Published:Updated:

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பைப் போட்டியின் LIVE அப்டேட்!

10 Jun 2019 12 AM

பத்திரிகையாளர் சந்திப்பில் கோலி!

09 Jun 2019 11 PM

உங்கள் மேன் ஆஃப் தி மேட்ச் யார்?

09 Jun 2019 11 PM
இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரைத் தோற்ற பிறகு, எங்களை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருமே எதிர்பார்த்தபடி விளையாடினர். ரோஹித் அவுட்டானாலும், தவான் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். நானும் ரன் அடித்துவிட்டேன். ஹர்திக், தோனி ஆகியோரின் பங்களிப்பும் அணிக்கு உதவியது. நான் ஒரு பக்கம் நிதானமாக ஆடுவதென்றும், ஹர்திக் அடித்து ஆடுவதென்றும் முடிவெடுத்தோம். அதுவும் சரியாக நடந்தது. திட்டமிட்டபடி எல்லாமே நடகும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அது பேட்டிங்கின் முடிவில் கிடைத்தது. 320 என்பதைவிட, 350 என்ற ஸ்கோர் கூடுதல் நம்பிக்கை கொடுக்கும். பெளலர்களுக்கு அது உதவியது. இந்த வெற்றியைத் தொடரவேண்டும்.
விராட் கோலி
09 Jun 2019 11 PM

இந்தியா vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற போது, அதை முடிவுக்கு கொண்டுவந்தது இந்தியா தான் (2001) .

மீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்தது. அதை 2008ம் ஆண்டு முடித்து வைத்தது இந்தியா,

தற்போது, உலகக் கோப்பை சேஸிங்கில் தொடர்ச்சியாக (19 முறை) வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் சாதனையையும் முடித்து வைத்திருக்கிறது இந்தியா.

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 11 PM

12-ல் 4!

இந்தியா ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் வென்றிருக்கிறது.

1983 செம்ஸ்ஃபோர்டு 118 ரன்கள்

1987 டெல்லி 56 ரன்கள்

2011 அஹமதாபாத் 5 விக்கெட்டுகள்

2019 ஓவல் 36 ரன்கள்

09 Jun 2019 11 PM
இது முழு அணியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எல்லோருமே சிறப்பாக விளையாடினர். பெளலிங், ஃபீல்டிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது. சில அற்புதமான கேட்ச்கள் பிடித்தோம். வலைப்பயிற்சியில் நாங்கள் செய்யும் கடுமையான பயிற்சிகளுக்குக் கிடைக்கும் பலன் இது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதும், ஆட்டநாயகன் விருது வென்றிருப்பதும் சந்தோஷமாக இருக்கிறது. வெகுதொலைவிலிருந்து எங்களைப் பார்க்க வந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி.
ஷிகர் தவான்
09 Jun 2019 11 PM

ஆஸி பரிதாபம்!

ஆஸ்திரேலியா கடந்த பத்து ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிறது. அது சந்திக்கும் முதல் தோல்வி இதுதான்.
1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் சேஸ் செய்து தோற்றது ஆஸ்திரேலியா. அதன் பின் சேஸிங்கில் ஆஸ்திரேலியா தோற்றதே இல்லை.
தொடர்ச்சியாக 19 சேஸிங் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த சாதனையையும் இந்தியா முறியடித்தது
#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 11 PM

50 டாட் பால்கள்.. வார்னரா இது?

இன்றைய போட்டியில் மிகவும் மெதுவாக ஆடிய டேவிட் வார்னர், 84 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 50 டாட் பால்கள். ஒரு ஓப்பனர் இப்படி ஆடும்போது, மிடில் ஆர்டரில் அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். வார்னர், மீண்டும் பழைய வார்னராக வரவேண்டும்!

09 Jun 2019 11 PM
இந்தியா வெற்றி!
ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி! 352 என்ற இலக்கைத் துரத்திய ஆஸி அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் மட்டுமே எடுத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பெறும் நான்காவது வெற்றி இது. 
09 Jun 2019 11 PM
இந்தியாவுக்கு இது அசத்தலான வெற்றி.பேட்ஸ்மேன்கள் சிறப்பானதொரு முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை செட் செய்கிறார்கள். பவுலர்களின் பங்களிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் பர்பாமென்ஸை நினைவுறுத்துகிறது இப்போட்டி
ஹர்ஷா போக்ளே
09 Jun 2019 11 PM

ஆஸ்திரேலியா சறுக்கியது எங்கே?

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஒருசில தவறுகளைச் செய்தது. பெரண்டார்ஃபை எடுக்காதது, மேக்ஸ்வெல்லுக்கு சீக்கிரமே பெளலிங் கொடுத்தது, ஐந்தாவது பெளலிங் ஆப்ஷனை சரியாகப் பயன்படுத்தாதது, கவாஜாவை மிடில் ஆர்டரில் இறக்கியது என எக்கச்சக்க தவறுகள். இதை அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் சரிசெய்துகொள்வது அவசியம்.

09 Jun 2019 11 PM

அதிவேக 50!

இந்த உலகக் கோப்பைத் தொடரின் அதிவேக அரைசதத்தை நிறைவு செய்தார் அலெக்ஸ் கேரி. 25 பந்துகளில் 5 பெளண்டரி, 1 சிக்ஸருடன் அவர் அரைசதம் கடந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியர் ஒருவர் அடித்த அதிவேக அரைசதம் இதுதான்

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 10 PM
09 Jun 2019 10 PM
30 பந்துகளில் 69 ரன்கள்

ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்படுகிறது.

09 Jun 2019 10 PM

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்!

09 Jun 2019 10 PM

தவானின் காயம்?!

பேட்டிங் செய்தபோது கையில் காயமடைந்த தவான், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். ஆனால், அவர் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்யவே வரவில்லை. தொடக்கத்திலிருந்தே ஜடேஜாதான் களத்தில் இருந்தார். தவானின் காயம் எவ்வளவு தீவிரமானது என்று தெரியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி இன்னும் 4 நாள்களில் நடக்கவிருப்பதால், அதற்குள் அவர் காயத்திலிருந்து மீளவேண்டும்.

09 Jun 2019 10 PM

அதிரடியாக ஆடும் விக்கெட் கீப்பர் கேரியும், கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் கூல்டர்நைலும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா - 269/6 (43 ஓவர்)

09 Jun 2019 10 PM

மேக்ஸ்வெல்லை வெளியேற்றிய ஜடேஜாவின் அட்டகாச கேட்ச்

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 10 PM
விக்கெட் நம்பர் 6!
ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையான மேக்ஸ்வெல்லை (28 ரன்கள்) வெளியேற்றினார் சஹால். ஆஸ்திரேலியா - 244/6
09 Jun 2019 10 PM

ஒரே ஓவரில் 2 விக்கெட்

ஸ்டீவ் ஸ்மித்தைத் தொடர்ந்து ஸ்டாய்னிஸ் (டக்) விக்கெட்டையும் வீழ்த்தினார் புவி. 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 23 ரன்னுடன் களத்தில் உள்ளார். கடைசி 10 ஓவர்களில், அந்த அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவைப்படுகிறது.

09 Jun 2019 10 PM
ஸ்மித் அவுட்
ஸ்டீவ் ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியா 238/4
09 Jun 2019 10 PM

பும்ரா ஓவரில் 3 பெளண்டரிகள்

பும்ரா வீசிய 39-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பெளண்டரிகள் அடித்தனர். ஆஸ்திரேலியா - 233/3

09 Jun 2019 10 PM

இங்கிலாந்து மைதானங்களில் இதுவரை சேஸ் செய்யப்பட்ட அதிக டார்கெட்கள்

359 - ENGvPAK : ப்ரிஸ்டல் 2019
350 - ENGvNZ : நாட்டிங்ஹம் 2015
341 - ENGvPAK : நாட்டிங்ஹம் 2019
326 - INDvENG : லார்ட்ஸ் 2002
09 Jun 2019 10 PM
கவாஜா அவுட்
42 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவை வெளியேற்றினார் பும்ரா. ஆஸ்திரேலியா 202/3 (36.4 ஓவர்)
09 Jun 2019 9 PM
ஸ்மித் அரைசதம்

60 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், அவர் அடித்தது இரண்டு பெளண்டரியும், ஒரு சிக்ஸரும் மட்டும்தான். கடைசி 8 உலகக் கோப்பை போட்டிகளில் இது அவருடைய 7-வது 50+ ஸ்கோர்

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 9 PM
கிங் ஆஃப் கிளே!
12-வது முறையாக ஃப்ரென்ச் ஓப்பன் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால். இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-3 ; 5-7 ; 6-1 ;  6-1  என்ற செட் கணகில் வீழ்த்தி, தான் களிமண் தரையின் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்தார்
#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 9 PM

43 பந்துகளுக்குப் பிறகு பெளண்டரி

குல்தீப் வீசிய 32-வது ஓவரின் கடைசிப் பந்தில், கவாஜா பெளண்டரி அடித்தார். 43 பந்துகளுக்குப் பிறகு அடிக்கப்பட்ட முதல் பெளண்டரி. 33 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 9 PM
42 பந்துகள்... நோ பெளண்டரி
மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா பெளண்டரி அடிக்க முடியாமல் தடுமாறுகிறது. 23-வது ஓவரின் கடைசிப் பந்துக்குப் பிறகு பெளண்டரியே இல்லை. சஹால், ஹர்திக் இருவரும் மிகநேர்த்தியாகப் பந்துவீசிவருகின்றனர்.
09 Jun 2019 9 PM

இங்கிலாந்து மூன்றாவது இடம்

ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது இங்கிலாந்து. கூடுதல் நேர முடிவில் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருக்க, பெனால்டியில் 6-5 என வென்றது த்ரீ லயன்ஸ். இறுதிப்போட்டியில் இன்று இரவு போர்ச்சுகல், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 9 PM
வார்னர் அவுட்
84 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில், சஹால் பந்துவீச்சில் அவுட்டானார் டேவிட் வார்னர். மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டுத் தூக்கியடிக்க புவனேஷ்வர் குமாரிடம் கேட்சானார். ஆஸ்திரேலியா 133/2
09 Jun 2019 9 PM
ஆஸ்திரேலியா - 121/1

23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், ஸ்மித் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்து வருகின்றனர். கேதர் ஜாதவ் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது

09 Jun 2019 9 PM

அடுத்த விக்கெட் யாருக்கு?

09 Jun 2019 8 PM

வார்னர் அரைசதம்

வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிவரும் வார்னர் 76 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஸ்லோ இன்னிங்ஸில் 5 பெளண்டரிகள் அடித்துள்ளார்

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
09 Jun 2019 8 PM
ஆஸ்திரேலியா - 99/1
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 45, ஸ்மித் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
09 Jun 2019 8 PM

இந்திய பெளலர்களின் மெர்சல் பெளன்சர்!

வார்னர்
வார்னர்
09 Jun 2019 8 PM

தவறான முடிவு?

ஃபின்ச் அவுட்டானதும் மூன்றாவது வீரராக ஸ்மித்தைக் களமிறக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஒருவகையில் இந்த முடிவு அவர்களுக்குப் பாதகமாக அமையக்கூடும். ஏனெனில், கவாஜா மிடில் ஆர்டரில் ஆடிப் பழக்கம் இல்லாதவர். மூன்றாவது வீரராக ஆடுவதை விட ஓப்பனிங்கில்தான் சிறப்பாக ஆடுவார். ஓப்பனராக ஆடுவதுதான் தனக்கு சிறந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரை இன்னும் கீழே தள்ளியிருப்பது அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒருவேளை இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் ஆடவேண்டாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவிடம் ஜாதவ் தவிர்த்து ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லை எனும்போது, கவாஜாவைக் களமிறக்கத் தயங்கியிருக்கவேண்டியதில்லை!

09 Jun 2019 8 PM

ஃப்ரென்ச் ஓப்பன்

தற்போது நடந்துவரும், நடால் - டொமினிக் தீம் இடையிலான ஃப்ரென்ச் ஓப்பன் இறுதிப் போட்டியில் இரண்டு வீரர்களும் தலா 1 செட்டை வென்றுள்ளனர். முதல் செட்டை 6-3 என நடாலும், அடுத்த செட்டை 7-5 என தீமும் கைப்பற்றினர்.

Nadal
Nadal
09 Jun 2019 8 PM
ஃபின்ச் அவுட்
முதல் விக்கெட்டை இழந்தது ஆஸி. ஆஸ்திரேலியா 61/1
09 Jun 2019 8 PM

நல்ல தொடக்கம்! 

ரோஹித் - தவான் பார்ட்னர்ஷிப் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கியதுபோல், ஃபின்ச் - வார்னர் கூட்டணியும் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. 13 ஓவர்களில் 59 ரன்கள்தான் என்றாலும், விக்கெட் இழக்காதது அவர்களுக்குச் சாதகம்தான். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் இப்படியே தாக்குப்பிடித்து ஆடி, அதன்பின் இன்னிங்ஸைக் கட்டமைத்தால், நிச்சயம் இந்தியாவுக்குக் கடுமையான சவால் கொடுக்க முடியும்!

09 Jun 2019 8 PM
09 Jun 2019 8 PM

"ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியைப் பயன்படுத்துவீர்களா?"

"ஷார்ட் பால்களில் யாருமே திணறவது சகஜம்தான். உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களும்கூடத் தடுமாறுவார்கள். அந்த ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடாது. அவர்களை ஆச்சர்யப்படுத்தவேண்டும்"

- ரோஹித் ஷர்மா

09 Jun 2019 8 PM

ஆஸி - 29/0

9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது

09 Jun 2019 6 PM

50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. தவான் 117, கோலி 82, ரோஹித் 57 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி, கோலி இருவரையும் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ்.

09 Jun 2019 6 PM
😔😔😔
இதுவரை எந்த உலகக் கோப்பை போட்டியிலும், எந்த அணியின் முதல் நான்கு வீரர்களும் அரைசதம் கடந்ததில்லை. இன்று, இந்திய வீரர்கள் ரோஹித், கோலி அரைசதம் கடக்க, தவான் சதமடித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மட்டும் அந்த 2 ரன்களை அடித்திருந்தால், இந்தியா அந்தச் சாதனையைப் படைத்திருக்கும்.
09 Jun 2019 6 PM
300!
உலகக் கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக 300 ரன்களைக் கடந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பையில் இதற்கு முன் 11 முறை மோதியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட இந்திய அணி 300 ரன்களைத் தொட்டதில்லை. அதிகபட்சமாக, 1987-ம் ஆன்டு நடந்த லீக் போட்டியில் 289 ரன்கள் அடித்திருந்தது. ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக 3 முறை 300 அடித்துள்ளது. அதில் இரன்டு நாக் அவுட் போட்டிகள் (2003 பைனல், 2015 செமி பைனல்).😔
09 Jun 2019 6 PM

உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகள்

27 இந்தியா

26 ஆஸ்திரேலியா

23 இலங்கை

17 வெஸ்ட் இண்டீஸ்

15 நியூஸிலாந்து

14 தென் ஆப்பிரிக்கா / பாகிஸ்தான் / இங்கிலாந்து

09 Jun 2019 6 PM
09 Jun 2019 6 PM

கோலிக்கு வார்னிங்?

கூல்டர்நைல் ஓவரில் சிங்கிள் ஓடும்போது பிட்சுக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடினார் கோலி. இன்னொருமுறை இதேபோல் பிட்சுக்கு நடுவில் ஓடினால் எச்சரிக்கப்படலாம்.

கோலி ஒருநாள் போட்டிகளில் ஐம்பதாவது அரைசதம் அடித்துள்ளார்.
55 பந்துகளில் 3 பெளண்டரியுடன் அரைசதம் கடந்தார்.
09 Jun 2019 6 PM

தவான் அவுட்

கோலி ஒருநாள் போட்டிகளில் ஐம்பதாவது அரைசதம் அடித்துள்ளார்.117 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ஷிகர் தவான். ஃபுல் லென்த் பந்தை தூக்கியடிக்க, அது பெளண்டரி எல்லையில் இருந்த லயானின் கையில் கேட்சானது. 109 பந்துகளில் 16 பெளண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

தவான் அசத்தல் சதம்

95 பந்துகளில் சதமடித்து அசத்தினார் ஷிகர் தவான். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 17-வது சதம் இது! ஐ.சி.சி தொடர்களில் அவர் அடித்திருக்கும் ஆறாவது சதம் இது.ஆட்டத்தின் தொடக்க கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பால் தாக்குதலில் கையில் காயம் அடைந்தாலும், அதன் பிறகு மிகவும் அட்டகாசமாக விளையாடினார். ஒருபக்கம் தவான், கோலி இருவரும் நிதானம் காட்ட, இவரது அதிரடி ஆட்டம், இந்தியாவின் ரன்ரேட்டைச் சீராக வைத்திருக்கவும் உதவியிருக்கிறது
09 Jun 2019 5 PM

ரோஹித் அவுட் ... கோலி நிதானம்

31.0 கோலி 20 (26) தவான் 97 (90) இந்தியா 178/1 ஸ்டாய்னிஸ் 4-0-31-0

28.0 தவான் 84 (80) கோலி 12 (18) இந்தியா 157/1 மேக்ஸ்வெல் 3-0-14-0

27.0கோலி 10(16) தவான் 82(76) கம்மின்ஸ் 6-0-21-0 இந்தியா 153-1
26.0 தவான் 82 (75) கோலி 5 (11) ஜம்பா 5-0-40-0 இந்தியா 147-1
25.0 தவான் 73 (72) கோலி 3 (8) கூல்டர்-நைல் 6-1-35-1 இந்தியா 136-1
24-0 கோலி 1(6) தவான் 71(68) ஜம்பா 4-0-29-0 இந்தியா 132/1
23.0 கோலி 0 (3) தவான் 67 (65) கூல்டர்-நைல் 5-1-31-1
22.0 தவான் 67 (65) ரோஹித் 57 (67) ஜம்பா 3-0-24-0
09 Jun 2019 4 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100+ பார்ட்னர்ஷிப் உலகக் கோப்பையில்

160 : ஸ்மித் - டி வில்லியர்ஸ் 2007

127 : தவான் - ரோஹித் 2019

107 : கூச் - இயான் போத்தம் 1992

09 Jun 2019 4 PM
21.0 ரோஹித் 55 (65) தவான் 63(61) ஸ்டார்க் 5-0-22-0
20.0 தவான் 62 (60) ரோஹித் 46(60) ஸ்டாய்ன்ஸ் 3-0-23-0
19.0 தவான் 53 (57) ரோஹித் 44 (57) ஸ்டார்க் 4-0-12-0
18.0 ரோஹித் 42(54) தவான் 51(54) ஸ்டாய்ன்ஸ் 2-0-12-0
17.0 தவான் 47 (51 ) ரோஹித் 40 (51) கூல்டர் நைல் 4-0-31-0
16.0 தவான் 46 (50) ரோஹித் 32 (46) ஸ்டாய்ன்ஸ் 1-0-6-0
09 Jun 2019 4 PM

மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் இந்திய ஓப்பனர்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதை வெறும் 37 இன்னிங்ஸில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ரோஹித் ஷர்மா

Rohit
Rohit
AP
15.0 ரோஹித் 31 (44 ) தவான் 41 (46) நைல் 3-0-22-0

இந்த ஆண்டு மொஹாலியில் நடந்த ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஒன்றின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது ரோஹித் - தவான் கூட்டணி. அந்தப் போட்டியில் 193 ரன்கள் அடித்தவர்கள், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய மற்ற 7 போட்டிகளில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சராசரி : 13.3! ஆனால், இன்று சிறப்பாக விளையாடி 50 ரன்களைக் கடந்திருக்கிறது இந்த கூட்டணி

Dhawan
Dhawan
14.0 ரோஹித் 30(41) தவான் 36 (41 ) ஜம்பா 2-0-18-0

மேக்ஸ்வெல் எதற்கு?

மேக்ஸ்வெல்லை முன்கூட்டியே பந்துவீச அழைத்துத் தவறு செய்திருக்கிறார் ஃபின்ச். கையில் காயம் அடைந்த தவான். அந்த வலியை உணர்ந்த நேரத்தில் பந்துவீச்சில் மாற்றம் கொண்டுவந்து அவருக்கு பேட்டிங்கை எளிதாக்கியிருக்கிறார்கள். கம்மின்ஸின் ஐந்தாவது ஓவரிலும், கூல்டர்நைலி இரண்டாவது ஓவரிலும் தவான் சற்று தடுமாறவே செய்தார். இன்னும் 2 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கொடுத்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு அது பலன் கொடுத்திருக்கும். ஃபின்ச் அதைத் தவறவிட்டுள்ளாரோ என்று தோன்றுகிறது.

09 Jun 2019 4 PM

ஒருவழியாய் பௌண்டரி அடித்த ரோஹித்

13.0 தவான் 34 (41) ரோஹித் 25 (37) மேக்ஸ்வெல் 2-0-10-0

தவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஓவர்களுக்கு நடுவே டீம் ஃபிசியோ தவானுக்கு உதவி செய்தார். அடிபட்ட பிறகு எல்லாப் பந்துகளையும் பேக் ஃபூட்டிலேயே எதிர்கொண்டிருக்கிறார் தவான்.

Rohit
Rohit
AP
12.0 11 ரன்கள் ரோஹித் 19 (33) தவான் 33 (39) ஜம்பா 1-0-11-0
11.0 3 ரன்கள் தவான் 28 (37) ரோஹித் 13 (29) மேக்ஸ்வெல் 1-0-3-0
09 Jun 2019 3 PM

முதல் பவர்ப்ளே 41/0

10.0 2 ரன்கள் 41/0 ரோஹித் 11 (25) தவான் 27 (35) நைல் 2-0-16-0
9.0 3 ரன்கள் 39/0 ரோஹித் 10 (24) தவான் 26 (30) கம்மின்ஸ் 5-0-15-0
ரோஹித் சந்தித்த முதல் 20 பந்துகளில் 14 பந்துகள் டாட்
09 Jun 2019 3 PM

தவான் ஹாட்ரிக் பவுண்டரி

8.0 14 ரன்கள் தவான் 24 (26) ரோஹித் 9 (22) கூல்டர் நைல் 1-0-14-0

கூல்டர்நைல் ஓவரில் ஹாட்ரிக் பெளண்டரி அடித்து அசத்தியுள்ளார் ஷிகர் தவான். 8-வது ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் பெளண்டரி அடித்தார் தவான்.

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக தான் அடித்த 92 ரன்களையும், வாரி வழங்குவேன் என சபதம் எடுத்திருக்கிறாரா நைல். பவுலிங் மோசம் . கூல்டர் நைல் வீசிய கடைசி பந்து பந்துகள்.

7.0 1 ரன் ரோஹித் 9 (22) தவான் 11 (20) கம்மின்ஸ் 4-0-12-0
Stark
Stark

ஓவல் ஆடுகளம் பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. முதலிரண்டு போட்டிகளில் நன்றாக ஸ்விங் செய்த ஸ்டார்க்கால், இன்று எதுவும் செய்ய முடியவில்லை.

09 Jun 2019 3 PM

ஆட்டத்தின் முதல் பவுண்டரி தவான்

6.0 3 ரன்கள் ரோஹித் 9 (21) தவான் 10 (15) ஸ்டார்க் 3-0-8-0
5.0 7 ரன்கள் தவான் 10 (14) ரோஹித் 7 (16) கம்மின்ஸ் 3-0-11-0
dhawan
dhawan
AP

4.5 அவுட்சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை , கவர்ஸ் பக்கம் பவுண்டரிக்கு அனுப்பினார் தவான்.

09 Jun 2019 3 PM

இதுவரையில் NO பௌண்டரி

4.0 : ரோஹித் 7 (16) தவான் 3 (8) ஸ்டார்க் 2-0-6-0
"உலகக் கோப்பையில் கோலியின் கேப்டன்ஷிப் நன்றாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஃபீல்டிங், பெளலிங் மாற்றங்கள் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாகப் பயன்படுத்தினார். இன்றும் பிட்சை நன்றாகப் புரிந்துகொண்டு, டாஸில் சரியான முடிவை எடுத்திருக்கிறார்".
கங்குலி
மூன்றாவது ஓவர்: தவான் 2 (5) ரோஹித் 6 (13) பேட் கம்மின்ஸ் 2-0-4-0
09 Jun 2019 3 PM

கேட்ச் டிராப்

இரண்டாவது ஓவர் : ரோஹித் 5 (10), தவான் 1 (2) ஸ்டார்க் பந்துவீச்சு

ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது பந்தை அடிக்க முயன்றார் ரோஹித். ஸ்குயர் லெக்கில் இருந்து அதை கேட்ச் பிடிக்க முயன்றார் கூல்டர் நைல். அட்டகாசமான முயற்சி!. ஆனால் கேட்ச் டிராப். தனது லைப்ஃ லைனை இந்தப் போட்டியில் பயன்படுத்திக்கொள்வாரா ரோஹித்

முதல் ஓவர் : ரோஹித் ஷர்மா 2 (6), தவான் 0 (0) , பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு

09 Jun 2019 2 PM

தோனியின் கிளவுஸ்

முதல் போட்டிக்கும் இரண்டாம் போட்டிக்கும் இடையே வைரலான மற்றுமொரு விஷயம் தோனியின் மிலிட்டரி கிளவுஸ். தோனி இன்று வேறு கிளவுஸ் அணிந்து விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தவறு செய்துவிட்டதா ஆஸ்திரேலியா?

இந்தப் போட்டிக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெரண்டார்ஃப் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுகிறார்கள். உதாரணமாக, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தவான் 12 முறை (சராசரி : 34.4) ஆட்டமிழந்துள்ளார். தோனி 9 முறை (சராசரி : 24.77). இவர்கள் மட்டுமல்லாமல் ரோஹித், கோலி உள்ளிட்டவர்களும் தடுமாறுகிறார்கள். அதனால் கூல்டர்நைலுக்குப் பதில் பெரண்டார்ஃப் இறங்குவார் என்றார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அவர்களுக்குப் பின்னடைவாக அமையுமா?

09 Jun 2019 2 PM

STATS

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் அடிக்க ரோஹித் ஷர்மாவுக்கு தேவை : 20 ரன்கள்
ஐசிசி தொடர்களில் தவானின் ஏவரேஜ் : 63
#INDvAUS
#INDvAUS
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் சதங்கள் : 8
இந்தியாவில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் : 156
1999 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர், ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வரலாற்றி தோற்றது இல்லை.
09 Jun 2019 2 PM

இந்தியாவுக்கு எதிராக இந்தியர்களையே பயன்படுத்தும் ஆஸ்திரேலியா

சுழற்பந்துவீச்சாளர்களைச் சமாளிப்பதற்காக ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக ஒரு யுக்தியைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், ஸ்பின்னுக்கு எதிராகத் தடுமாறியதால், வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். அதுவும் குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னைச் சமாளிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இதற்காக இரண்டு இந்திய ஸ்பின்னர்களையே கடந்த ஓராண்டாகப் பயன்படுத்திவருகின்றனர். ஒருவர், ஹரியானாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் பர்தீப் சாஹு. இவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்சுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடியவர். இன்னொருவர் கேரளாவைச் சேர்ந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் கே.கே.ஜியாஸ். இவர்கள் சஹால், குல்தீப் சுழலைச் சமாளிக்க உதவுவார்கள் என்று நம்புகிறது ஆஸ்திரேலியா!

09 Jun 2019 2 PM

டாஸ்

இந்தியா டாஸ் வின் : பேட்டிங்

கோலி

"ஆட்டம் போகப்போக பிட்ச் ஸ்லோவாகிவிடும். அதனால், முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக அமையும். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ஸ்கோர் போர்டு பிரஷர் இருக்கும். அதை பெளலர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதால், பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும். முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில் அணியை ஏன் மாற்றவேண்டும்?"

INDIA XI : ரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், பாண்டியா, புவி, குல்தீப், பும்ரா, சஹல்.

ஆரோன் பின்ச்

நானும் பேட்டிங் தான் தேர்ந்தெடுத்து இருப்பேன். கோலி சொல்லும் அதே காரணங்கள் தான். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதே அணியுடன் மீண்டும் களம் இறங்குகிறோம்.

AUS XI : வார்னர், ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா
09 Jun 2019 2 PM

இன்னும் சில நிமிடங்களில் டாஸ்

இந்தியா கடந்த 25 ஆண்டுகளில் , உலகக் கோப்பைத் தொடரில் 8-3 என்கிற முறையில் ஆஸ்திரேலியா தான் வென்று இருக்கிறது. இன்று அந்த வரலாற்றை மாற்றி அமைக்குமா, கோலியின் இந்திய அணி.

8-3 உலகக்கோப்பை வரலாற்றை மாற்றி எழுதுமா கோலியின் படை #INDvAUS
#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
அடுத்த கட்டுரைக்கு