Published:Updated:

`ஆட்ட நாயகன்' விருதை ரசிகருக்குக் கொடுத்த டேவிட் வார்னர்!

விளையாட்டு வீரனுக்கும் ரசிகருக்கும் இடைப்பட்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது

வார்னர்
வார்னர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. நேற்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர். 111 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 107 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் வார்னர்
ஆட்ட நாயகன் வார்னர்

ஆட்டநாயகன் விருதை வாங்கிய டேவிட் வார்னர் அதைப் பார்வையாளர்கள் வரிசைக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் தனக்கு வழங்கிய ஆட்ட நாயகன் விருதை வழங்கினார். டேவிட் வார்னரிடம் அதைப் பெற்றுக்கொண்ட அந்தச் சிறுவன், `தான் வார்னரின் மிகப் பெரிய ரசிகன்' என்றார். ஐசிசி வேர்ல்ட் கப் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. விளையாட்டு வீரனுக்கும் ரசிகருக்கும் இடைப்பட்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் சம்பவம் உள்ளதாக ரசிகர்கள் பலர் நெகிழ்ந்தனர்.