Published:Updated:

பிளானை மாத்தலைனா ஊருக்குத்தான் போகணும் கரீபியன் பாய்ஸ்! #INDvWI

பிளானை மாத்தலைனா ஊருக்குத்தான் போகணும் கரீபியன் பாய்ஸ்! #INDvWI
பிளானை மாத்தலைனா ஊருக்குத்தான் போகணும் கரீபியன் பாய்ஸ்! #INDvWI

பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரும் மட்டுமே அவர்களின் ஷார்ட் பால்களுக்கு பலியாகின. அதன்பிறகு அனைத்து அணிகளுமே சுதாரித்துக்கொண்டன

நாங்கள் ஒரே பிளானை மட்டும் நம்பிக் களமிறங்கப்போவதில்லை. சூழ்நிலைக்கேற்ப எங்கள் திட்டங்களைப் பயன்படுத்துவோம்
ஜேசன் ஹோல்டர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸின்போது இப்படிச் சொன்னார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன். ஆனால், அந்தப் போட்டியிலும் சரி, அதற்குப் பிறகு ஆடிய 4 போட்டிகளிலும் சரி, அவர்களின் பிளான் B பயன்பாட்டிற்கே வரவில்லை. ஒருவேளை அப்படியொன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால், அத்திட்டத்தை வகுத்தவர் முதல் திட்டத்தையே Ctrl+C, Ctrl+V செய்திருக்கவேண்டும். போக்கிரி பிரகாஷ் ராஜ் மாதிரி, ஷார்ட் பால் போடுவோம், ஷார்ட் பால் போடுவோம், ஷார்ட் பால்தான் போடுவோம் என்ற மோடிலேயே பந்துவீசிக்கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரும் மட்டுமே அதற்குப் பலியாகியது. அதன்பிறகு அனைத்து அணிகளுமே சுதாரித்துக்கொண்டன. அதனால், இன்றாவது அவர்கள் வேறு புதிய திட்டத்தைக் கையாளவேண்டும். அப்படி ஏதும் இல்லையென்றால், கண்டுபிடிக்கவாவது வேண்டும். இல்லையெனில், ரோஹித்தின் புல் ஷாட்களுக்கு மொத்தமாக இரையாகவேண்டியதுதான்.

#INDvWI
#INDvWI

அந்த அணியில் வேரியேஷன் என்பதை பெயரளவிலாவது காட்டுவது ஷெல்டன் காட்ரல் மட்டும்தான். சொல்லப்போனால் இந்திய டாப் ஆர்டருக்குப் பிரச்னையும் அவர்தான். இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பதிலயே கொஞ்சம் சிக்கல் கொண்டுவரும் அவர், எதிர்பாராத நேரத்தில் வீசும் யார்க்கரால் பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காட வைப்பார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், ஓவர் தி ஸ்டம்பிலிருந்து வீசுவதால், மற்ற பௌலர்களின் பௌன்சர்களை விடவும் இவரது பௌன்சர்கள் கொஞ்சம் ஆபத்தானது. உடலை நோக்கி வரும் அந்த பௌன்சர்களையும், மற்ற வேரியேஷன்களையும் இந்திய ஓப்பனர்கள் சமாளித்தாலே போதும்.

ஒருவேளை இந்திய ஓப்பனர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டர் கொஞ்சம் சூதானமாக ஆடவேண்டும். முதலில் பேட்டிங் செய்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டருக்குப் போதுமான ஸ்கோர் எது என்பதையே யூகிக்க முடியாது. 150 ரன்னுக்கும் அவுட் ஆவார்கள். 350 ரன்களையும் சேஸ் செய்வார்கள். எனவே மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை சரியாக வைத்திருப்பது அவசியம்.

#INDvWI
#INDvWI

மூன்று அணிகளின் முடிவுகள் முடிவாகிவிட்ட நிலையில், இரண்டு அணிகளின் முடிவுகள் இன்று நிரணயிக்கப்படவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், அரையிறுதிக்குள் நுழைவதோடு, வெஸ்ட் இண்டீஸை வெளியேற்றும்.

பிளேயிங் லெவன்

இந்திய அணியில் எந்த மாற்றமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. புவனேஷ்வர் குமார் ஃபிட்டாகிவிட்டாலும், முகமது ஷமி தொடரவே வாய்ப்பு அதிகம். ஒருவேளை, டெய்ல் எண்டர்களின் பேட்டிங்கைப் பற்றிக் கவலைப்பட்டால், ஒரு ஸ்பின்னருக்குப் பதில் ஜடேஜாவைக் களமிறக்கலாம். குல்தீப்புக்குப் பதில் இறங்கினால் நல்லது. விஜய் சங்கருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பது அவசியம்.

West Indies
West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் பௌலிங் காம்பினேஷனை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறது. இந்தப் போட்டியில் புதிதாக என்ன செய்யப்போகிறார்கள் தெரியவில்லை. தனக்குச் சம்பந்தமே இல்லாத மிடில் ஆர்டரில் ஆடி, பெரிதாக தாக்கமும் ஏற்படுத்தாமல் இருக்கும் ஈவின் லூயிஸுக்குப் பதில் ரஸலுக்கு மாற்றாக வந்திருக்கும் அம்ப்ரிஸைக் களமிறக்கலாம்.

இந்தியா (உத்தேச அணி) : ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா / குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா.

Mohammad Shami
Mohammad Shami

வெஸ்ட் இண்டீஸ் (உத்தேச அணி) : கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் / ஈவின் லூயிஸ், நிகோலஸ் பூரண், ஷிம்ரான் ஹிட்மேயர், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வெயிட், ஆஷ்லி நர்ஸ், கீமர் ரோச், ஒஷேன் தாமஸ், ஷெல்டன் காட்ரல்.

நேருக்கு நேர்

இதுவரை இந்த இரு அணிகளும் 126 ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் இந்தியா 59 வெற்றிகளும், வெஸ்ட் இண்டீஸ் 62 வெற்றிகளும் பதிவு செய்துள்ளன. 2 போட்டிகள் டை ஆகின. 3 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில், மூன்றில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற 5 போட்டிகளிலும் இந்தியாதான் வென்றுள்ளது. அதிலும், 1992 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் அணியால், உலகக் கோப்பைகளில் வீழ்த்தவே முடியவில்லை. 2015 தொடரில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய முகமது ஷமிதான் அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன்!

#INDvWI
#INDvWI

இதுவரை

இந்தியா

vs தென்னாப்பிரிக்கா - 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 36 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - மழையால் ஆட்டம் ரத்து

vs பாகிஸ்தான் - 89 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs ஆப்கானிஸ்தான் - 11 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்
`அன்பிரிடிக்டபிள்’ பாகிஸ்தான் பராக்… பிளாக் கேப்ஸுக்கு முதல் அடி! #CWC19 #NZvPAK

vs பாகிஸ்தான் - 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 15 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs தென்னாப்பிரிக்கா - மழையால் ஆட்டம் ரத்து

vs இங்கிலாந்து - 8 விக்கெட்டுகள் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் தோல்வி

vs நியூசிலாந்து - 5 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

அடுத்த கட்டுரைக்கு