Published:Updated:

"தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ப்ளேயிங் லெவன்!” - ஹின்ட் கொடுத்த கோலி

பிரேம் குமார் எஸ்.கே.

`காயம் காரணமாக பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கேதர் ஜாதவ் தற்போது வலைபயிற்சியில் ஈடுபடுகிறார். அவர் முழு தகுதியுடன் திரும்பியுள்ளது மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கும்’

கோலி
கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா இன்று தனது முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முன்னதாக கோலி, இன்றைய போட்டி தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் அணிக்கும் உள்ள வித்தியாசம் குறித்துப் பேசினார்.

``கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தோம். ஒவ்வொரு போட்டியிலும் போட்டி நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றிபெறும். அன்றைய அணிக்கும் இன்று இருக்கும் அணிக்கும் உள்ள பெரிய வித்தியாசம்... அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் (குல்தீப் யாதவ் மற்றும் சஹால்). இவர்கள் இருவரும் தற்போது அணியின் பலமாக இருக்கிறார்கள். இவர்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அது பாசிட்டிவான விஷயம்.

கோலி
கோலி
AP
காயம் காரணமாக ஸ்டெயின் விலகியது வருத்தமளிக்கிறது. லுங்கி நிகிடியும் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும் தென்னாப்பிரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது
கோலி

என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ்வின் மோசமான ஃபார்ம் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. எந்த ஒரு போட்டிக்கும், அடுத்த போட்டிக்கும் தொடர்பு கிடையாது. அனைத்துமே புதிய போட்டிதான். கடந்த தொடரில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த தொடரில் அதனைத் தக்கவைக்க கடுமையாகப் பயிற்சிசெய்ய வேண்டும். மோசமான ஃபார்மில் இருந்தாலும் அதேதான் தேவை. கடந்த போட்டிகளில் இருந்து எடுத்துச்செல்லவேண்டியது நல்ல பாடங்களையும் நம்பிக்கையையும்தான். அதுதான் முக்கியமானதும்கூட. ஐபிஎல் தொடருக்கும் உலகக் கோப்பை தொடருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

முதல் போட்டி எப்போதுமே முக்கியமானது. காயம் காரணமாக ஸ்டெயின் விலகியது வருத்தமளிக்கிறது. லுங்கி நிகிடியும் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும் தென்னாப்பிரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் மாற்று வீரர்கள் கூட பலமான வீரர்களே.

பயிற்சியில் ரவி சாஸ்திரியுடன் கோலி
பயிற்சியில் ரவி சாஸ்திரியுடன் கோலி
AP

தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடுவதால், விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் அபாயம் இருக்கிறது. நிதானமாகத் தொடங்கி அதிரடிக்கு மாறுவதுதான் பலன் கொடுக்கும் என நம்புகிறோம். காயம் காரணமாக பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கேதர் ஜாதவ் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். அவர், முழுத் தகுதியுடன் திரும்பியுள்ளது நடுவரிசையில் பலம் சேர்க்கும். போட்டி நாளில் அனைத்து விதங்களிலும் சம பலமான அணியாகக் களம் காணுவோம்.

ஆஃப் ஸ்பின்னர் இல்லை.. பார்ட் டைமர்கள் இல்லை.. எப்படி சமாளிக்கப் போகிறது இந்தியா?!

இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது சற்று வித்தியாசமானது. இங்கு, மேகமூட்டத்துடன் இருக்கும்போது ஆட்டம் ஒரு மாதிரியும், சூரிய ஒளியில் வேறுமாதிரியாகவும் இருக்கும். காலை 10.30 (இங்கிலாந்து நேரப்படி) போட்டி தொடங்குவது சவாலானதுதான். காலையில் மேகமூட்டமாக இருக்கும். பின்னர் சூரியன் வரும். இந்த இரண்டு சூழலுக்கும் பந்துவீச்சாளர்கள் மாற வேண்டும்” என்றார்.

கோலி
கோலி

கேதர் ஜாதவ் அணியில் இடம்பிடித்தால் அவரைப் பகுதிநேர பந்துவீச்சாளராகப் பயன்படுத்த முடியும். நேற்றையப் பேட்டியில் கேதர் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற தொனியில் தான் பேசினார் கோலி. அவர் களமிறங்கினார் விஜய் சங்கருக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். வேகப்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மூன்றாவதாக பாண்டியா இருக்கிறார். எனினும் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து எக்ஸ்ட்ரா வேகப்பந்துவீச்சாளரான ஷமியுடன் களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், ஷமி உள்ளே வந்தால் யாருக்குப் பதிலாகக் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த நிலையில், ஒரு ரிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.