Published:Updated:

8-3 உலகக்கோப்பை வரலாற்றை மாற்றி எழுதுமா கோலியின் படை #INDvAUS

கார்த்தி
David Warner
David Warner ( Aijaz Rahi, AP )

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு சென்றுவிடலாம். ஏனெனில் டாப் 4 அணிகள் இவை தான்.

'இறுதிவரை போராடு' என்பது தான் என்றும் ஆஸ்திரேலியாவுக்கான தாரக மந்திரம். அவர்களது முதல் போட்டியில் அஃப்கானிஸ்தானை வென்றதில் 'ஆஸ்திரேலிய ஸ்பெஷல்' என எதுவும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது போட்டி எப்போதும் நடக்கும் 'ஆஸ்திரேலிய ஸ்பெஷல்' போட்டி. ' சொடக்கு பால் போட்டு அவுட்டாக்குவது போல்' இந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸ் ஷார்ட் பாலை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

Andrew Russell
Andrew Russell

முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பயன்படுத்தியது இதுதான். அப்போதே , 'இதே எண்ணத்தோட ஆஸ்திரேலிய பக்கம் போயிடாதீங்க, டெரரா இருப்பாணுக' என அட்வைஸ் செய்தனர் விமர்சகர்கள். ஆனாலும், மீண்டும் அதைப் பயன்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ்.

ஆண்ட்ரே ரஸல் சொன்னது போலவே, பாகிஸ்தானை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஷார்ட் பால் டெக்னிக் வெஸ்ட் இண்டீஸுக்கு கைகொடுத்தது. உஸ்மான் கவாஜா இரண்டு முறை ஹெல்மெட்டில் அடிவாங்கினார். பாடி லைனில் வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறினார் ஆரோன் ஃபின்ச்.

`டெய்ல் எண்டர்னா சும்மா இல்ல!' வெஸ்ட் இண்டீஸுக்குப் பாடம் எடுத்த கூல்டர் நைல் #AUSvWI

38/4 என தத்தளித்த ஆஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரியின் புண்ணியத்தால் 100 ரன்களைக் கடந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என நினைத்தது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடைசி வீரரால்கூட வெஸ்ட் இண்டீஸின் வெற்றியைப் பறிக்க முடியும் என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்க மாட்டார்கள். உள்ளே நுழைந்தார் கூல்டர் நைல். அவர் களமிறங்கியபோது ஸ்கோர் 147-6. அவர் அவுட்டான போது ஸ்கோர் 284-9.

அதற்கும் அந்தப் போட்டிக்கு முன்னர் கூல்டர் நைலின் ODI சராசரி 12.83.

Coulter-Nile
Coulter-Nile
60 பந்துகள்... 4 சிக்ஸர்... 8 பவுண்டரி... 92 ரன்கள். அந்த நாளின் ஹீரோவானார் நைல்
#AUSvWI

இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ( உபயம் மிட்சல் ஸ்டார்க் 10-1-46-5 ) வெஸ்ட் இண்டீஸை வென்றது. இதுதான் ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆஸ்திரேலிவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறது. அவர்கள் என்றெல்லாம் ஃபார்மில் இல்லையோ, அன்றெல்லாம் அவர்களை மீண்டும் ஃபார்மாக்கி அழகு பார்க்கும் இந்தியா.

பேக் ஃபூட்டில் பந்துகளை எதிர்கொள்ள வீரர்கள் சிரமப்படுகிறார்கள். அதைவிடவும், ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர்கள் எதிர்கொள்வது கவலை அளிக்கிறது
ரிக்கி பான்டிங்

2017ம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் வரை, ஆஸ்திரேலியா விளையாடிய 33 ஒரு நாள் போட்டிகளில் 8ல் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. 23 தோல்விகள். 2018ம் ஆண்டு ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா பயணித்தது இங்கிலாந்து அணி. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் என எல்லா இடங்களிலும் மண்ணை கவ்வியது ஜாம்பவான் ஆஸ்திரேலியா. மீண்டும் ஜூனில் இங்கிலாந்துடன் போட்டி. அதுவும் இந்த முறை இங்கிலாந்து மைதானங்களில். ஓவல், கார்டிஃப், நாட்டிங்ஹாம், மான்செஸ்டர் என மைதானங்களின் பெயர்கள் மட்டுமே மாறின. ஆஸ்திரேலிவுக்கான வீழ்ச்சி எழுதப்படிருந்த சமயம் அது.

அவ்வளவு ஏன், இந்தியாவே 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் அடிலெய்டு, மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 2-1 என அந்தத் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்றது இந்தியா. ஆனால், உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையானது ஆஸ்திரேலியா. சில ஆண்டுகளுக்கு முன்னர், 2015 உலகக் கோப்பைக்கு முன், மைக்கல் கிளார்க்கை ஃபார்முக்கு அழைத்து வந்தது இந்தியா. இந்த சீசனில் நாம் ஃபார்முக்கு திருப்பிய பிளேயர் தற்போதைய கேப்டனான ஆரோன் ஃபிஞ்ச்

finch
finch

நாக்பூரிலும், ஐதராபாத்திலும் தோற்ற ஆஸ்திரேலிவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது இந்தியா. 3-2 அந்தத் தொடரை வென்றது. பின்னர், பாகிஸ்தானை 5-0 என வீழ்த்தியது. தொடர்ச்சியாக பத்து வெற்றிகள் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா.

இந்தியா :

இந்தியாவைப் பொறுத்தவரை, அட்டகாசமாக உலகக்கோப்பையை ஆரம்பித்திருக்கிறது. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை சேவாக் சதத்துடன் ஆரம்பித்துவைத்தார். இந்த முறை ரோஹித் அதை செய்திருக்கிறார். பும்ரா அசத்தல் ஃபார்மில் இருக்கிறார். மிடில் ஓவர்களில் இந்தியா அதன் ரிஸ்ட் ஸ்பின்னர்களை பெரிதும் நம்பியிருக்க வேண்டும்.

ஷார்ட் பாலை எதிர்கொள்வது எல்லா வீரர்களுக்கும் கடினமான ஒன்று தான். அதை வைத்து ஆஸ்திரேலியாவைக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது
ரோஹித் ஷர்மா

இந்தியாவின் மிடில் ஆர்டர் இன்னும் அச்சம் தரும் ஒன்றாகவே இருக்கிறது. தவான், ரோஹித், கோலி அவுட் ஆனால் இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது. ஆபத்பாந்தவன் தோனியை இன்னும் எத்தனை போட்டிகளுக்கு இந்தியா நம்ப வேண்டும் என தெரியவில்லை.

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு சென்றுவிடலாம். நான் சாட்சி!.

INDvAUS
INDvAUS

இந்தியா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. ஓர் ஐசிசித் தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது அப்போதுதான். சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா.

ஓவல்

உலகக் கோப்பையின் ஆரம்ப போட்டி ( ENGvRSA ) நடந்த மைதானம் இது. டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா , இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க 300+ அடித்தது இங்கிலாந்து. மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஓவலில் போட்டி. இந்த முறையும் டாஸ் வெல்கிறது தென் ஆப்பிரிக்கா. மீண்டும் தலை கீழாகக் குதித்தது. இந்த முறை வங்கத்தை பேட் செய்ய அழைத்தது. மன்னனின் அம்பைப் பார்த்து கரடி துப்பியது போல் 330 எடுத்தது வங்கம். பங்கம் ஆனது தென் ஆப்பிரிக்கா.

ஓவலில் டாஸ் வெல்லும் அணி, பேட்டிங் எடுப்பது தான் நல்லது. 300+ ஸ்கோரும் அடிக்க வேண்டும். வங்கதேசம் எடுத்த 244 ரன்களைத் திக்கித் திணறி சேஸ் செய்தது நியூஸிலாந்து. இல்லையெனில் கத்துக்கிறேன் சார் என போட்டி முடித்ததும் பேட்டி கொடுக்க வேண்டியதிருக்கும்.

உத்தேச அணி : ஆஸ்திரேலியா

#INDvAUS
#INDvAUS

வார்னர், ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா

உத்தேச அணி : இந்தியா

புவிக்கு பதிலாக முகமது ஷமி களம் இறக்கப்படலாம். இல்லை சஹால், குல்தீப் ஒருவருக்குப் பதிலாக ஜடேஜாவையும் இறக்க இருக்கிறார்களா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

#INDvAUS
#INDvAUS
ஆஸ்திரேலிவுக்கான எதிரான போட்டி, ஷமி டிரம்ப் கார்டாக இருப்பார்
ஹர்ஷா போக்ளே

ரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், பாண்டியா, ஷமி/ புவி, குல்தீப், பும்ரா, சஹல்.

அடுத்த கட்டுரைக்கு