Published:Updated:

மழையால் அரையிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

இரு நாள்களிலும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால், என்ன நடக்கும்?

மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி தானாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.

கிரிக்கெட் மைதானம்
கிரிக்கெட் மைதானம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மான்செஸ்டரில் நாளை நடைபெற்வுள்ள முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுகளில் 4 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இதனால், ரிசர்வ் டே ஒதுக்காததற்காக ஐ.சி.சி. கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. அரையிறுதி போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. இரு நாள்களும் மழை பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

இந்திய அணி லீக் ஆட்டங்களில் அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் தானாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். லீக் சுற்று முடிவில் இந்திய அணி 15 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 11 புள்ளிகளை மட்டுமே ஈட்டியது. லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மழையால் அரையிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை முதன்முறையாகச் சந்திக்கின்றன. உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி 6 முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில், 3 ஆட்டங்களில் வெற்றியும் மற்றவையில் தோல்வியையும் சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணி 7 முறை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.