Published:Updated:

மழையால் ஆட்டம் ரத்து. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி #INDvNZ LIVE Update

மு.பிரதீப் கிருஷ்ணா
Karthikeyan KG

இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஆடும் உலகக் கோப்பை போட்டியின் லைவ் அப்டேட்

மழையால் ஆட்டம் ரத்து. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி #INDvNZ LIVE Update
மழையால் ஆட்டம் ரத்து. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி #INDvNZ LIVE Update
13 Jun 2019 7 PM
ஆட்டம் ரத்து
விட்டு விட்டு மழை பெய்துகொண்டே இருந்ததால், ஆட்டத்தை நடத்த முடியாது என்று கைவிட்டனர் நடுவர்கள். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது.
13 Jun 2019 3 PM

மழை..மழை..!

13 Jun 2019 2 PM

மீண்டும் மழை

நாட்டிங்ஹமில் மீண்டும் மழை. மைதானம் கவர்களால் மூடப்பட்டுளது. போட்டி தொடங்குவது இன்னும் தாமதமாகும்.

13 Jun 2019 2 PM

இந்தியா - 3, நியூசிலாந்து - 4

#INDvNZ
#INDvNZ
13 Jun 2019 2 PM
மைதானத்தை மூடியிருந்த கவர்களை அப்புறப்படுத்தியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இருந்தாலும் ஆடுகளம் ஆடுவதற்கு உகந்ததாகவே இருக்கிறது. அவுட்ஃபீல்டு கொஞ்சம் ஈரமாக இருப்பதால், வீரர்கள் காயமடையவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு அனுமதிக்கக்கூடாது. எனவே கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம்
நடுவர்கள் மராய் எராய்ஸ்மஸ், பால் ரெய்ஃபில்
13 Jun 2019 2 PM

இன்னும் அரை மணி நேரத்தில் டாஸ்

மைதானம் மழையால் மூடப்பட்டிருந்ததால், டாஸ் போடக் கொஞ்சம் தாமதமாகும். 3 மணிக்கு மீண்டும் மைதானத்தைப் பரிசோதித்துவிட்டு நடுவர்கள் முடிவு செய்வார்கள்.

13 Jun 2019 2 PM

சங்கர் இல்லை... டி.கே?

நேற்று இந்திய அணி சிறிது நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது தினேஷ் கார்த்திக் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர்தான் நான்காவது வீரராகக் களமிறங்குவார் என்று நான் நினைக்கிறேன்
சைமன் டூல்
பிளாக் கேப்ஸ் vs மென் இன் புளூ.. வெற்றி யாருக்கு? #INDvNZ
13 Jun 2019 2 PM

கிரிக்கெட் ரசிகர்களுக்கு வணக்கம். நாட்டிங்ஹம் மைதானத்தில் நடக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியின் லைவ் அப்டேட்கள் உடனுக்குடன் இங்கே. டெக்னிக்கல் விஷயங்கள், Stats, Facts, அணிகள் செய்யும் தவறுகள், கேப்டன்களின் முடிவுகள், பழைய போட்டிகள் என நிறைய விஷயங்களை இங்கே விவாதிக்கலாம்!