிறார். 2015 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 உலகக்கோப்பையில் அம்பயரிங் செய்ய தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ரிச்சர்டு கெட்டில்பரோ
இங்கிலாந்து

58 டெஸ்ட், 78 ஒரு நாள், 22 டி-20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள ரிச்சர்டு கெட்டில்பரோ, 2015 ஃபைனலில் அம்பயரிங் செய்தவர். தொடர்ந்து துல்லியமான முடிவுகளை அளித்துவரும் கெட்டில்பரோ, 2019 அம்பயரிங் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?
நிஜல் லாங்
இங்கிலாந்து

ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் மோதிய 2019 ஐபிஎல் போட்டியில், `நோ பால்' சர்ச்சை எழுந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்துக்கு தவறுதலாக `நோ பால்' கொடுத்தார் நிஜல் லாங். பெரிய திரையில் அது நோ பால் இல்லை என்பது தெளிவாகக் காட்டப்பட்டபோதும், கோலி, அம்பயரிடம் முறையிட்டபோதும் தன்னுடைய முடிவிலிருந்து நிஜல் லாங் மாறவில்லை.

2006 முதல் 123 சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள நிஜல் லாங், 2019 உலகக்கோப்பைக்கான 16 பேர்கொண்ட நடுவர்களின் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு
ஆஸ்திரேலியா

2015 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அம்பயரிங் பட்டியலில் இணைந்திருக்கும் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு, இதுவரை 90 ஒரு நாள் போட்டிகளுக்கு அம்பயராகப் பணியாற்றியுள்ளார்.

அலீம் தர், குமார் தர்மசேனா, சுந்தரம் ரவி... கோப்பையை விரல்நுனியில் வைத்திருக்கும் அம்பயர்கள்! ஏன்?
சுந்தரம் ரவி
இந்தியா

2019 ஐபிஎல் தொடரின்போது சர்ச்சையில் சிக்கிய மற்றொரு அம்பயர் சுந்தரம் ரவி. முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்த பெங்களூரு அணி, மும்பைக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற சேஸிங்கில் போராடியது. கடைசிப் பந்தில் 7 ரன்கள் தேவை. மலிங்கா வீசிய பந்து டாட் பால் ஆக, மும்பை போட்டியை வென்றது. பிளேயர்கள் கைகுலுக்கி முடித்தபிறகு அது நோ பால் எனத் தெரியவந்தது. இந்தப் போட்டியில் களத்தில் நின்ற அம்பயர்களில் சுந்தரம் ரவியும் ஒருவர்.

ஐசிசி எலைட் அம்பயர்கள் பட்டியலில் இடம்பிடித்த இரண்டாவது இந்திய அம்பயர் சுந்தரம் ரவி. 2015 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையில் அம்பயரிங் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும், சுமாரான அம்பயரிங் வரலாற்றை வைத்துள்ளதால், உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஐசிசி எலைட் அம்பயர் பேனலிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

பால் ரேய்ஃபில்
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் பந்துவீச்சாளரான பால் ரேய்ஃபில், 2009-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துவருகிறார். 2015 உலகக் கோப்பையில் அறிமுகமான ரேய்ஃபில், நடப்பு உலகக் கோப்பையில் பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராட் டக்கர்
ஆஸ்திரேலியா

67 டெஸ்ட், 78 ஒரு நாள், 35 டி20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள ராட் டக்கர், இரண்டாவது முறையாக உலகக் கோப்பை அம்பயரிங் பேனலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜோயல் வில்சன்
வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்த 2015 உலகக் கோப்பையில் அம்பயரிங் செய்த ஜோயல் வில்சன், வெஸ்ட் இண்டீஸ் ட்ரினிடாட் டொபாகோவைச் சேர்ந்தவர். 2019 உலகக் கோப்பைக்கான அம்பயர்களின் பட்டியலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோயல் வில்சன், இதுவரை 58 சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ளார்.

மைக்கேல் கோவ்
இங்கிலாந்து

2013-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் அம்பயராகப் பணியாற்றிவரும் மைக்கேல் கோவ், அம்பயரிங் கரியர் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் உலகக்கோப்பைக்குத் தேர்வுசெய்யப்பட்டார். 2019 உலகக்கோப்பைக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ள அவர், இன்னும் ஐசிசி-யின் எலைட் அம்பயர் பேனலுக்குத் தேர்வுசெய்யப்படவில்லை.

ருச்சிரா பல்லியாகுருஜ்
இலங்கை

2015 உலகக் கோப்பை, 2016 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அம்பயரிங் செய்த அனுபவத்துடன் 2019 உலகக்கோப்பைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ருச்சிரா பல்லியாகுருஜ். இதுவரை 2 டெஸ்ட், 71 ஒரு நாள் போட்டி, 14 டி-20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ளார்.

பால் வில்சன்
ஆஸ்திரேலியா

22 பேர் கொண்ட நடுவர்கள் குழுவில், முதல்முறையாக உலகக் கோப்பையில் அம்பயரிங் செய்ய இருக்கும் ஒரே நடுவர் பால் வில்சன். இதற்கு முன்பு, 2018 U-19 உலகக் கோப்பையில் பணியாற்றிய அனுபவத்துடன் இந்த உலகக் கோப்பையில் அம்பயரிங் செய்ய இருக்கிறார் இந்த ஆஸ்திரேலியா அம்பயர்.

மேட்ச் ரெஃப்ரீ

ஐசிசி தேர்ந்தெடுக்கும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக்கொண்ட குழுவே, எலைட் மேட்ச் ரெஃப்ரீ பேனலில் இடம்பெற்றிருப்பர். ஒரு போட்டியில் பங்கேற்கும் இரண்டு கள நடுவர்களின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் இந்த மேட்ச் ரெஃப்ரீஸ், டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பணியாற்றுவர்.

இங்கிலாந்தின் கிறிஸ் ப்ராட், ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன், ஜிம்பாவேவின் ஆண்டி பைகிராப்ஃட், நியூசிலாந்தின் ஜெஃப் கிரோவ், இலங்கையின் ரஞ்சன் மடுகாலே, வெஸ்ட் இண்டீஸின் ரிச்சி ரிச்சார்ட்சன் ஆகியோர் இந்த பேனலில் இடம்பிடித்துள்ளனர்.

கார்த்திகா ராஜேந்திரன்