Published:Updated:

சர்ச்சைக்குரிய கிளவுஸ் இல்லை: கிளவுஸை மாற்றிய தோனி

Karthikeyan KG

இந்தியா தென் ஆப்பிரிக்காவை வென்ற போட்டியில், ரோஹித்தின் அற்புதமான சதத்தை விடவும் விவாதிக்கப்பட்ட விஷயம் தோனியின் மிலிட்டரி அடையாளம் கொண்ட கிளவுஸ்.

Dhoni
Dhoni ( AP )

கடந்த வாரம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் சதம், சஹாலின் சூப்பர் பந்துவீச்சு என எல்லாவற்றையும் தாண்டி அதிகம் கவனிக்கப்பட்டது தோனியின் விக்கெட் கீப்பிங் கிளவுஸ். ஆம் அதில் இருந்த முத்திரை தான் கடந்த இரண்டு நாள்களாக ட்விட்டரில் வலம் வந்த வண்ணம் உள்ளது. தோனியின் கிளவுஸில் இருந்தது இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை.

'ஐசிசி விதியில் இது இல்லையே பாஸ்!’- தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் #DhoniKeepTheGlove

இந்திய முழுக்கவே இதற்கு ஆதரவாக கருத்துகள் கிளம்பின. சில ஊடகங்களில் , தோனி இந்த முத்திரையுடன் தான் விளையாட வேண்டும். இல்லையெனில் இந்திய அணி உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என குபீர் கோரிக்கை எல்லாம் விடப்பட்டன.

இந்நிலையில் மும்பையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பின்னர் பேசிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், “ஐசிசியின் விதிமுறைகளுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம்.

#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Update, ICC Cricket World Cup 2019
Dhoni gloves
Dhoni gloves
AP

தோனி தனது கிளவுஸில் அந்த முத்திரையை பயன்படுத்த ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அரசியல், மதம் அல்லது ராணுவத்தின் முத்திரையும் கிடையாது. கிளவுஸில் உள்ள முத்திரையுடனே விளையாடுவார். இதற்காக ஐசிசியிடம் அனுமதி கோரியிருக்கிறோம்” என்றார்.

' ஒரு புறாவுக்கு அக்கப்போரா' என்பது போல் இதென்னடா முத்திரைக்கு வந்த சோதனை என சோகம் அடைந்தனர் சிலர். இந்நிலையில் இன்றைய போட்டியில், தோனி மீண்டும் எந்த முத்திரையும் இல்லாத கிரிக்கெட் கிளவஸுடனே களமிறங்கினார்.

DHoni
DHoni
AP

கிரிக்கெட்டில் நடக்கும் களேபரங்களுக்கு மத்தியில் இப்படி எல்லாம் திடீர் திடீரென பீதிகள் கிளம்புவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

Karthikeyan KG