Published:Updated:

'ஐசிசி விதியில் இது இல்லையே பாஸ்!’- தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் #DhoniKeepTheGlove

பிரேம் குமார் எஸ்.கே.

ஐசிசியின் விதிகளின்படி, சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது

தோனி
தோனி ( BCCI )

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் சதம், சஹாலின் சூப்பர் பந்துவீச்சு என எல்லாவற்றையும் தாண்டி அதிகம் கவனிக்கப்பட்டது தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளவுஸ். ஆம் அதில் இருந்த முத்திரை தான் கடந்த இரண்டு நாள்களாக ட்விட்டரில் வலம் வந்த வண்ணம் உள்ளது. தோனியின் க்ளவுஸில் இருந்தது இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை.

`தோனி உடனடியாக இதைச் செய்ய வேண்டும்!' - ஐ.சி.சி. அறிவுறுத்தல்

தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருப்பது நாம் அறிந்ததே. பல்வேறு சமயங்களில் ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டு இருக்கிறார். நிச்சயம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகத் தான் இதனை அவர் வைத்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஐசிசி, பிசிசிஐ -க்கு எழுதிய கடிதத்தில் தோனி அந்த முத்திரையை நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

தோனி
தோனி
சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது
ஐசிசி விதி

அதே நேரத்தில் ஐசிசியின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மத அல்லது இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தின் முத்திரை இதில் வராது என ரசிகர்கள் ஐசிசி -க்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தோனி
தோனி
AP

இதனைத் தொடர்ந்து #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் நேற்றிலிருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் கெளரவ் ஆர்யா ட்விட்டரில், ``டியர் லெப்டினன்ட் கர்னல் தோனி. நீங்கள் பாரா ரெஜின்மெண்ட் -யில் அதிகாரி. முத்திரை பதித்த அந்த க்ளவுஸை எடுக்க வேண்டாம். அது கௌரவமிக்கது.

இந்திய ராணுவத்தின் மிகச் சிறந்த கெளரவம் அது. அந்த முத்திரையை நான் எப்போது பெருமையுடனும் மரியாதையுடனும் பார்ப்பேன். இந்தத் தேசம் உங்களுடன் இருக்கிறது” என தோனிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தோனி இந்தியாவுக்குச் செய்யும் மரியாதை என்றும் இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் நடுவர்கள் செய்யும் தவறுகள் உங்கள் கண்களுக்கு தென்படவில்லை. இது மட்டும் தான் தெரிகிறதா என ஐசிசிக்கு எதிராக சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

ஐசிசியின் கோரிக்கையை ஏற்று க்ளவுஸில் இருக்கும் இராணுவ முத்திரையை தோனி நீக்குவாரா என்பது வரும் ஞாயிறு அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் தெரிந்துவிடும். அது வரை காத்திருப்போம்!

ஐசிசியின் இந்த கோரிக்கைக்கு உங்களின் கருத்து என்ன மக்களே.....?

பிரேம் குமார் எஸ்.கே.