Published:Updated:

தோனி அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணமா? – வைரலாகும் வீடியோ!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அவுட்டானதற்கு தவறான அம்பயரிங்தான் காரணம் என்று சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகக் கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நுழைந்தன.

அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழைகாரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

நேற்றும் ஆட்டம் தொடர 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை அந்த அணி எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இந்திய அணி பேட்டிங்கின்போது, 48 -வது ஓவரில் ஃபெர்குசன் வீசிய பந்தில் தோனி ரன் அவுட்டானார். அவர் ரன்அவுட்டானபோது, 30 யார்டுக்கு வெளியே 6 வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். ஐ.சி.சி விதிகளின்படி, கடைசி பத்து ஓவர்களில் அதிகபட்சம் 5 ஃபீல்டர்கள் மட்டும்தான் 30 யார்டுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதிமீறி 6 பேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அம்பயர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார் என்று வீடியோக்கள் வைரலாகின.

தோனி அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணமா? – வைரலாகும் வீடியோ!

அம்பயர் இதைக் கவனித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஃபீல்டிங் நிறுத்திவைக்கப்பட்ட மைதானத்தின் புகைப்படத்தையும் அவர்கள் ஷேர்செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் திரையில் காண்பிக்கப்பட்ட கிராபிக் காட்சியில் கூட பிழை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அந்தக் குறிப்பிட்ட பந்துக்கு முன்னர் தேர்ட் மேன் ஃபீல்டர் 30 யார்டு வட்டத்துக்குள் அழைக்கப்படுவதாகவும் கமென்டரியில் வருகிறது. ஒருவேளை 6 ஃபீல்டர்கள் இருந்து அதனை நடுவர் கவனித்திருந்தாலும், அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். ஒரு ஃப்ரீ-ஹிட் கிடைத்திருக்கும். அதை எதிர்கொள்ள அப்போதும் தோனி களத்தில் இருக்க மாட்டார். காரணம் நோபாலில் ரன் அவுட் திரும்பப் பெறப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு