Election bannerElection banner
Published:Updated:

'தமிழ், தெலுங்குக்கு யெஸ்; இந்திக்கு நோ!' - ஐசிசி-க்கு குவியும் ரசிகர்களின் லைக்ஸ்

icc
icc

உலகக்கோப்பை நடந்து வரும் இந்தநிலையில் தமிழர்களையும் தமிழ்மொழியையும் கௌரவப்படுத்தும் விதமாக ஐ.சி.சி தற்போது ஒரு விஷயத்தை செய்துள்ளது.

தமிழகத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு பந்தம் இருந்து வருகிறது. உள்ளூர் தொடராக இருந்தாலும் சரி, உலகக்கோப்பைத் தொடராக இருந்தாலும் சரி, அது கிரிக்கெட் என்றால் தமிழர்கள் கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு தமிழகமும் கிரிக்கெட்டும் பிரிக்க முடியாத ஒன்றாக அறியப்படுகிறது. அதற்கு உதாரணமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சொல்லலாம். ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகள் இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தமிழர்கள் கொண்டாடுவதைப்போல மற்ற அணிகளை அந்த மாநில மக்கள் கொண்டாடுவதில்லை.

கிரிக்கெட்
கிரிக்கெட்

அவர் வேற்றுநாட்டு வீரர்கள் என்றாலும் சென்னை அணிக்காக விளையாடும்போது மக்கள் காட்டும் அன்புக்கு அளவு இருக்காது. இதை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் கண்கூடாகப் பார்க்கலாம். தமிழ் மக்கள் மீதான அன்பால் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் இப்படிப் பல வீரர்கள் தமிழ்ப் புலவர்களாக மாறியது தனிக்கதை. இதேபோல் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், கிரிக்கெட் மீது ஆர்வம் வைத்து போட்டிகளைப் பார்த்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை நடந்து வரும் இந்தநிலையில் தமிழர்களையும் தமிழ்மொழியையும் கௌரவப்படுத்தும் விதமாக ஐசிசி தற்போது ஒரு விஷயத்தைச் செய்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே நடக்கவுள்ளது. போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் பிரஸ் மீட் கொடுத்தனர். இந்த பிரஸ் மீட்டில் பேசிய வீடியோக்களை சில மொழிகளில் சப் டைட்டில் கொடுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி இரு அணி கேப்டன்கள் பேசும் வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப் டைட்டில் கொடுத்துள்ளது ஐசிசி.

தமிழ் மொழி
தமிழ் மொழி

ஒரு சில மொழிகளுக்கு மட்டுமே இப்படி சப் டைட்டில் வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் இந்தியாவிலிருந்து தமிழ், தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்தியில் சப் டைட்டில் வெளியிடப்படவில்லை. உலகின் மூத்த மொழியாகக் கருதப்படும் தமிழை ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு