Published:Updated:

மிஸ்ஃபீல்டிங்கில் 28 ரன்கள்… 23 ரன்களில் தோல்வி… வெஸ்ட் இண்டீஸ் பரிதாபங்கள்!

Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century.
News
Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century. ( AP )

இரண்டு அணிகளுக்கும் நேற்றைய போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும் அதன் மூலம் இரு அணிகளும் பெற்றது அதிகம்.

ஆட்டத்தின் 48-வது ஓவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை. களத்தில் 100 ரன்களை கடந்து நன்றாக செட்டாகி, நிச்சயம் அணியை கரைசேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன். அந்த சமயத்தில் இலங்கை கேப்டன் டிமுத் கருணாரத்னே ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் களந்த முடிவை எடுக்கிறார்.

Sri Lanka's bowler Angelo Mathews, left, celebrates with teammates after dismissing West Indies' batsman Nicholas Pooran for 118 runs.
Sri Lanka's bowler Angelo Mathews, left, celebrates with teammates after dismissing West Indies' batsman Nicholas Pooran for 118 runs.
AP

கடைசியாக 2017 டிசம்பர் மாதம், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பந்துவீசி, கிட்டதட்ட 8 மாதங்கள் நெட்ஸில் கூட பந்துவீசாத ஆஞ்சலோ மேத்யூஸை பந்துவீச அழைக்கிறார். சொல்லப்போனால் அவர் பெளலிங் வீசுவதையே மறந்திருப்பார். அப்படி ஒருவரை ஆட்டத்தின் முக்கியமான சூழ்நிலையில் பந்துவீச அழைத்தார் இலங்கை கேப்டன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு ஆண்டுகளில் தன்னுடைய முதல் பந்தை, அதுவும் உலகக் கோப்பையில் வீச வருகிறார் மேத்யூஸ். பூரன் அவுட்! 103 பந்துகளில் 118 எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரித்திர வெற்றி தேடித்தரும் முனைப்புடன் இருந்த நிகோலஸ் பூரனை வெளியேற்றி, அதிர்ச்சியளித்தார் மேத்யூஸ். கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் எல்லா விதமான விமர்சனத்துக்கும் ஆளாகி வேண்டியிருக்கும் நிலை. இரண்டு வருடமாக பந்துவீசாமல், இப்போது ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பந்துவீச வந்து, முதல் பந்திலேயே திருப்புமுனையை ஏற்படுத்துகிறார் என்றால், அதுதான் கிரிக்கெட்டின் ப்யூட்டி!

Sri Lanka's bowler Lasith Malinga, middle, with teammates celebrates after bowling West Indies' batsman Shai Hope.
Sri Lanka's bowler Lasith Malinga, middle, with teammates celebrates after bowling West Indies' batsman Shai Hope.
AP

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இதுவே இரு அணிகளுக்கும், அல்லது ஏதாவது ஒரு அணிக்கு இந்த உலகக் கோப்பையின் மிக முக்கியமான போட்டியாக இருந்திருந்தால், கருணாரத்னேவின் அந்த முடிவு 1987-ல் மைக்கேல் கேட்டிங் அடித்த அந்த ஷாட்டைப் போல் விமர்சிக்கப்பட்டிருக்கும். `டெட்ரப்பர்’ மேட்ச் என்பதால் கருணாரத்னேவின் முடிவு, சாதாரண விஷயமாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிடில் ஆர்டரில் மாற்றம்… முன்னேற்றம்!

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்த உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிக ரன்ரேட் வைத்துள்ள அணி இலங்கை (6.48). இந்த உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் அந்த அணியின் டெம்ப்ளேட் ஒரே மாதிரேதான் இருக்கும். ஓப்பனர்கள் கருணாரத்னே, குசல் பெரேரா சிறப்பான தொடக்கம் தந்து பவர்ப்ளேயில் ரன்ரேட்டை ஆறுக்கும் அதிகமாக எடுத்துச்செல்வர். பின் முதல் விக்கெட்டை இழக்கும். அதற்கு அடுத்து வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யாமல் டாட் பால்களை ஆடியே ரன்ரேட்டை குறைப்பார்கள். அதை ஈடுகட்ட ஸ்லாக் ஷாட் ஆடி அவுட் ஆகிவிடுவார்கள். 300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்ப்போம். 250 ரன்களையே தாண்ட மாட்டார்கள். இதுதான் இந்த உலகக் கோப்பையில் இலங்கையின் பேட்டிங்!

Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century.
Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century.
AP

நேற்றைய போட்டியிலும் அது விதிவிலக்கல்ல. தொடக்க ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தது. முதல் விக்கெட் விழுந்தது. கருணாரத்னே அவுட். அதைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டும் விழுந்தது. குசல் பெரேரா ரன் அவுட். “ஆஹா எல்லாமே டெம்ப்ளேட்டின் படியே நடக்கிறதே, இனிமேல் ரன்ரேட் அப்படியே குறைந்துவிடுமோ” என்பதே இலங்கை ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக இருந்தது.

ஆனால், இலங்கையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டெம்ப்ளேட்டை உடைத்தனர். நேற்றைய ஆட்டத்தில் இலங்கையின் எந்த ஒரு வீரரும் அதிகமாக டாட் பால்கள் ஆடவில்லை. ஏற்கெனவே செட்டாகியிருந்த பேட்ஸ்மேனுக்கு அழகாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து பெரிய ஷாட் ஆடவேண்டிய கட்டாயத்தைக் குறைத்தனர். முக்கியமாக ரன்ரேட் ஐந்துக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டனர். உண்மையைச் சொன்னால், நேற்றுதான் இலங்கையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உருப்படியாக தங்கள் பணியைச் செய்தனர்.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதம்

இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளிலும் நல்ல ஸ்ட்ரோக் ப்ளே மூலம் அனைவரின் கவனத்தையும் நம்பிக்கையையும் பெற்றார் அவிஷ்கா ஃபெர்னாண்டோ. அவர் முந்தய போட்டிகளில் தொடங்கிய விதத்தை பார்த்து நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் எனப் பலரும் ஆருடம் கூற ஆரம்பித்தனர். அதை அவர் நிறைவேற்றினார். உலகக் கோப்பையில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இலங்கை வீரர் இந்த உலகக் கோப்பையில் அடிக்கும் முதல் சதமும் அதுதான். ஷார்ட் பால்களை எந்த சிரமமுமின்றி ‘புல் செய்வதாகட்டும், ஆஃப் சைடில் ட்ரைவ் செய்வதாகட்டும் எல்லாமே கனகச்சிதம். மற்ற வீரர்ளும் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தனர். அவர் சதம் அடித்தார். இலங்கை 338 ரன்கள் எடுத்தது.

Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century.
Sri Lanka's batsman Avishka Fernando raises his bat and helmet to celebrate scoring a century.
AP

சவாலான இலக்கை துரத்தியது வெஸ்ட் இண்டீஸ். இதை சேஸ் செய்தால் உலகக் கோப்பையில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனை நிகழும். கோப்பைதான் மிஸ் ஆகிவிட்டது, இந்த சாதனையாது செய்வோம் என களமிறங்கினர் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பாய்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணியும் எந்த போட்டியிலும் இல்லாத மிகப்பெரிய மாற்றம் இந்த போட்டியில் இருந்தது. எப்போதும் பவுண்டரிகளிலேயே ரன்கள் எடுக்க முற்படும் அந்த அணி வீரர்கள் நேற்று சிங்கிள், டபுல்களில் டீல் செய்தனர்.

முதல் பவர்ப்ளேயில் இரண்டே பவுண்டரிகள் (அதிலும் ஒன்று ஃப்ரீ ஹிட்டில் அடிக்கப்பட்டது). பவர்ப்ளேயில் அடித்த 37 ரன்களில் 26 ரன்கள் ஓடி ஓடி எடுத்தவை. இதை அழுத்திச் சொல்லக் காரணம். களத்தில் அப்போது கெய்ல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியிடமிருந்து இப்படி ஒரு ஆட்டம் வருகிற போது நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். 10 ஓவர் முடிவில் அம்ப்ரீஸ், ஷாய் ஹோப் விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது.

West Indies' batsman Nicholas Pooran raises his bat to celebrate scoring a century.
West Indies' batsman Nicholas Pooran raises his bat to celebrate scoring a century.
AP

இலக்கை அடைய வேண்டுமானால் கெய்ல் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்கிற நிலை. ஆனால், அவரும் 35 ரன்களில் வெளியேறினார். ஹிட்மேயர் ரன் அவுட்டாக (முதல் துரதிர்ஷ்டம்) அதன் பிறகு வந்த ஹோல்டரும் 26 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரன்ரேட் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பிராத்வையிட்டுடன் ஜோடி சேர்ந்தார் பூரன். இருவரும் 54 ரன்கள் அடித்தனர். பிராத்வையிட் ரன் அவுட்டாக (இரண்டாவது துரதிர்ஷ்டம்) ஆட்டம் அவ்வளவுதான் என முடிவுக்கு வந்தனர்.

பிறகு பூரன் – ஃபேபியன் ஆலன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி, மற்ற பந்துகளில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது என தெளிவாக இருந்தனர். முக்கியமாக நியூசிலாந்திடம் செய்த அந்த தவற்றைச் செய்யக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தனர். எல்லாம் அவர்களின் திட்டப்பபடியே சென்றது. ஆனால், 46-வது ஓவரில் தவறான புரிதல் காரணமாக ஃபேபியன் ஆலனும் ரன் அவுட்டானார் (மூன்றாவது துரதிர்ஷ்டம்).

West Indies' batsman Nicholas Pooran reacts as he leaves the crease after being dismissed Sri Lanka's Angelo Mathews for 118 runs.
West Indies' batsman Nicholas Pooran reacts as he leaves the crease after being dismissed Sri Lanka's Angelo Mathews for 118 runs.
AP

வெஸ்ட் இண்டீஸுக்கு அதுதான் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. துரதிர்ஷ்டம் ஒருபுறம் துரத்தினாலும், மறுமுனையில் சதம் அடித்து வெற்றியை நோக்கி கடைசி வரை போராடிக்கொண்டிருந்தார் பூரன். அவரும் மேத்யூஸ் பந்தில் எட்ஜாகி கீப்பரிடம் கேட்சாகி வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் 23 ரன்களில் தோல்வியடைந்தது. அந்த அணி மிஸ் ஃபீல்டிங்கால் விட்ட ரன்கள் 28!

இரண்டு அணிகளுக்கும் நேற்றைய போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும் அதன் மூலம் இரு அணிகளும் பெற்றது அதிகம். இலங்கை அணியின் வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி இரண்டுமே அந்த அணியை முன்னேற்ற பாதையில்தான் அழைத்துச் சென்றது. உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் 25 வயதுக்கும் குறைவானவர் இருவர் சதமடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் போட்டியின் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. இரு அணிகளின் அடுத்த தலைமுறை வீரர்கள் உருவெடுத்துவிட்டார்கள்!