Published:Updated:

அண்டர்டாக்ஸ் நியூசி... கலக்கல் இந்தியா... ஃபைனல் நோக்கி நகர்வோம்! #INDvNZ

கார்த்தி
Kohli
Kohli

செமி ஃபைனலுக்கு, ஃபைனலுக்கு புது பிட்ச் இருக்கும் என்பதால் சேஸிங் சற்று கை கொடுக்கலாம். ஆனால், டாஸ் வென்றதும் பேட்டிங் செய்வதே சிறப்பு என்கிறது ஓல்டு டிராஃப்டு மைதானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா அரையிறுதிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இந்தியா டாப் ஒன் பொசிஷனில் அரையிறுதிக்குச் செல்லும் என்றெல்லாம் யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்தியாவைவிட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் பலம் பொருந்தியதாகவே இருந்தன. 2019ல் இந்தியாவின் பர்பாமன்ஸும், ஐபிஎல் இந்தியா வீரர்களின் உடலை அதீதமாக வேலை வாங்கியதும் இரு முக்கிய காரணங்கள். அதன் காரணமாகவே பிசிசிஐக்கு மேல் இயங்கும் ஐசிசி இந்தியாவுக்கு ஏற்ப உலகக் கோப்பை அட்டவணையை வடிவமைத்தது.

Dhoni
Dhoni
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என் சாய்ஸ். இந்தியாவும் இங்கிலாந்தும் ஃபைனலுக்கு முன்னேறும்
யுவராஜ்

ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கான எதிரான தொடரில் 2-0, அப்படியே அங்கிருந்து நியூசிலாந்துக்குச் சென்று 4-1, பிறகு ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தோற்கிறது. முதல் முறையாக இந்தியாவின் கன்சிஸ்டென்ஸி மீது விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். மேலும் இங்கிலாந்தில் சென்று விளையாடுகிறது. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. 2018ல் இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது .

அதில் முதல் போட்டியில் குல்தீப் ஆறு விக்கெட் எடுக்கிறார். இந்தியா வெல்கிறது. முதல் போட்டியில் 2.50 என இருக்கும் குல்தீப்பின் எக்கானமி, அடுத்த போட்டியில் மூன்று விக்கெட் எடுத்தாலும், 6 ரன்களைக் கடக்கிறது. அதற்கடுத்த போட்டியில் குல்தீப்பால் இங்கிலாந்து வீரர்களை விக்கெட் இழக்கச் செய்ய முடியவில்லை. சஹால் மூன்று போட்டிகளில் வீசிய 30 ஓவர்களில் எடுத்தது இரண்டு விக்கெட்டுகள்தான். ஆக, இந்தியா இங்கிலாந்தில் ஸ்பின் என்னும் அஸ்திரத்தையும் பயன்படுத்த இயலாது என்னும் நிலைன். இங்கிலாந்திடம் இந்தியா லீக் போட்டியில் தோற்றதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அதையெல்லாம் கடந்து இந்தியா சாதித்திருக்கிறது. ஒரு வகையில் இங்கிலாந்தைச் சந்திக்காமல் நியூசிலாந்தை சந்திப்பதென்பது இந்தியாவுக்கு நல்லதொரு முடிவுதான். ஏனெனில் இங்கிலாந்துடன் லீக் போட்டியில் நமது எந்தவித பாட்ஷாவும் பலிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

`இவர்கள் இருவரையும் ப்ளேயிங் லெவனில் சேர்க்கலாம்!’ - சச்சின் சொல்லும் காரணம்
இந்த முறை இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்தியாவின் சீமர்கள் சாதிப்பார்கள். இந்தியா One of the Favourites
கங்குலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் பலம்.

ரோஹித் ஷர்மா

க்ரிக்இன்ஃபோ தளத்தில் அங்கிருக்கும் விமர்சகர்களிடம் யார் இந்த முறை ப்ளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் வாங்குவார் என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. 11ல் ஐந்து பேர் பட்லர் என்கிறார்கள். சிலர் கோலி, பும்ரா, அதில் ரஷித், தவான் என்றனர். யாரும் ரோஹித்தை ப்ளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் வரையெல்லாம் யூகிக்கவில்லை. ரோஹித்தின் இந்த சீரிஸ் பர்பாமன்ஸ் உண்மையிலேயே வேறு லெவல். இந்தத் தொடர் முழுக்கவே ரோஹித் சொல்வதை அவரது பேட் கேட்டது. அவர் நினைத்த பக்கமெல்லாம் பந்து பௌண்டரி லைனை பதம் பார்த்தது. ஒன்பது போட்டிகளில் ஐந்து சதம், ஒரு அரைசதம். கடைசி மூன்று போட்டிகளில் அவர் தன் சதத்தைக் கடந்ததும் அவுட் ஆகிவிடுகிறார் என்னும் சிறுகுறை இருந்தாலும், அவரின் பேட்டிங் டெக்னிக் ஆச்சர்யமடையவைக்கிறது. அதுவும் டோர்னமென்ட்டின் ஆரம்பத்தில் தவான் காயம் காரணமாக வெளியேறுகிறார். தனது பேட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும், அதே சமயம் புதிதாக ஓப்பனராக களமிறங்கும் கே.எல். ராகுலுக்கும் அதீத பிரெஷரை தந்துவிடக்கூடாது. முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறார்.

Rohit Sharma
Rohit Sharma

ஒரு மும்பைகர் என்னும் அரசியல் ரோஹித்தை முதல் 100 ஒரு நாள் போட்டிகளைக் கடக்க வைத்திருக்கலாம். ஆனால், சச்சினுக்குப் பின்னர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த ஓப்பனர் என்றால், அது ரோஹித் தான். சேவக்கின் அதிரடி, கம்பீரின் பொறுப்பு என எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறார். ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு டெக்னிக்கலாக இருக்கின்றன. இந்தத் தொடரில் 14 சிக்ஸ் (அதில் புல் ஷாட் மட்டும் 7 ). கெய்ல் அளவுக்கோ, அல்லது ரஸ்ஸல் அளவுக்கோ அது அசுரத்தனமான சிக்ஸ் இல்லை. தோனி அடிப்பது போல், அது ஹெலிகாப்டர் ஷாட் இல்லை. ஆனால், அது பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி. ரபாடா பந்துவீச்சில் ரோஹித்தை டிராப் செய்கிறார் டுப்ளெஸ்ஸி. ரபாடாவின் மூன்றாவது ஓவரில் தவான் அவுட். மோரிஸ் 4 ஓவர்களுக்கு பத்து ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். ரபாடா 4 ஓவர்களுக்கு 18 ரன்கள். கோலி தன் முதல் பத்து பந்துகளில் சிங்கிள் மட்டுமே எடுத்திருந்தார். ஒட்டுமொத்த பிரஷரையும் கூலாக தென் ஆப்பிரிக்கா பக்கம் திருப்பினார் ரோஹித். மீண்டும் ரபாடா பந்து வீசுகிறார். ஃபைன் லெக் திசையில் 67 மீட்டரில் ஒரு சிக்ஸ். அலுங்காமல் குலுங்காமல், அலட்டிக் கொள்ளாமல் ஒரு சிக்ஸ். அந்த ஓவர் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி. இதுதான் ரோஹித்.

ரோஹித் ஷர்மா (647 ), கோலி (442) , ராகுல் ( 360) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவாக ரன் சேர்க்கிறார்கள்.

பும்ரா

bumrah
bumrah

இந்த சீசனில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பௌலர் பும்ரா. கோலி இறுதி ஓவர்களில் பும்ராவிடம் பந்தைக் கொடுக்கும் போதெல்லாம், யார்க்கர்கள் வந்து விழுந்தன. அதிக விக்கெட் (17 - 8 இன்னிங்ஸ்) எடுத்தவர்கள் பட்டியலில் குறைவான எக்கானமி ( 4.48) இருப்பது பும்ராவுக்குத்தான்.

பௌலிங் ஆப்சன்

இந்தியாவுக்கு தற்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்னை யாரை விளையாட வைப்பது என்பதுதான். மூன்று விக்கெட் கீப்பர்களுடன் விளையாடிவருகிறது இந்தியா. பெரும்பாலான போட்டிகளில் ஆறாவது பௌலிங் ஆப்சன் என்பது இல்லை. ஐந்து பௌலர்கள் ஆறு பேட்ஸ்மேன்கள் இதுதான் இந்தியாவின் காம்பினேசன். வென்றுகொண்டே இருப்பதால், இதில் பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. கங்குலி, சச்சின், சேவக், யுவராஜ் என இந்தியாவில் எப்போதும் பார்ட் டைமர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய பார்ட் டைமர்கள் தான் பார்ட்னர்ஷிப் பிரேக்கர்களாக பல போட்டிகளில் இருப்பார்கள். ஓர் உருப்படியான கோச் இருந்தால், இதையெல்லாம் சுட்டிக்காட்டி அணியில் ஒரு பார்ட் டைம் பௌலர் பற்றி ஆலோசித்திருப்பார்கள். ஆறாவது பௌலர் என்றால் கேதார் ஜாதவ் வேண்டுமா என்கிறார்கள். நமக்கு வாய்த்திருக்கும் ரவி சாஸ்திரிகள் எல்லாம் இறுதிவரை , ' சூப்பர் கேப்டன் ' எனச் சொல்லும் ஆமாம்சாமிகள் தான். என்ன செய்வது.

Kuldeep Yadav
Kuldeep Yadav

இந்தியாவின் சஹாலும் சரி, குல்தீப்பும் சரி லெக் ஸ்பின்னர்கள். நியூசிலாந்து அணி லீக் போட்டிகளில் , லெக் ஸ்பின்னை சிறப்பாக கையாண்டு வருகிறது. 199 பந்துகளில் 144 ரன்கள் ( 6 போட்டிகளில் ) எடுத்திருக்கிறது நியூசிலாந்து. இந்த று போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களால் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது.

மைதானம்

ஓல்டு டிராஃபோர்டு , மான்செஸ்டர்
chahal
chahal

போட்டி நடக்கும் ஓல்டு டிராஃபோர்டு மைதானம் சுழலுக்குச் சாதகம் இல்லாத ஒன்று. பாகிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகளுடன் இந்தியா இங்குதான் விளையாடியது. குல்தீப்பும் சஹாலும் இணைந்து 32 ஓவர்கள் வீசியுள்ளனர். எடுத்த விக்கெட்டுகள் ஐந்து. குல்தீப்பின் எக்கானமி 3.20. சஹாலின் எக்கானமி 6.60.

டெத் ஓவர்கள்

shami
shami

டெத் ஓவர்களில் ஷமியைவிடவும் புவி சிறப்பாகப்பந்துவீசுகிறார். நான்கு இன்னிங்ஸில் 14 விக்கெட் வீழ்த்தி டாப் டென்னில் இருக்கிறார் ஷமி. ஆனால், டெத் ஓவர்களில் அவரது எக்கானமி 9.62. டெத் ஓவர்களில் 53 பந்துகளில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். ஆறு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். டெத் ஓவர்களில் 66 பந்துகளில் 78 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் புவி. அவரது டெத் ஓவர் எக்கானமி 7.09

பௌலிங் பர்பாமன்ஸ்

பும்ரா 8 - 74 ஓவர்கள் - 8 மெய்டன்கள் - 332 ரன்கள் - 17 விக்கெட்
ஷமி 4 - 35.1 ஓவர்கள் - 2 மெய்டன்கள் - 193 ரன்கள் - 14 விக்கெட்
சஹல் 7 - 64 ஓவர்கள் - 0 மெய்டன்கள் - 379 ரன்கள் - 11 விக்கெட்
பாண்டியா 8 69 ஓவர்கள் 1 மெய்டன் - 392 ரன்கள் - 9 விக்கெட்

Stats Courtesy : Cricinfo

ஐந்து பௌலர்கள் போதுமென்றே நினைக்கிறோம். எங்கள் அணியில் ஆறாவது பௌலர் அதிகமாகப் பந்துவீசுவதில்லை .
சஞ்சய் பங்கர்.
கடந்த எட்டு ஐசிசி தொடர்களில், இந்தியா விளையாடும் ஏழாவது செமி ஃபைனல் இது.

இந்தியா இதுவரை

தென் ஆப்பிரிக்கா (ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
ஆஸ்திரேலியா (36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
நியூசிலாந்து (மழையால் போட்டி ரத்து )
பாகிஸ்தான் (89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
ஆஃப்கானிஸ்தான் (11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
மேற்கு இந்தியத் தீவுகள் (125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
இங்கிலாந்து (31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி )
பங்களாதேஷ் (28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
இலங்கை ( 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )

நியூசிலாந்து

நாங்கள் எப்போதும் அண்டர்டாக்ஸ் தான். செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக விளையாடும் அணி வெல்லட்டும்
ஃபெர்கஸன்

நியூசிலாந்துக்கு இந்தத் தொடர் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக மாறி இருக்கிறது. டாஸ் பேட்டிங் என்பதுதான் இந்த உலகக் கோப்பையின் தாரக மந்திரம். ஆனால், நியூசிலாந்து வென்ற முதல் மூன்று போட்டிகள் இரண்டாம் இன்னிங்ஸில் பேட் செய்து தான் வென்றது .

என்றோ எடுத்த நல்ல பெயரை வைத்து, வாழ்க்கையை ஓட்டும் வாழ்ந்துகெட்ட ஜமீன் போல், நியூசிலாந்தின் நிலைமை அந்தோ பரிதாபம் என இருக்கிறது. கடைசி மூன்று போட்டிகளில் எச்சரித்தது போலவே ஹாட்ரிக் தோல்வி. அதன் பௌலிங் யூனிட்டை வைத்து தப்பிப் பிழைத்துக்கொண்டிருக்கிறது. ஓப்பனர்களின் சுமார் துவக்கம், நிலையான ஆட்டம் இல்லை என நியுசிலாந்து இந்த சீசனில் திடீரென அண்டர்டாக்ஸ் ஆகிவிட்டார்கள். கேப்டன் வில்லியம்சன் அவர்களை மீண்டு எழச் செய்தல் அவசியம்.

அண்டர்டாக்ஸ் நியூசி... கலக்கல் இந்தியா... ஃபைனல் நோக்கி நகர்வோம்! #INDvNZ

அணியின் மொத்த ரன்களில், கேன் வில்லியம்சன் அடித்திருப்பது 30%. அந்த அளவுக்குத்தான் அணியின் பேட்டிங் இருக்கிறது. வில்லியம்சனை அவுட் ஆக்கிவிட்டால், நியூசி அவ்ளோதான் என்னும் நிலைமையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். ராஸ் டெய்லர் ( 37 - சராசரி ) , கப்டில் ( 24) , லாத்தம் (16) ஸ்கோர் செய்ய வேண்டும். இல்லையெனில் நியூசிலாந்து பேக் செய்வது நல்லது.

இரண்டு நாள்களாக இணைய தளங்களில் வைரல் கோலி, வில்லியம்சன் தத்தமது அணிகளில் அண்டர் 19 கேப்டனாக இருந்து ஆடியது தான். அப்போது , கோலியின் விக்கெட்டை வில்லியும், வில்லியம்சனின் விக்கெட்டை கோலியும் வீழ்த்தியிருந்தனர். சமீபத்திய பிரஸ் கான்பிரென்ஸில் கோலியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அண்டர் 19 டெஸ்ட்டின் போது, வில்லியம்சன் பேக் ஃபூட்டிலொரு பௌண்டரி அடித்தார். ஸ்லிப்பில் இருந்த நான், அப்படிப்பட்ட ஒரு ஷாட்டை அதுவரை பார்த்ததில்லை எனச் சொல்லிக்கொண்டு இருந்தேன்
கோலி
கோலி, வில்லியம்ஸன் - உலகக் கோப்பை அரையிறுதி! - 2008 ஜூனியர் உலகக் கோப்பை நாஸ்டால்ஜியா

நியூசிலாந்து இதுவரை

Williamson, BOult, Henry
Williamson, BOult, Henry
AP

இலங்கை (10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ) பங்களாதேஷ் (2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ) ஆஃப்கானிஸ்தான் (7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ) இந்தியா (மழையால் போட்டி ரத்து ) தென் ஆப்பிரிக்கா (4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ) மேற்கிந்திய தீவுகள் ( 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ) பாகிஸ்தான் (6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி ) ஆஸ்திரேலியா (86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி) இங்கிலாந்து (119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி)

ஃபைனலைப் பற்றித் தற்போது பேசிக்கொண்டிருப்பவர்கள் கிரிக்கெட்டை புரிந்து கொள்ளாதவர்கள். செமி ஃபைனலில் இருக்கும் போது, ஃபைனல் பற்றிப் பேசாதீர்கள். நியூசிலாந்து அண்டர் ரேட்டட் என்றாலும், அது மிகச்சிறந்த அணி. அவ்வளவு எளிதாக இந்தியாவால் வெல்ல முடியாது. இந்தியா பிற போட்டிகளில் வெல்வது போல், இதிலும் வெல்ல வேண்டும். இதே மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்ட ஷமியை மீண்டும் அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம். ஒரு பெரிய போட்டியில் ஐந்து பவுலர்களைத் தாண்டி யோசிப்பது நல்லது. ஜடேஜா ஸ்பின்னர் ஆப்சனையும் கணக்கில் கொள்ளலாம் .
சச்சின்

டாஸ்

Trent Boult
Trent Boult

ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் நடைபெற்ற 37வது போட்டியில் இருந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா விளையாடிய இறுதி லீக் ஆட்டம் வரை (9 போட்டிகள் ) 8 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. ( இந்தியா இலங்கை போட்டி மட்டும் விதிவிலக்கு). கடைசி 20 போட்டிகளில் 16 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.

வெற்றி விவரம்

முதல் 21 போட்டிகள் . 11 முதலில் பேட்டிங் - 10 சேஸிங் அடுத்த 20 போட்டிகள் : 16 முதலில் பேட்டிங் - 4 சேஸிங்

செமி ஃபைனலுக்கு, ஃபைனலுக்கு புது பிட்ச் இருக்கும் என்பதால் சேஸிங் சற்று கை கொடுக்கலாம். ஆனால், டாஸ் வென்றதும் பேட்டிங் செய்வதே சிறப்பு என்கிறது ஓல்டு டிராஃப்டு மைதானம்

உத்தேச அணி

இந்தியா : ரோஹித், ராகுல், கோலி, பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, ஜடேஜா / குல்தீப், புவி/ ஷமி, சஹல், பும்ரா

நியூசிலாந்து : கப்டில், முன்ரோ, வில்லியம்சன், டெய்லர், லாத்தம், நீஷம், கிராந்தோம், சான்ட்னர், ஃபெர்கஸன், போல்ட், மேட் ஹென்ரி

மழை வாய்ப்பு

லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஆட வேண்டிய போட்டி மழையால் கைவிடப்பட்டது. இன்றைய போட்டியிலும் வானம் தன் `மழைவரிசை'யைக் காட்ட இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முழுக்க ஆட்டம் நடைபெறாமல் கைவிடப்பட்டால், நாளை இதே மைதானத்தில் ஆட்டம் நடக்கும். இன்று விளையாடிய ஓவர்கள் போக, மீதம் இருக்கும் போட்டி மட்டுமே ரிசர்வ் தினம் அன்று நடைபெறும். நாளையும் போட்டி நடக்காத பட்சத்தில், நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா ஃபைனலுக்கு முன்னேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு