Published:Updated:

`ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்திய அணி?!' - ஐசிசியின் புதிய விதியால் முடிவு

தினேஷ் ராமையா

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி, ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி
இந்திய அணி
கத்துக்குட்டியிடம் தோற்ற முதல் அணி இந்தியா! - 1979 உலகக் கோப்பை நினைவுகள் #WorldCupMemories

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மே 30-ம் தேதியே தொடர் தொடங்கிவிட்ட நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை நாளைதான் விளையாடவிருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி
BCCI

சௌதாம்ப்டனில் நடக்கும் அந்தப் போட்டியில் டூப்ளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்க்கொள்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு இது 3வது போட்டியாகும். முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளிடம் அந்த அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இந்த நிலையில், வரும் 30ம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்ஸியுடன் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் இரண்டு விதமான ஜெர்ஸிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஐசிசி விதி.

இந்திய அணி
இந்திய அணி
BCCI

தொடரை நடத்தும் நாட்டுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அந்த நாடு, ஐசிசி நடத்தும் தொடர் முழுவதும் ஒரே நிற ஜெர்ஸியுடன் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நிற ஜெர்ஸியுடன் இரு அணிகள் இருக்கும்போது ரசிகர்களைக் குழப்பக் கூடாது என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைக் கொண்டுவந்திருக்கிறது.

ரபாடா, ஸ்டார்க், ரஷீத் - உலகக் கோப்பை அணிகளின் ஆயுதங்கள்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியும் நீல நிற ஜெர்ஸியுடன் களம் கண்டிருக்கிறது. இதனால், அந்த அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி, வேறொரு நிற ஜெர்ஸியுடன் களமிறங்க வேண்டும். அதனால், இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்ஸியுடன் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தோனி, விராட் கோலி
தோனி, விராட் கோலி

ஜெர்ஸி மாற்றம் மற்றும் அதன் டிசைன் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆரஞ்சு நிற ஜெர்ஸி குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல், சௌதாம்ப்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் என்கிறார்கள். மற்ற போட்டியில் இந்திய அணி வழக்கமான நீல நிற ஜெர்ஸியையே பயன்படுத்தும் என்றும் தெரிகிறது.

தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே இரண்டு நிற ஜெர்ஸிகளை அறிமுகப்படுத்திவிட்டன. வங்கதேச அணிக்கெதிரான கடந்த 2ம் தேதி நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வழக்கமான பச்சை நிற ஜெர்ஸியைத் தவிர்த்து வெளிர் மஞ்சள் நிற ஜெர்ஸியுடன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளசிஸ்
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளசிஸ்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி வீரர்கள் வழக்கமான பச்சை நிற ஜெர்ஸியை அணிந்திருந்தனர்.

தினேஷ் ராமையா