Published:Updated:

``ஓய்வா... ஸாரி, நான் இன்னும் அத பத்தி யோசிக்கவே இல்ல பாஸ்!” - கூல் `தோனி’

பிரேம் குமார் எஸ்.கே.

தோனியின் ஓய்வு தொடர்பாக தகவல்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில் தோனி தனது முடிவு குறித்துப் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது!

பயிற்சியில் தோனி
பயிற்சியில் தோனி ( AP )

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்களில் தோனியும் ஒருவர் என்று சொல்லலாம். அவரது ஸ்லோ இன்னிங்ஸ் காரணமாக இந்திய அணி குறைவான ரன்களுடன் திருப்திபட்டுக் கொள்வதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

தோனி
தோனி
AP

விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் தோனி. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை விமர்சித்த முன்னாள் வீரர் சச்சின் அடுத்த ஆட்டங்களில் அவரை பாராட்டினார்.

இந்நிலையில்தான் தோனியின் ஓய்வு முடிவு குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குக் கடைசி போட்டி எதுவோ அதுவே தோனியின் கடைசிப் போட்டி என்ற தகவல்கள் பரவின.

தோனி
தோனி
AP

ரசிகர்கள் பலர் இந்தத் தகவல்களை ஏற்க மறுத்தனர். தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்க் பின்னாலும் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றனர். பல முன்னாள் வீரர்களும் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்திய அணி வீரர்களும் தோனியின் பக்கம் நின்றனர்.

இந்நிலையில் ஏ.பி.பி ஊடக நிருபர் ஒருவர் தான் தோனியிடம் ஓய்வு குறித்துப் பேசியதாகக் கூறியுள்ளார். அப்போது தோனி, ``நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து தெரியாது. ஆனால், நான் ஓய்வு பெற வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள்.

கோலி - தோனி
கோலி - தோனி
AP

அதுவும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாகவே ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்றாராம். எனினும் தான் ஓய்வு பெற வேண்டும் என்று கூறுபவர்களில் சக வீரர்களோ அணி நிர்வாகத்தினரோ இல்லை என்பதையும் தோனி கூறியுள்ளாராம்.

முன்னதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ``தோனியை கணிக்கமுடியாது. இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் அவர் அணியில் இருப்பார் என நினைக்கவில்லை. கேப்டன் பதிவியிலிருந்து இறங்கும் முடிவை அவர் திடீரென்று எடுத்தார். அதனால் இப்போதே எதுவும் கணிக்க முடியாது” என்றார்.

பிசிசிஐ
பிசிசிஐ

இது தொடர்பான செய்தி வெளியான போது தோனியின் ஓய்வு குறித்த தகவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இன்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.