Published:Updated:

`பணம் முக்கியமில்லை; அவருக்கு பெரிய மனசுங்க’- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனியின் மேனேஜர்

ராம் பிரசாத்

அணிக்கு என்ன தேவையோ அதனையே தோனி செய்கிறார் என இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியது போலவே சச்சினும் சொல்ல இந்த விவகாரம் அடங்கியது.

தோனி
தோனி ( AP )

மகேந்திர சிங் தோனி குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு பேட்டிங்கில் தோனி கடுமையாக தடுமாறினார். அப்போதே தோனி ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் எழுந்தது. சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் ஆடும் லெவனுக்குள் வந்தனர். முன்னாள் வீரர்கள் சிலரும் தோனி ஓய்வு முடிவை பரிசீலிக்க வேண்டும் அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடர் வரவுள்ளது என்றெல்லாம் கூறினார்கள். தோனி அமைதியாகவே இருந்தார்.

பயிற்சியில் ஈடுபடும் தோனி
பயிற்சியில் ஈடுபடும் தோனி
AP

2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்களுக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடி “ஐம் பேக்” என்றார். ஐபிஎல் போட்டிகளிலும் அவரது அதிரடி தொடர்ந்தது. விமர்சகர்கள் வாயடைத்து போனார்கள். உலகக்கோப்பை தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக தோனி - கேதர் ஜாதவ் ஆகியோரின் ஆட்டம் விமர்சனத்துக்குள்ளானது.

தோனியிடம் இருந்து இப்படியொரு ஆட்டத்தை எதிர்ப்பார்க்கவில்லை என சச்சின் டெண்டுல்கர் கூறியதும் மீண்டும் ஒரு பிரிவினர் வரிந்துக்கட்டிக்கொண்டு வந்துவிட்டனர். அடுத்த அடுத்த போட்டிகளில் தோனி ஆடிய ஆட்டத்தை பாராட்டிய சச்சின். அணிக்கு என்ன தேவையோ அதனையே தோனி செய்கிறார் என இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியது போலவே சச்சினும் சொல்ல இந்த விவகாரம் அடங்கியது.

உலகக்கோப்பை போட்டி
உலகக்கோப்பை போட்டி
AP

தோனி இந்த உலகக்கோப்பை தொடரில் போட்டியின் போது அடிக்கடி தனது பேட்டை மாற்றிவருகிறார். பல்வேறு நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஓட்டிய பேட்டை பயன்படுத்துகிறார். நிறைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து பணம் பெறுகிறார். அதனால் தான் நிறைய பேட்டை பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சை எழுந்தது. வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு நிறுவனத்தின் பெயர் பொறித்த பேட்டுடன் விளையாடுவது வழக்கம் தான் தோனி அடிக்கடி பேட்டை மாற்றி விளையாடுவதால் தற்போது இந்தப் பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தோனியின் மேனேஜர் அருண் பாண்டே, “ தோனி போட்டியின் போது பேட்டை மாற்றுவது உண்மை தான் அதில் உள்ள லோகோகளும் வேறுபட்டு காணப்படுவதும் உண்மை தான். இதற்காக அவர் எந்த நிறுவனத்திடமும் இருந்து பணம் பெறவில்லை. தோனிக்கு பணம் முக்கியமில்லை. அவருக்கு மிகப் பெரிய மனம் உள்ளது. ஆரம்ப காலங்களில் தனக்கு உதவியவர்களை மறக்காமல் இருக்கும் குணம் தோனிக்கு உண்டு. அதனடிப்படையில் தான் தோனி தனது பேட்டை மாற்றி வருகிறார்.

தோனியின் பேட்
தோனியின் பேட்
AP

தோனியின் ஆரம்பகாலத்தில் 'BAS' நிறுவனம் அவருடன் பயணித்தது. 'SG' நிறுவனம் தோனிக்கு உறுதுணையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.தோனி தற்போது எந்த பேட் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தில் இல்லை. ஸ்பார்டன் என்ற ஆஸ்திரேலியா நிறுவனத்துடனான ஒப்பந்தம் சட்டரீதியான சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.