Published:Updated:

ஸ்மித்துக்கு ஆதரவாக களமிறங்கிய கோலி... குவியும் பாராட்டுக்கள் ! #INDvAUS

கார்த்தி

ஒரு தவறு நடந்து ஓராண்டு முடிந்து பின்னும் ஸ்டீவ் ஸ்மித்தை இவ்வாறு கேலி செய்வது கண்டனத்துக்குரியது.

Virat Kohli
Virat Kohli ( Aijaz Rahi, AP )

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அப்போட்டியில் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த SandPaper என்னும் பொருளைப் பயன்படுத்தினர். பேன்கிராஃப்ட், அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் மூவரும் தண்டிக்கப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித், வார்னரின் ஆலோசணையில்தான் பேன்கிராஃப்ட்இவ்வாறு செய்ததாக போட்டி நடுவரின் முன்பு மூவரும் ஒப்புக்கொண்டனர்.

Steve Smith, David Warner
Steve Smith, David Warner
AP

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கிரிக்கெட் ரசிகர்களும், மீடியாவும் இருவரையும் துளைத்தெடுத்தனர். வார்னரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த ஆண்டு மார்ச்29ந் தேதியுடன் இருவரின் தடையும் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இருவர் மீதான ட்ரோல்கள் குறைந்தபாடில்லை. 2019 ஐபிஎல்லில் டேவிட் வார்னர் பங்கேற்ற 12 போட்டிகளில் எடுத்த ரன்கள் 692. அதில் ஒரு சதமும், எட்டு அரைசதமும் அடங்கும். ஒட்டுமொத்த ஐபிஎல்லில், அதாவது 17 போட்டிகளில் விளையாடிய சிலரைவிடவும் வார்னரின் ஸ்கோர் அதிகம். இந்த ஆண்டுக்கான ஆரஞ்சு கேப் ஹோல்டர் வார்னர் தான்.

Warner
Warner
AP

ஸ்டீவ் ஸ்மித் 10 இன்னிங்ஸில் 319 ரன்கள் அடித்திருந்தார்.

இந்த உலகக் கோப்பையிலும் இருவரையும் விமர்சித்து ரசிகர்கள் அவ்வப்போது BOO BOO என மைதானத்தில் இழிவாக நக்கல் அடித்து வந்தனர். இன்றைய இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இந்திய ரசிகர்கள் CHEAT CHEAT என ஸ்டீவ் ஸ்மித்தை ஏளனம் செய்தனர். விராட் கோலி பேட் செய்து கொண்டிருந்த போது, ஸ்டீவ் ஸ்மித் தேர்ட் மேனில் நின்றுகொண்டிருந்தார்.

இந்திய ரசிகர்கள் சார்பாக தான் ஸ்டீவ் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார் கோலி.

இதைக் கவனித்த கோலி, ' ஸ்மித்துக்கு கிளாப் தட்டுங்கள் ' என சைகை காட்டினார். ஸ்டீவ் ஸ்மித் கோலிக்கு நன்றி தெரிவித்தார். ' ஆங்கிரி பேர்டு' கோலியின் கிரிக்கெட் முதிர்ச்சி நாளுக்கு நாள் வியப்பளிக்கிறது.