Published:Updated:

`இட்ஸ் கம்மிங் ஹோம்?!’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்?!

`இட்ஸ் கம்மிங் ஹோம்?!’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்?!
`இட்ஸ் கம்மிங் ஹோம்?!’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்?!

ஹர்ஷா போக்ளே சொன்னதைப் போல, ஏதாவது ஒரு போட்டியில் இங்கிலாந்து 250 ரன்களில் சுருண்டுவிடும் பட்சத்தில், பெளலர்கள் அதைச் சரிக்கட்டுவார்களா என்பது சந்தேகமே.

பௌலர்கேப்டன்: இயான் மோர்கன்
பயிற்சியாளர்: ட்ரேவர் பெய்லிஸ்
ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங்: 1

உலகக் கோப்பையில் இதுவரை

கிரிக்கெட்டை கண்டுபிடித்து, மூன்றுமுறை உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறி, ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை தொடரை நடத்தக் காத்திருக்கும் இங்கிலாந்துக்கு, உலக சாம்பியன் பட்டம் மட்டும் நழுவிக்கொண்டேயிருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல 44 ஆண்டுகள். ஆனால், இந்தமுறை போட்டி உள்ளூரில் நடப்பதால், கோப்பை வெல்லும் அணிகளில் எல்லோருடைய ஃபேவரிட்டிலும் இங்கிலாந்து இடம்பெற்றிருக்கிறது. அதற்கேற்ப, சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4–0 என வெற்றிபெற்று, கெத்தாக உலகக் கோப்பையில் அடியெடுத்துவைக்கிறது.

பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் அநாயசமாக 350 ரன்களைக் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தில் ஏராளம். ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோ, மோர்கன் என ஒரு பட்டாளமே அசுர ஃபார்மில் இருக்கிறது. ஃபார்மின்றி தவித்த பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக ஃபார்முக்குத் திரும்பி விட்டார். ஜேசன் ராய் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களை எந்த இடத்தில் இறக்கினாலும், சிரமமின்றி ஆடுவர். இந்தியா உள்பட மற்ற அணிகளைப் போல இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரைப் பற்றி மண்டை காய வேண்டியதில்லை. மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் கூடுதல் போனஸ்.

இங்கிலாந்து
இங்கிலாந்து

பெரிய அனுபவம் இல்லாத அவர்களின் பந்துவீச்சு பின்னடைவை ஏற்படுத்தலாம். ஹர்ஷா போக்ளே சொன்னதைப் போல, ஏதாவது ஒரு போட்டியில் இங்கிலாந்து 250 ரன்களில் சுருண்டுவிடும் பட்சத்தில், பெளலர்கள் அதைச் சரிக்கட்டுவார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், சமீபத்திய தொடரில் பாகிஸ்தான் அணியும் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 300+ ரன்களைக் குவித்திருந்தது. அதேசமயம், கடைசி நேரத்தில் வின்சி, ஆர்ச்சர், லியாம் டாவ்சன் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில், பெளலிங்கில் ஆர்ச்சர் முக்கிய பங்காற்ற வாய்ப்புள்ளது. பயிற்சிப் போட்டியில் அதை நிரூபித்தும் இருக்கிறார்.

முக்கிய வீரர்கள்

ஜோ ரூட்
பேட்ஸ்மேன்

இங்கிலாந்து அணியில் எல்லோருமே அதிரடி பேட்ஸ்மேன்கள்தான். பேர்ஸ்டோ, பட்லர் ஆகியோரின் விஸ்வரூபத்தை ஐ.பி.எல் தொடரில் பார்த்திருக்கலாம். ஜேசன் ராய், கேப்டன் இயான் மோர்கன் ஆகியோரும் மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார்கள்.

`இட்ஸ் கம்மிங் ஹோம்?!’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்?!

எல்லோருமே கடந்த சில மாதங்களாக ரன் வேட்டை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுள் ஜோ ரூட் ஆடப்போகும் ஆட்டம் மரண மாஸாக இருக்கப்போகிறது. கடினமான பிட்ச்களில் எதிர் அணி பௌலர்கள் எதிர் பாராமல் மிரட்டினால்கூட ரூட்தான் `வேர்’ போல் நின்று அணியைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ரூட், தன் ஒருநாள் போட்டித் திறனை நிரூபிக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. உலகக் கோப்பையின் ரூட்டு தலயாக நிச்சயம் ஜோரூட் இருப்பார்!

கிறிஸ் வோக்ஸ்
ஆல் ரவுண்டர்

முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் இவரது ஸ்விங்கை ``90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” எனப் புகழ்ந்துள்ளார். ஆம், புதிய பந்தில் ஸ்விங் மட்டுமல்ல கடைசி ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என வெரைட்டி வித்தை காட்டுவார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி, சராசரி 17.36 சராசரி வைத்திருக்கும் வோக்ஸ், நிச்சயம் எதிரணியின் சிம்மசொப்பனமாக இருப்பார்.

கிறிஸ் வோக்ஸ்
கிறிஸ் வோக்ஸ்

வோக்ஸ் விளையாடாத போட்டிகளில் இங்கிலாந்து முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் இருந்திருக்கிறது என்பதிலேயே, அவரது தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிராக, மூன்று போட்டிகளில் (5,4,1) பத்து விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தத் தொடரில் வோக்ஸ் பேட் செய்யும் வாய்ப்பு அமையவில்லை. சூழலுக்கேற்ப பேட்டிங் செய்வதிலும் கில்லி என்பது அணிக்கு பிளஸ்.

ஜோஸ் பட்லர்
பேட்ஸ்மேன்

சமீபத்தில் ஒரு கிரிக்கெட் இணையதளம் நடத்திய சர்வேயில், `இந்த உலகக் கோப்பையின் நாயகன் யார்’ என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்திருப்பது ஜோஸ் பட்லர்! ஐ.பி.எல் 12-வது சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 8 போட்டிகளில் 311 ரன்கள் சேர்த்த, பட்லர்தான் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து விளையாடும் போட்டிகளில் டிரிம் லெவன் ஆடுபவர்களின் கேப்டனாக இருப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அரைசதம் அடித்து தன் ஃபார்மை நீட்டிருத்திருக்கும் பட்லர், மிடில் ஆர்டரில் தூணாக நின்று, அதிக ரன்கள் குவித்த டாப் –5 வீரர்களில் ஒருவராக இருப்பார் என்பது நிச்சயம்.

`இட்ஸ் கம்மிங் ஹோம்?!’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்?!
அடில் ரஷீத்
பௌலர்

இங்கிலாந்து அணியின் பெளலிங்கில் முக்கியப் புள்ளியாக இருக்கப்போகிறார் அடில் ரஷீத். இவரின் தற்போதைய ஃபார்ம் வலுவான இங்கிலாந்து அணியை மேலும் வலுவாக்குகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவர்தான். 24 போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். பொதுவாக, டெத் ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவது அபூர்வம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் இவர் வீசிய 48-வது ஓவர்தான் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியது. 5 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார் ரஷீத். இப்படியான சில மேஜிக் ஸ்பெல்களை இவரிடம் எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அட்டவணை

அடுத்த கட்டுரைக்கு