Published:Updated:

மழை பிரச்னை இல்லை... இங்கிலாந்து பேட்டிங்தான் பிரச்னை... சமாளிக்குமா இலங்கை? #CWC19

இங்கிலாந்தில் மழை ஓயலாம், ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் அதிரடி ஓயப்போவதில்லை. அரை இறுதி வாய்ப்பு பிராகசாமக இருக்கும் இங்கிலாந்து அணி, ஹெடிங்லி மைதானத்தில் இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. #CWC19

#CWC19
#CWC19

முதலில் பேட் செய்தால் 300+ ஸ்கோர் உறுதி. 300-க்கும் குறைவாக சேஸ் செய்தால், 35 ஓவர்களில் போட்டியை முடிப்பது என இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசுர ஃபார்மில் உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 400 எட்டியிருக்க வேண்டியது, 3 ரன்கள் குறைவாக ஸ்கோர் செய்து மொத்தம் 25 சிக்ஸர்கள் அடித்து பட்டயக்கிளப்பியது மோர்கன் அண்ட் கோ.

#CWC19
#CWC19

இங்கிலாந்தில் மழை ஓயலாம், ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் அதிரடி ஓயப்போவதில்லை. அரை இறுதி வாய்ப்பு பிராகசாமக இருக்கும் இங்கிலாந்து அணி, ஹெடிங்லி மைதானத்தில் இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. ##CWC19

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணியை வேறு எந்த போட்டியிலும் வெற்றி பெறுவதிலிருந்து நிறுத்த முடியவில்லை. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என ஒவ்வொன்றிலும் அசத்தி வரும் இங்கிலாந்து, இலங்கைக்கு எதிரான போட்டியிலும் வெற்றியை நோக்கியே களமிறங்கும். +1.862 ரன் ரேட், 8 புள்ளிகள் என ஏற்கெனவே இங்கிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு பிராகசமாக உள்ளது.

#CWC19
#CWC19

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 90 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோ, ஜேசன் ராய் இல்லாத குறையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளார். மோர்கன், ஜோ ரூட், பட்லர், ஸ்டோக்ஸ், மொயின் அலி என அதிரடி காட்டும் மிடில் ஆர்டர் இருப்பதால் பேட்டிங் ஆர்டரில் மாற்றமிருக்காது. மார்க் வுட், ஆர்ச்சர், வோக்ஸ் உடனான பெளலிங் பட்டியலில் லியாம் ப்ளங்கட் இன்றைய போட்டியில் களமிறக்கப்படலாம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி, இன்னும் சிறப்பான ஆட்டத்தை தொடங்கவில்லை. கொஞ்சம் சுதாரித்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், எக்கச்சக்க தவறுகளை அடிக்கிக் கொண்டே சென்ற இலங்கை வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

மழை பிரச்னை இல்லை... இங்கிலாந்து பேட்டிங்தான் பிரச்னை... சமாளிக்குமா இலங்கை?  #CWC19

சிறந்த பெளலிங் யுக்தியுடன் இங்கிலாந்து பேட்டிங்குக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, இங்கிலாந்தின் பேட்டிங் அதிரடியை கட்டுப்படுத்த முடியும். வெற்றி பெறவில்லை என்றாலும் எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான திட்டத்தை இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே இந்நேரம் வகுத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய மிலிண்டா சிரிவர்தனேவுக்கு பதிலாக இன்று சுரங்கா லக்மல் களமிறங்கலாம். பேட்டிங்கை பொறுத்தவரை திமுத் கருணாரத்னே, குசல் பெராரா மட்டுமே ஆறுதல். லசித் மலிங்கா, நுவான் பிரதீப் கொண்ட பெளலிங் யூனிட் இன்னும் மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸ் கொடுக்காததால், இலங்கை அணி வெற்றி பெறுவது கடினமே!

நேருக்கு நேர்

இதுவரை 74 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 36 போட்டிகளிலும், இலங்கை 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி சமமாகவும், 2 போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிந்துள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் வெற்றி விகிதத்துக்கும், உலகக்கோப்பை போட்டிகளிளின் விகிதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

#CWC19
#CWC19

10 உலகக்கோப்பை போட்டிகளில், இங்கிலாந்து 6 முறையும், இலங்கை 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2019 உலகக்கோப்பை போட்டி நடைபெறும் ஹெடிங்லி மைதானத்தில் மோதிய 4 போட்டிகளில், இரு அணிகளும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன

#CWC19
#CWC19

2011 உலகக்கோப்பை காலிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2015 உலகக்கோப்பையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் என இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் ரெக்கார்டு அதிரடியாக உள்ளது. 2011 காலிறுதியில் தரங்கா, தில்ஷன் இணை சதமடித்தது போல, 2015 உலகக்கோப்பையில் லஹிரு திருமண்ணே, சங்ககராவின் சதங்கள் இலங்கையை வெற்றி பெறவைத்தன.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 5 உலகக்கோப்பை போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்றுள்ள இலங்கை, அந்த சாதனையைத் தக்கவைக்க ரொம்பவே மெனக்கிட வேண்டும்.

பிளேயிங் லெவன்

இலங்கை (உத்தேசம்)

திமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, லஹிரு திருமண்ணே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, தனஞ்செயா டி சில்வா, இசுரு உடனா, மிலிந்தா சிரிவர்தனே / சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, நுவான் பிரதீப்

இங்கிலாந்து (உத்தேசம்)

இயான் மோர்கன் (கேப்டன்), ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, மார்க் வுட், அடில் ரஷித் /லியாம் ப்ளங்கட்

இதுவரை

இங்கிலாந்து

vs தென்னாப்ரிக்கா - 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை

vs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs ஆப்கானிஸ்தான் - 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - மழையால் போட்டி ரத்து

vs வங்கதேசம் - மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியா - 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி