Published:Updated:

‘சத்தியமா தெரியாது’ - புது ஜெர்ஸி குறித்து இந்தியா பவுலிங் கோச் விளக்கம்

இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

பரத் அருண்
பரத் அருண்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நிறைய அணிகள் நீல நிற உடை அணிந்து விளையாடி வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி வழக்கமான நீல நிற உடையிலே விளையாடியது. இந்தியா அணி நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. ஜூன் 30-ம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஜெர்ஸி குறித்த பேச்சு அடிப்பட்டுள்ளது.

 ‘சத்தியமா தெரியாது’ - புது ஜெர்ஸி குறித்து இந்தியா பவுலிங் கோச் விளக்கம்

இதுகுறித்து இந்திய அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “உண்மையாகச் சொல்கிறேன். நாங்கள் எந்த கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளோம் என்று எனக்கே தெரியாது. இதுகுறித்து எதுவும் சிந்திக்கவில்லை. எங்களது கவனம் முழுவதும் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தின் மீதே உள்ளது. எங்கள் சிந்தனை அனைத்தும் விளையாட்டின் மீதே உள்ளது. எந்த நிறத்தில் உடை அணிவோம் என்பதில் இல்லை!” எனக் கூறியுள்ளார்.