Published:Updated:

இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து! #INDvNZ லைவ் அப்டேட்ஸ்

சார்லஸ்.டி
தா.ரமேஷ்

இந்தியா, நியூஸிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் உடனடி அப்டேட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்கோர் மட்டுமல்லாமல், பல சுவாரஸ்யமான பகிர்வுகளும் உண்டு. உரையாடலாம்!

India Vs New Zealand
India Vs New Zealand
10 Jul 2019 7 PM
தோனி
தோனி
10 Jul 2019 7 PM
இந்தத் தொடர் முழுக்க சிறப்பாக ஆடினோம். ஆனால் இன்றைய 45 நிமிட மோசமான ஆட்டம் வெற்றியைப் பறித்துவிட்டது. நியூஸிலாந்து இந்த வெற்றிக்குத் தகுதியான அணி. மிகவும் தைரியமாக ஆடினார்கள்.
விராட் கோலி
10 Jul 2019 7 PM

இந்தியா தோல்வி!

லீக் போட்டிகளில் பிரமாதமாக ஆடி டேபிள் டாப்பராக முதல் இடம்பிடித்த இந்தியா அரை இறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்திருக்கிறது. பாண்டியா, பன்ட் இருவரும் கிட்டத்தட்ட ஆளுக்கு 10 ஓவர்கள் ஆடி 30-களில் அவுட் ஆனது இந்தியாவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது. ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப்போட்ட தோனியும் அடிக்கவேண்டிய கட்டத்தில் பவுண்டரிகள் அடிக்கத்தவறினார். ஓர் அணியாக இணைந்து பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என சிறப்பான பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திய நியூஸிலாந்து இறுதிப்போட்டிக்குச் சென்றிருக்கிறது.

10 Jul 2019 7 PM
10 Jul 2019 7 PM

ஜடேஜா அவுட்!

பரபரப்பான கட்டத்தில் மிகச்சிறப்பாக ஆடிய ஜடேஜா அவுட். 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருக்கிறர் ஜடேஜா!

10 Jul 2019 6 PM
10 Jul 2019 6 PM

அசத்தும் ஜடேஜா!

தோனியின் பிரஷரை குறைத்திருக்கிறார் ஜடேஜா. இதுவரை 37 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருக்கிறார் ஜடேஜா. இனி தோனி தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். போல்ட், ஃபெர்குசன், நீஷம் என தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களை களத்தில் இறக்குகிறது நியூஸிலாந்து.

10 Jul 2019 6 PM

ஸ்பின் பிரச்னை!

தோனி கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்கள் எடுக்கத் திணறுவதால் தொடர்ந்து சான்ட்னரைப் பயன்படுத்திவருகிறது நியூஸிலாந்து. சான்ட்னருக்கு இன்னும் இரண்டு ஓவர்கள் இருக்கிறது. கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சான்ட்னர்.

10 Jul 2019 6 PM

துரத்தும் பரபரப்பு!

84 பந்துகளில் 117 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலையில் இந்தியா. தோனி, ஜடேஜா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்!

10 Jul 2019 6 PM
10 Jul 2019 6 PM

முதல் சிக்ஸர்!

இந்தியாவின் முதல் சிக்ஸரை அடித்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. நீஷமின் பந்தை பவுண்டரி லைனுக்கு மேலே பறக்கவிட்டார் ஜடேஜா!

10 Jul 2019 5 PM
ஜடேஜா உள்ளூர் போட்டிகளில் முதல்வரிசையில் ஆடுபவர். அவர் தன்னை 8-வது டவுன் பேட்ஸ்மேனாக நினைக்கமாட்டார். முழுமையான பேட்ஸ்மேனாகவே உணர்வார்.
ஹர்ஷா போக்ளே
10 Jul 2019 5 PM
10 Jul 2019 5 PM

நிதானமிழந்த பன்ட், பாண்டியா!

பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டிய பன்ட்டும், பாண்டியாவும் 30 ரன்களுக்கு மேல் பொறுமையை இழந்து தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்திருக்கிறார்கள். தோனியுடன் களத்துக்கு வந்திருக்கிறார் ஜடேஜா!

10 Jul 2019 5 PM

பாண்ட்யா அவுட்!

சான்ட்னரின் பந்துவீச்சில் அவுட் ஆனார் பாண்ட்யா. இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது!

10 Jul 2019 5 PM
நியூஸி ரசிகர்கள்!
நியூஸி ரசிகர்கள்!
10 Jul 2019 5 PM
பன்ட் அவுட்!
பன்ட் அவுட்!
10 Jul 2019 5 PM

எகிறும் ரன்ரேட்!

28 ஓவர்களில் 83 ரன்கள் அடித்திருக்கிறது இந்தியா. இதனால் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் ஓவருக்கு 7 ரன்களை தொட்டிருக்கிறது.

10 Jul 2019 5 PM
10 Jul 2019 5 PM

பன்ட் அவுட்!

சான்ட்னரின் பந்துவீச்சில் சிக்ஸருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார் ரிஷப் பன்ட். 56 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார் பன்ட். தற்போது தோனி களத்துக்கு வந்திருக்கிறார்.

10 Jul 2019 5 PM
முதன்முறையாக பவர்பிளேவில் இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. நியூஸிலாந்து பெளலர்கள் பெரும்பாலான பந்துகளை குட் லென்த்தில் பிட்ச் செய்திருக்கிறார்கள். ரோஹித், விராட், ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, நியஸி பெளலர்கள் ஒரே லைனில் பந்துவீசியிருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் செய்த பிரமாதமான செட் அப் இது. நியூஸிலாந்து அட்டகாசமாக ஹோம்வொர்க் செய்திருக்கிறது!
செளரவ் கங்குலி
10 Jul 2019 4 PM

நிதானம் நிதானம்!

முகமது ஷமிக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவை எடுத்தது சரியா என்ற கேள்வி எழுந்தது. ஜடேஜா பெளலிங்கில் 10 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்துவிட்டார். ஃபீல்டிங்கிலும் அசத்தல். அதேபோல, பேட்டிங்கிலும் அவர் கைகொடுக்க வேண்டியது அவசியம்.

அதேபோல, தோனிக்கு முன் ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது தவறு என்ற கருத்தும் நிலவுகிறது. தினேஷ் கார்த்திக் அவுட்டாகிவிட்டார். பன்ட் இன்னும் களத்தில் இருக்கிறார். பாண்டியாவும் அவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். இருவருக்கும் பெரிய இலக்கை சேஸ் செய்த அனுபவம் இல்லை. இன்று அதை நிரூபிக்க வேண்டும். இதை விட வேறு பெரிய மேடை அவர்களுக்குக் கிடைக்காது!

10 Jul 2019 4 PM
10 Jul 2019 4 PM

அடப்பாவி!

10 Jul 2019 4 PM
தினேஷ் கார்த்திக் அவுட்! 6 (25)
10 Jul 2019 4 PM

நான்கே பந்தில் கோலிக்கு செக்!

நான்கே பந்தில் கோலியின் இன்னிங்ஸுக்கு முடிவுரை எழுதிவிட்டார் டிரென்ட் போல்ட். முதல் இரண்டு பந்துகள் ஃபுல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்து கோலியை டிரைவ் ஆடத் தூண்டினார் போல்ட். மூன்றாவது பந்தை மிடில் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்தார். கோலி மணிக்கட்டை சுழற்றி அந்தப் பந்தை நேக்காக தடுத்தார். டிரென்ட் போல்ட் வேறு விதமாக யோசித்தார். ரிஸ்ட்டை பயன்படுத்தி லெக் சைடில் ஷாட் ஆடுமாறு அடுத்த பந்தை வீசினார். கோலி இதை எதிர்பார்க்கவில்லை. இந்தமுறையும் அதே லென்த். ஆனால், லைனை மட்டும் கொஞ்சம் மாற்றினார். லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சாகி வந்த பந்தை அதேபோல மணிக்கட்டை சுழற்றி ஆடத் தயாரானார் கோலி. பந்து அவர் எதிர்பார்த்தபடி பேட்டுக்கு வரவில்லை. பேடை பதம் பதர்த்தது. இந்திய அணியையும்!

கோலி அவுட்டான விதம்.
கோலி அவுட்டான விதம்.
10 Jul 2019 4 PM

Indians fans now!

இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து! #INDvNZ லைவ் அப்டேட்ஸ்
10 Jul 2019 4 PM

சும்மா ஒரு ரீவைண்ட்!

2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 338/4 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை சேஸ் செய்யும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு, முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. ரோஹித் ஷர்மா டக் அவுட். விராட் கோலி 5 ரன்களில் அவுட். ஷிகர் தவான் 21 ரன்களில் அவுட். இந்தியா 33 ரன்களில் மூன்று விக்கெட்டை இழந்தது தத்தளித்தது. இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்து, இந்தியாவுக்கு அன்று செக் வைத்தார் முகமது ஆமிர்.

இன்று நியூஸிலாந்திடம் சேஸிங்கில் 5 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருக்கிறது.

10 Jul 2019 4 PM

ஆட்டம் கண்டது டாப் ஆர்டர்!

India's K.L. Rahul reacts as he leaves the field after being dismissed by New Zealand's Matt Henry.
India's K.L. Rahul reacts as he leaves the field after being dismissed by New Zealand's Matt Henry.
AP

ரோஹித் அவுட்டாகி விட்டார், கோலியும் அவுட்டாகிவிட்டார். இந்திய அணியின் உடனடி தேவை விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டும். ஆனால், பொறுப்புடன் ஆட வேண்டிய கே.எல் ராகுல், ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதுபோன்ற தருணங்களில் பொறுமையுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டிருக்கலாம். தவறவிட்டு விட்டார் ராகுல். அந்தப் பந்தைத் தொடாமலே இருந்திருக்கலாம்.

இதுநாள் வரை இந்திய அணியின் டாப் ஆர்டர் உதவியுடன்தான் இந்திய அணி வென்று வந்தது. இன்றுதான் முதன்முறையாக மிடில் ஆர்டருக்கு பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

10 Jul 2019 3 PM

கோலியும் அவுட்...

India's captain Virat Kohli throws his bat in frustration after being dismissed by New Zealand's Trent Boult.
India's captain Virat Kohli throws his bat in frustration after being dismissed by New Zealand's Trent Boult.
AP

ehடிரென்ட் போல்ட் பந்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஃபுல் லென்த்தில் லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சான பந்து மிடில் ஸ்டம்பை தகர்க்கும் என பால் டிராக்கிங்கில் தெரியவந்தது. ஆனால், கோலி ரிவ்யூ கோரி இருந்தார். முடிவில் அவர் அவுட் எனத் தெரிந்ததும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதுபோன்ற பெரிய தொடர்களில் சேஸிங் நாயகன் கோலி அவுட்டாகியிருப்பது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவே. ரிஷப் பன்ட் களமிறங்கியிருக்கிறார். இந்திய அணியின் இப்போதைய தேவை பார்ட்னர்ஷிப்.

10 Jul 2019 3 PM

ரோஹித் அவுட்

நியூஸிலாந்தைப் பொறுத்தவரை இது டீசன்ட்டான ஸ்கோர். டிரென்ட் போல்ட், பெர்குசன் என அவர்கள் பெளலிங் அட்டாக், 239 என்ற ஸ்கோரை டிஃபண்ட் செய்ய போதுமானதாகவே இருக்கும்.

எதிர்பார்த்தது போலவே இந்திய ஓப்பனர் ரோஹித் ஷர்மா அவுட். ஹென்றி புல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசியதை ரோஹித் தட்டுத் தடுமாறி தொட்டார். பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது இந்தியா. நியூஸிலாந்தின் கேம் பிளானை சரியாக நிறைவேற்றிவிட்டது. இப்போது அனைவரது கண்ணும் இந்திய கேப்டன் விராட் கோலி மீது!

10 Jul 2019 3 PM

டார்கெட் 240... சேஸ் செய்ய இந்தியா ரெடி!

நியூஸிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று காலை 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. ஆனால், ஜடேஜாவின் துல்லிய த்ரோ, அட்டகாசமான கேட்ச், நியூஸிலாந்தின் ரன் ரேட்டை கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்றே சொல்லலாம்.

10 Jul 2019 3 PM

ஒரே ஓவரில் 2 விக்கெட்... புவி மிரட்டல்!

அடுத்த விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து. புவியின் பந்தில் மிட் விக்கெட்டில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் வெளியறேினார் மேட் ஹென்றி.

10 Jul 2019 3 PM

எங்கு பார்த்தாலும் ஜட்டு!

ஜட்டு துல்லிய த்ரோவில் டெய்லர் ரன் அவுட்.
ஜட்டு துல்லிய த்ரோவில் டெய்லர் ரன் அவுட்.

புவனேஷ்வர் குமார் வீசிய 48–வது ஓவரின் முதல் பந்தில் லாதம், சிக்ஸ் அடிக்க முயற்சித்தார். ஆனால், டீப் மிட் விக்கெட்டில் இருந்த ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். ஜட்டு ராக்ஸ் அகெய்ன்... எங்கு பார்த்தாலும் ஜட்டு!

10 Jul 2019 3 PM

ஜட்டு ராக்ஸ்.... டைரக்ட் ஹிட்... ராஸ் டெய்லர் அவுட்...

பும்ரா பந்தில் மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓட முயன்றார் ராஸ் டெய்லர். ஆனால், அங்கிருந்த ரவீந்திர ஜடேஜா டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்தார். டெய்லர் 74 ரன்களில் (90 பந்து) அவுட்.

10 Jul 2019 2 PM

ஆட்டம் ஆரம்பம்!

நற்செய்தி. மான்செஸ்டரில் சூரியன் உதித்துவிட்டது. மழை இல்லை. ஆட்டம், பாட்டத்துடன் ஸ்டேடியத்துக்குள் நுழைகின்றனர் ரசிகர்கள். இரு அணிகளும் வார்ம் அப் முடித்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிவிட்டன. அடுத்த மூன்றரை மணி நேரத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.

நியூஸிலாந்து நேற்று 46.1 ஓவர் முடிவில் 211/5 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் இன்று ஆட்டத்தைத் தொடங்குகின்றனர். 47–வது ஓவரை வீசுவது புவனேஷ்வர் குமார்.

09 Jul 2019 10 PM

ரிசர்வ் டே!

இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும. 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களில் இருக்கிறது நியூஸிலாந்து. ராஸ் டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

09 Jul 2019 10 PM

இன்றைய ஆட்டம் கைவிடப்படலாம்!

ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தை கொஞ்ச நேரம் விட்டுவைத்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் அநேகமாக இன்றைய ஆட்டம் கைவிடப்படலாம்!

09 Jul 2019 9 PM

தொடரும் மழை!

மான்செஸ்டரில் மழை விட்டுவிட்டுப் பெய்கிறது. ஆட்டம் இன்று இரவு 11 மணிக்குள் தொடங்கவில்லை என்றால் நாளை காலை தொடரும். ஆனால் நாளை மாலை பலத்த மழை இருப்பதாக வானியல் நிலையம் அறிவித்துள்ளது.

09 Jul 2019 8 PM

மழை நின்றது!

மான்செஸ்டரில் மழை நின்றது. இதுவரை ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

09 Jul 2019 7 PM
09 Jul 2019 7 PM
வில்லியம்சன் சிறந்த பிளேயர். யாரும் அதை மறுக்க முடியாது. இன்று எது அவருக்குப் பிரச்னையாக இருந்தது என்றால், மற்ற வீரர்கள் போதுமான அளவு ரன் சேர்க்கவில்லை. பெரிய ஸ்கோரை எட்ட வேண்டுமெனில் ஒருவரை மட்டுமே நம்பியிருக்க கூடாது. பொதுவாக, உடம்பை ஒட்டி வரும் பந்துகளையே அவர் ஆட விரும்புவார். ஆனால், எதிர்முனையில் இருந்தவர்கள், ரன் சேர்க்காததால் அவர் ஃபேக்புட் Punch ஆட நிர்பந்திக்கப்பட்டார். இது அவரது இயல்பு அல்ல!
சச்சின் டெண்டுல்கர்
09 Jul 2019 6 PM

DLS என்ன சொல்லுது!

இன்று இனிமேல் நியூஸிலாந்து பேட் செய்யவில்லை எனில், டக்வொர்ட் லூயிஸ் ஸ்டெர்ன் விதிப்படி இந்தியா 46 ஓவர்களில் 237 ரன்கள் எடுக்கவேண்டும். ஒருவேளை போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டால், இந்தியா சேஸிங்கில் 148 ரன்கள் எடுக்க வேண்டும்.

Groundsmen bring out a water removal machine as it rains during the Cricket World Cup semifinal match between India and New Zealand at Old Trafford in Manchester.
Groundsmen bring out a water removal machine as it rains during the Cricket World Cup semifinal match between India and New Zealand at Old Trafford in Manchester.
AP
09 Jul 2019 6 PM

மழை நிற்கவில்லை என்றால் என்ன நடக்கும்?!

அரையிறுதி, இறுதிப் போட்டிகளின்போது மழை பெய்தால், ரிசர்வ் டே எனப்படும் மறுநாளில் போட்டி தொடங்கும். முந்தைய நாள் எந்த இடத்தில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ, அதிலிருந்தே போட்டி தொடங்கும்.

அரையிறுதி, இறுதிப் போட்டிகள் டையில் முடிந்தால், ஆட்டத்தின் முடிவு சூப்பர் ஓவர் முறையில் தீர்மானிக்கப்படும்.

ஒருவேளை அரையிறுதி போட்டி ரத்துசெய்யப்பட்டால், குரூப் சுற்றில் முன்னணியில் இருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி வாஷ் அவுட்டானால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொள்ளும்.

09 Jul 2019 6 PM

கொடி பறக்குது!

Indian supporters celebrate the dismissal of New Zealand's captain Kane Williamson.
Indian supporters celebrate the dismissal of New Zealand's captain Kane Williamson.
AP
09 Jul 2019 6 PM

மழை குறுக்கீடு!

நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

09 Jul 2019 6 PM

புவி ஸ்ட்ரைக்ஸ்... கிரந்தோம் அவுட்

டெத் ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது நியூஸிலாந்து. கிரந்தோம் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் ஸ்வீப் செய்ய முயன்றபோது பந்து பேடில் பட்டது. அம்பயரும் அவுட் கொடுத்தார். ஆனால், நியூஸிலாந்து ரிவ்யூ கோரியது. பால் டிராக்கிங்கில் பந்து ஸ்டம்பை மிஸ் செய்வது தெரிந்தது.

09 Jul 2019 6 PM

நான்காவது விக்கெட் - நீஷம் அவுட்

பாண்டியா பந்துவீச்சில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேம்ஸ் நீஷம். இப்போது காலின் டி கிரந்தோம் களமிறங்கியுள்ளார்

Indian supporters display portraits of U.S. President Donald Trump and Indian Prime Minister Narendra Modi during the Cricket World Cup semi-final match between India and New Zealand at Old Trafford in Manchester.
Indian supporters display portraits of U.S. President Donald Trump and Indian Prime Minister Narendra Modi during the Cricket World Cup semi-final match between India and New Zealand at Old Trafford in Manchester.
AP
09 Jul 2019 5 PM

டெய்லர் அநியாயத்துக்கு ஸ்லோ!

பாண்டியா பந்துவீச்சில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேம்ஸ் நீஷம். இப்போது காலின் டி கிரந்தோம் களமிறங்கியுள்ளார்.

சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் ரொம்பவே திணறுகிறார். 61 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். டெய்லருக்கு ரன் எடுக்கவும் தெரியவில்லை. அவுட்டாகவும் தெரியவில்லை என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். சூழல் தனக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும். டெய்லர் அதைச் செய்யவில்லை. இதனால், வில்லியம்சனுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் வில்லியம்சன் அவுட்டாகிவிட்டார்.

அண்டர்டாக்ஸ் நியூசி... கலக்கல் இந்தியா... ஃபைனல் நோக்கி நகர்வோம்! #INDvNZ
09 Jul 2019 5 PM
09 Jul 2019 5 PM

வில்லியம்சன் அவுட் 67 (95 பந்து 6x4 0x6)

அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் வில்லியம்சன். ஜடேஜா ஓவரில் ஸ்லாக் ஸ்வீப் பவுண்டரி அடித்து கியரை மாற்றினார். அடுத்து வந்த சாஹல் ஓவரில் வெளுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். சாஹல் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து டர்ன் செய்த பந்,தை தூக்கி அடிக்க முயன்று, பாயின்ட்டில் இருந்த ரவீந்திர ஜடஜோவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் நியூஸி கேப்டன்.

09 Jul 2019 5 PM

ஓ மை தோனி!

பும்ரா வீசிய 31.3–வது ஓவரில் லெக் கட்டரை சரியாக கணிக்கத் தவறினார் டெய்லர். பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. தோனி புல் லென்த்தில் தனக்கு வலதுபுறம் டைவ் அடித்தும், பந்து கிளவுஸில் பட்டு கீழே விழுந்தது. தோனி கேட்ச்சை மிஸ் செய்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஸ்பின்னுக்கு எதிராக அட்டகாசமாக கீப்பிங் செய்யும் தோனி, வேகப்பந்துவீச்சில் இந்தமுறை ரொம்பவே திணறுகிறார். அந்த கேட்ச் கொடுத்தபோது டெய்லர் 22 ரன்களே எடுத்திருந்தார்.

09 Jul 2019 5 PM

வில்லியம்சன் இதுவரை!

பேட்செய்யவில்லை vs இலங்கை

40 vs வங்கதேசம்

79* vs ஆப்கானிஸ்தான்

106* vs தென்னாப்ரிக்கா

148 vs வெஸ்ட் இண்டீஸ்

41 vs பாகிஸ்தான்

40 vs ஆஸ்திரேலியா

27 vs இங்கிலாந்து

50* vs இந்தியா

09 Jul 2019 5 PM

வில்லியம்சன் அரைசதம்!

New Zealand's captain Kane Williamson.
New Zealand's captain Kane Williamson.
AP

எதிர்பார்த்தது போலவே நியூஸி கேப்டன் வில்லியம்சன் அரைசதம் அடித்து விட்டார். உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு கேப்டனாக முன்னனின்று அணியை வழிநடத்தும் வில்லியம்சன், சர்வதே ஒருநாள் அரங்கில் அடிக்கும் 39–வது அரைசதம் இது. அவர் 79 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

09 Jul 2019 5 PM

கோலி கேப்டன்சி பியூட்டி!

இந்திய கேப்டன் விராட் கோலி இதுவரை பெளலர்களை சரியாகப் பயன்படுத்தி வருகிறார். முதல் ஸ்பெல்லில் பும்ரா நான்கு, புவி ஐந்து ஓவர்கள் வீசினர். அதன்பின் ஜடேஜா, பாண்டியாவைக் கொண்டுவந்தார். ஜடேஜாவை தொடர்ந்து எட்டு ஓவர்கள் வீசவைத்தார். அவரும் அந்த எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 25 ரன்கள் கொடுத்துவிட்டார். முகமது ஷமிக்குப் பதிலாக தன்னை எடுத்ததற்கு நியாயம் சேர்த்து விட்டார் ஜட்டு. இன்னும் அவருக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே இருக்கிறது. அதையும் கட்டுக்கோப்பாக வீசிவிட்டால் போதும். டெத் ஓவர்களில் பும்ரா, புவி ரன்களைக் கட்டுப்படுத்திவிடுவார்கள். ஷமி விக்கெட் எடுத்திருப்பார்தான், இருந்தாலும் அவர் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

09 Jul 2019 4 PM
பாண்டியா இஸ் பேக்!
வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய பாண்டியா களத்துக்கு திரும்பி விட்டார்.
09 Jul 2019 4 PM
ஓப்பனிங் பரிதாபங்கள்!

137* vs இலங்கை

35 vs வங்கதேசம்

0 vs ஆப்கானிஸ்தான்

12 vs தென்னாப்ரிக்கா

0 vs வெஸ்ட் இண்டீஸ்

5 vs பாகிஸ்தான்

29 vs ஆஸ்திரேலியா

2 vs இங்கிலாந்து

1 vs இந்தியா

09 Jul 2019 4 PM
09 Jul 2019 4 PM

நிக்கல்ஸ் அவுட்... ஜடேஜா ஸ்ட்ரைக்ஸ்

இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த வில்லியம்சன் – நிக்கல்ஸ் ஜோடியைப் பிரித்தார் ரவீந்திர ஜடேஜா. தன்னை பிளேயிங் லெவனில் சேர்த்தற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குட் லென்த்தில் விழுந்து வந்த பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்று மிடில் ஸ்டம்பைத் தகர்த்து. நிக்கல்ஸ் 28 ரன்களில் அவுட் (51 பந்து).

09 Jul 2019 4 PM

பாண்டியாவுக்கு காயம்!

பந்துவீசும்போது பாண்டியாவுக்கு வலது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஓவர் முடிந்ததும் அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிவிட்டார். நடப்பதற்கு சிரமப்படுகிறார். ஒருவேளை காயம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் காத்திருக்கிறது. பாண்டியா தற்போது 4 ஓவர் மட்டுமே பந்துவீசியிருக்கிறார். ஏற்கெனவே இந்தியா 5 ஸ்பெஷலிஸ்ட் பெளலர்களுடன் களமிறங்கியிருப்பதால், பாண்டியா வீச வேண்டிய 6 ஓவர்களை யார் வீசப்போகிறார். எப்படி சமாளிக்கப் போகிறார் கோலி என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல் ஆகியோரால் பந்துவீச முடியாது.

09 Jul 2019 4 PM

கத்துக்கணும்!

09 Jul 2019 3 PM
கப்டில் விக்கெட்டை வீழ்த்திய பும்ராவை பாராட்டும் சக வீரர்கள்.
கப்டில் விக்கெட்டை வீழ்த்திய பும்ராவை பாராட்டும் சக வீரர்கள்.
AP
09 Jul 2019 3 PM

பத்து ஓவர் முடிவில் நியூஸிலாந்து 27/1

09 Jul 2019 3 PM
09 Jul 2019 3 PM

புவிக்கு பதிலாக பாண்டியா

புவனேஷ்வர் குமார் தன் கடமையைச் செய்துவிட்டார். முதல் ஸ்பெல்லில் ஐந்து ஓவர்களில் ஒரு மெய்டன் வீசி, 13 ரன்கள் கொடுத்துள்ளார். விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ஒரு எண்டில் இருந்து லைன் அண்ட் லென்த்தை கட்டுக்கோப்பாக வீசியது, மறுனையில் பும்ரா விக்கெட் எடுக்க உதவியாக இருந்தது. புவியை மாற்றியிருப்பது பாண்டியா!

09 Jul 2019 3 PM

முதல் பவுண்டரி

ஒருவழியாக முதல் பவுண்டரியை அடித்தது நியூஸிலாந்து. பும்ரா வீசிய எட்டாவது ஓவரின் கடைசி பந்தில், புல் லென்த்தில் விழுந்த பந்தை கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார் நிக்கல்ஸ்.

09 Jul 2019 3 PM

அதிக மெய்டன் வீசியவர்கள்!

பும்ரா – 9

ஆர்ச்சர் – 8

கம்மின்ஸ், வோக்ஸ் – 6

முகமது அமீர், கிறிஸ் மோரிஸ், மிச்செல் ஸ்டார்க் – 5

09 Jul 2019 3 PM
09 Jul 2019 3 PM

வாவ் பும்ரா... கப்டில் அவுட்!

இந்த உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. பும்ராவின் பந்தில் இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார் மார்ட்டின் கப்டில். அட்டகாசமான கேட்ச். வழக்கம்போல, கேப்டன் வில்லியம்சன் தோள்களில் சுமை.

09 Jul 2019 3 PM
India's Bhuvneshwar Kumar makes an unsuccessful appeal for the dismissal of New Zealand's Martin Guptill.
India's Bhuvneshwar Kumar makes an unsuccessful appeal for the dismissal of New Zealand's Martin Guptill.
AP
09 Jul 2019 3 PM

முதல் பந்தே மிரட்டல்!

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ரிவ்யூ கோரியது இந்தியா. ஆனால், பால் டிராக்கிங்கில் பந்து ஸ்டம்பை தகர்க்கவில்லை என்பது தெரியவந்தது. மார்ட்டின் கப்டில் தப்பித்தார். இந்தியாவின் ரிவ்யூ முடிந்தது.

கப்டில் எல்பிடயுள் அப்பீல்
கப்டில் எல்பிடயுள் அப்பீல்
09 Jul 2019 2 PM

இந்திய அணி ஐந்து பெளலர்களுடன் களமிறங்கியிருக்கிறது. அதில் இரண்டு ஸ்பின்னர்கள். ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் கைகொடுப்பார் என்பதால் அவர் டிக் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அதேநேரத்தில் முகமது ஷமியை எடுத்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உங்களுக்குத் திருப்தியா?

09 Jul 2019 2 PM

அணிகள் விவரம்!

இந்தியா: கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பன்ட், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

நியூஸிலாந்து: மார்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரந்தோம், மிச்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

09 Jul 2019 2 PM
New Zealand's Lockie Ferguson falls on the ground while playing with a soccer ball during a training session ahead of their Cricket World Cup semifinal match against India at Old Trafford in Manchester.
New Zealand's Lockie Ferguson falls on the ground while playing with a soccer ball during a training session ahead of their Cricket World Cup semifinal match against India at Old Trafford in Manchester.
AP

2015 உலகக் கோப்பைக்குப் பின் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் 13 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 9 முறை வெற்றிபெற்றள்ளது.

09 Jul 2019 2 PM
முகமது ஷமியை ஏன் தேர்வுசெய்யவில்லை. காயமாக இருக்குமா? யாரும் காயத்தால் பாதிக்கப்படவில்லை என நினைக்கிறேன். புவனேஷ்வர் குமார், பும்ரா என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல. ஐந்து ஸ்பெஷலிஸ்ட் பெளலர்களுடன் களமிறங்குவது என்பது விராட் கோலிக்கு சவாலாகவே இருக்கும்.
வி.வி.எஸ்.லட்சுமண்
09 Jul 2019 2 PM

நியூஸிலாந்து பேட்டிங்

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டிம் செளதிக்குப் பதிலாக பெர்குசன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.

09 Jul 2019 1 PM
இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து! #INDvNZ லைவ் அப்டேட்ஸ்

இன்று மான்செஸ்டரில் மழை பெய்யலாம். ஆனால், ஆட்டமே கைவிடப்படும் அளவுக்கு மழை இருக்காது. அப்படி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் நாளை மீண்டும் போட்டி தொடங்கும்.