Published:Updated:

``நீங்கள் தோனியை ப்ளேயிங் லெவனில் எடுப்பீர்களா?” - வில்லியம்சன் முன் வைக்கப்பட்ட கேள்வி

பிரேம் குமார் எஸ்.கே.

வில்லியம்சனிடம் தோனியை உங்கள் அணியில் எடுப்பீர்களா என்ற கேள்வியை முன் வைத்தார் ஒரு பத்திரிகையாளர்!

வில்லியம்சன்
வில்லியம்சன் ( AP )

இந்திய ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிய தருணம் என தோனியின் அந்த ரன் அவுட்டைச் சொல்லலாம். கடைசி நம்பிக்கை என்று டி.வி-யை ஆஃப் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் எழுந்து சென்ற தருணம் அந்த ரன் அவுட் எனலாம்.

தோனி ரன் அவுட்
தோனி ரன் அவுட்
AP

கலங்கியபடி தோனி மைதானத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் ரசிகர்களைத் தோல்வியை காட்டிலும் அதிகமாக வாட்டியது. பலரும் தோனியின் ஓய்வு குறித்துப் பேசிவருகிறார்கள். ஆனால், ரசிகர்களும் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி இன்னும் சில காலம் அணியில் இருக்க வேண்டும் என்கின்றனர்.

தோனி அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணமா? – வைரலாகும் வீடியோ!

அணியில் தோனியின் இடம் தொடர்ந்து பேசுபொருள் ஆகி வரும் நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது செய்தியாளர் ஒருவர், ``நீங்கள் இன்று இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், தோனியை ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்வீர்களா?” என்று கேட்டார்.

வில்லியம்சன்
வில்லியம்சன்
AP

புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் வில்லியம்சன், ``அவரால் நியூசிலாந்து அணிக்காக விளையாட முடியாது. ஆனால், அவர் உலக தரமிக்க வீரர் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட அந்தப் பத்திரிகையாளர், ``நீங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் அதைச் செய்வீர்களா என்பதுதான் கேள்வி” என்றார்.

வில்லியம்சன் - கோலி
வில்லியம்சன் - கோலி
AP

அதற்கு வில்லியம்சன், ``இந்தக் கட்டத்தில் தோனியின் அனுபவம் என்பது மிக முக்கியம். அதுவும் இது மாதிரியான கட்டத்தில் அவரின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. போட்டி நடந்த இரண்டு நாள்களிலும் அவரது பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக இருந்தது.

அவர் ஜடேஜாவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் என்பது சிறப்பானது. அதுவும் குறிப்பாக ஜடேஜா வந்து ஆடிய ஷாட்டுகள், இரண்டு அணியிலும் யாரும் விளையாடாதது. அது விலை மதிக்க முடியாதது” என்றார்.

தொடர்ந்து பேசிய வில்லியம்சன், ``அவர்(தோனி) தனது நாட்டுரிமையை மாற்றப்போகிறாரா? அப்படி என்றால் நாங்கள் எங்களின் அணித் தேர்வு குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்றார். தோனியை யார்தான் வேண்டாம் என்பார்கள் என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்!