Published:Updated:

`வாழ்த்துங்கள் மக்களே!' கோலிக்கு, அவர் படித்த பள்ளி அனுப்பும் ஸ்பெஷல் கிஃப்ட்

கலிலுல்லா.ச

விராட் கோலி உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதற்காக அவர் படித்த பள்ளி நிர்வாகம் லண்டனுக்கு அனுப்பும் பரிசு என்ன தெரியுமா?

விராட் கோலி
விராட் கோலி

உலகக் கோப்பையை தட்டிச்செல்வாரா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 2011-ம் ஆண்டு தோனி உலக கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். இம்முறை அதே சாதனையை கோலி செய்வாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அணியில் தோனி இருப்பது, விராட் கோலிக்கு பலம் என்றும் ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி
விராட் கோலி
"விராட் கோலி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட பள்ளியின் மண், அவரை ஆசீர்வதிக்கும் வகையில் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது."
பள்ளி நிர்வாகம்

இதனிடையே விராட் கோலி உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதற்காக அவர் படித்த பள்ளி நிர்வாகம், லண்டனுக்கு அவரின் சொந்த ஊர் மண்ணை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில், "விராட் கோலி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட பள்ளியின் மண், அவரை ஆசீர்வதிக்கும் வகையில் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. அவருக்கு உங்கள் வாழ்த்துகளையும், ஆசீர்வாதத்தையும் தெரிவிக்க இந்த போஸ்டை விராட் ரசிகர்கள் 5 பேருக்கு ஷேர் செய்யுங்கள்” என்று பதிவிடபட்டுள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

கோலி தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் உள்ள விஷால் பாரதி என்ற பள்ளியில்தான் தொடங்கினார். அவர் அந்தப் பள்ளியில் படிக்கும்போது, 1998-ம் ஆண்டு `வெஸ்ட் டெல்லி கிரிக்கெட் அகாடமி’ யில் இணைந்தார்.

கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

கலிலுல்லா.ச