Published:Updated:

5 போட்டிகளில் 16 விக்கெட்... 19 வயது வேகப்புயல்...யார் இந்த ஷஹீன் அஃப்ரிடி?! #PlayerBio

ஷஹீன் அஃப்ரிடி
News
ஷஹீன் அஃப்ரிடி

பெளலர்கள் பெரும்பாலானோர் ஃபீல்டிங் செட்டப்புக்கு ஏற்றபடி பந்துவீசாமல், ரன்களை எளிதாக வழங்கிவிடுகின்றனர். ஆனால், 19 வயதே ஆன இவர், தன் பெளலிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு ஃபீல்ட் செட் செய்து பந்துவீசி, தன் வயதிற்கு அதிகமான முதிர்ச்சியைக் காட்டுகிறார்.

பெயர் : ஷஹீன் அஃப்ரிடி
பிறந்த தேதி : 6-4-2000
ஊர் : கைபெர் ஏஜென்சி, பாகிஸ்தான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரோல் : பெளலர்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
பெளலிங் ஸ்டைல் ; இடது கை வேகப்பந்துவீச்சு
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 3-4-2018

குறிப்பிட்ட இடைவெளியில் பாகிஸ்தான், சர்வதேச கிரிக்கெட்டுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் பாகிஸ்தான் களமிறக்கியிருக்கும் புது வரவு, ஷஹீன் அஃப்ரிடி. வங்கதேசத்துக்கு எதிராக 9.1 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷஹீன் அஃப்ரிடி, இன்னும் டீன் ஏஜைத் தாண்டவில்லை. அதற்குள், எந்த கேப்டனும் தன் அணியில் சேர்த்துக்கொள்ள விரும்பும் பெளலராகிவிட்டார்.

இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவரை, பாகிஸ்தான் ஒருவேளை முன்பே களமிறக்கி இருந்தால், இன்னும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கக் கூடும். பரவாயில்லை. இன்னும் அவர் பல உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ப்ளேயிங் ஸ்டைல்

இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவரின் பெளலிங் ஆக்ஷன் மிட்சல் ஸ்டார்க்கை நினைவூட்டும். அவரைப் போலவே துல்லியமான யார்க்கர்களை சொருகுவதில் வல்லவர். நியூ பால் கொண்டு இவர் போடும் இன்ஸ்விங்குகளை பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆடுவது கடினம். பெளலர்கள் பெரும்பாலானோர் ஃபீல்டிங் செட்டப்புக்கு ஏற்றபடி பந்துவீசாமல், ரன்களை எளிதாக வழங்கிவிடுகின்றனர். ஆனால், 19 வயதே ஆன இவர் தன் பெளலிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு ஃபீல்ட் செட் செய்து பந்துவீசி, தன் வயதுக்கு அதிகமான முதிர்ச்சியைக் காட்டுகிறார். ஆறடி ஐந்து அங்குலம் உயரத்தை வைத்து அசால்டாக பெளன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்

ஷஹீன் கிரிக்கெட் பந்தை கையில் எடுத்தபோது அவரது வயது நான்கு. 2004-ல் பாகிஸ்தான் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவரின் அண்ணன் ரியாஸ் அஃப்ரிடி மூலம், கிரிக்கெட்டில் நுழைந்தார் ஷஹீன். தன் அண்ணனைப் பார்த்து வளர்ந்தவர், அண்ணனையே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார்.

ஷஹீன் அஃப்ரிடி
ஷஹீன் அஃப்ரிடி

அதுவரை காஸ்கோ பாலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஷஹீன், அண்ணனின் அறிவுறத்தல்படி ஹார்ட் பாலுக்கு மாற்றப்பட்டார். 2015-ல் FATA நடத்திய டேலண்ட் ஹன்டில்(TALENT HUNT) இவர் தேர்வாக, அண்டர் 16 அணியில் இடம்பெற்றார். அப்போதே அசால்ட்டாக ஒரு போட்டிக்கு தலா 7, 8 விக்கெட் வீழ்த்திக்கொண்டிருந்தார். 2017-ல் குவைத் இ அஸாம் டிராபியில் அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். அது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் பார்வையை இந்த இளம் பாலகன் பக்கம் திருப்பியது.

அண்டர் 19 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்க, அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவராக திகழ்ந்தார். அது பாகிஸ்தான் அணி கதவையும் திறந்துவிட, அங்கும் தன் ஆக்ரோஷமான பந்துவீச்சின் மூலம் முத்திரை பதித்து, இன்று பாகிஸ்தான் அணியின் எதிர்காலமாக வளர்ந்துநிற்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

நியூசிலாந்துக்கு எதிராக இவர் பந்துவீசியது எல்லாம் வேற லெவல். வேகம், ஸ்விங் என 19 வயதான இவர் பந்துவீசியதை பார்க்கவே அத்தனை இன்பமாக இருந்தது. பிட்ச்சின் தன்மையை முழுவதுமாக பயன்படுத்தி, நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அன்று 38 ரன்கள் விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தத் தொடர் முழுக்கவே விக்கெட் வேட்டைதான். மொத்தம் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்.

பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் ஷஹீன் அஃப்ரிடி!
குமார சங்கக்காரா

2017 குவைத் இ அஸாம் டிராபி… அதுதான் இவருக்கு அறிமுக போட்டி. முதல் போட்டியிலேயே 15 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்து, உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பேட்ஸ்மேன்களுக்கு குட் லென்த், டெயிலெண்டர்களுக்கு யார்க்கர் என ஒரு பாடமே எடுத்தார்.

ஷஹீன் அஃப்ரிடி ஸ்பெஷல்

குவைத் இ அஸாம் டிராபி தொடரில் அறிமுக போட்டியில் சிறந்த பெளலிங் வைத்துள்ளவர் இவர்தான். 8 விக்கெட்டுகள் 39 ரன்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) நன்றாக செயல்படாததால் தன் ஊதியத்தைத் திருப்பி தர எண்ணினார்.
ஷஹீன் அஃப்ரிடி
ஷஹீன் அஃப்ரிடி
உள்ளூர் போட்டிகளில் விளையாடமலே பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்ற முதல் வீரர்.
ரோல் மாடல்- ரியாஸ் அஃப்ரிடி (அவரது சகோதரர்) , வாசிம் அக்ரம்
ஃபேவரைட் பால்- யார்க்கர்