Published:Updated:

பாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு? - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்

பாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு? - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்
பாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு? - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் தொடர்பாக ட்விட்டரில் முட்டிக் கொண்ட பீட்டர்சன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல!

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு பல பிரபலங்களின் கருத்துகள் நேரடியாகவே மக்களுக்குத் தெரியவருகிறது. அவ்வப்போது எதிர்மறையான கருத்துகளை சிலர் தெரிவித்து சிக்கலில் மாட்டுவதும் உண்டு. இது உலகக் கோப்பை ஃபீவர் காலம். பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.

பாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு? - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி இடத்தை உறுதி செய்துள்ளது. தொடக்கத்தில் அச்சுறுத்தும் அணியாகப் பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தற்போது தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி, வரும் ஞாயிறு அன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹூசன் மற்றும் பீட்டர்சனின் பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பீட்டர்சன்
பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ட்விட்டரில், ``பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேள்வி கேட்கிறார்.

அதற்கு கெவின் பீட்டர்சன், ``நாசர், உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேட்க அதற்குப் பதிலளித்த நாசர் ஹுசைன், ``நிச்சயமாக இங்கிலாந்து அணிக்குதான் என் ஆதரவு. இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் ரக்பி ஆடிய போது உங்கள் ஆதரவு யாருக்கு இருந்ததோ அதுபோலத்தான் எனக்கும்” என்றார்.

நாசர் ஹுசைன் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகிய இருவரும் இங்கிலாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல. நாசர் ஹுசைன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர்கள் இப்படி மாறி மாறி கொளுத்திப் போட, மறுபக்கம் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் சொன்ன வார்த்தை எங்களின் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என்பது ஹைலைட்.

Pakistan Fan
Pakistan Fan

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு நேரடியாக வந்து போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு