Published:Updated:

`டெய்ல் எண்டர்னா சும்மா இல்ல!' வெஸ்ட் இண்டீஸுக்குப் பாடம் எடுத்த கூல்டர் நைல் #AUSvWI

Coulter-Nile
Coulter-Nile ( AP )

ஷார்ட் பால் டெக்னிக் ஸ்மித்திடம் பலிக்கவில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், கூல்டர் நைல்… அவரிடம் ஷார்ட் பால் டெக்னிக் சுத்தமாக எடுபடவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பொதுவாக, கிரிக்கெட்டில் எட்டாவதாக பேட் பிடிக்க களமிறங்குபவரை பேட்ஸ்மேன் கணக்கிலும் சேர்க்க முடியாது, டெய்லெண்டராகவும் பாவிக்க முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பார்கள். பேட்டை கையில் பிடித்து ஏதோ சமாளிப்பார்கள். அது மணிக்கணிக்கில் நீடிக்காது. ஒன்று கண்ணை மூடி சுத்த தெரியும், இல்லை, ஸ்டம்புக்கு வரும் பந்தைத் தடுக்கத் தெரியும்.

'ஐசிசி விதியில் இது இல்லையே பாஸ்!’- தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் #DhoniKeepTheGlove

அசுர வேகத்துக்கும், நேர்த்தியான சுழலுக்கும் அவர்கள் தடுமாறுவார்கள். ஸ்லாக் ஷாட் ஆடுவார்கள், இல்லையெனில் எளிமையான முறையில் அவுட்டாகிச் செல்வார்கள். சூழலுக்கேற்ப அவர்களால் ஷாட் ஆடத் தெரியாது.’ – இது, நம்பர் -8 பேட்ஸ்மேன்களின் இயல்பு குறித்து, கிரிக்கெட் நிருபர் ஜெராட் கிம்பர் வகுத்த வரையறை.

நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவின் கூல்டர் நைல் களமிறங்கிய பொசிஷன் நம்பர் 8. கிம்பர் சொன்ன எல்லா இலக்கணமும் இவருக்கும் பொருந்தும். ஆனால், கூல்டர் நைல்தான் ஆஸ்திரேலியாவின் டாப் ஸ்கோரர் என்பது எவ்வளவு நகைமுரண். அவர் களமிறங்கியபோது ஸ்கோர் 147-6. அவர் அவுட்டான போது ஸ்கோர் 284-9.

Coulter-Nile
Coulter-Nile
AP

`ஸ்மித் அவுட்டானா, ஆஸ்திரேலியா அவ்வளவுதான்’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களை தன் பக்கம் திரும்ப வைத்தார் கூல்டர் நைல். ஸ்கோர் 250 ரன்களைத் தாண்டாது என நினைத்தவர்களை 288 வர வைத்தார். டெய்லெண்டர்கள் நீண்ட நேரம் நீடிக்க மாட்டார்கள் என்ற விதியை மாற்றி எழுதினார். ஏழாவது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் 107 என அட்டகாசமான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

60 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரி உள்பட 92 ரன்கள் விளாசினார். ஒரு சாதனை ஜஸ்ட் மிஸ். இன்னொரு பவுண்டரி அடித்திருந்தால், லிஸ்ட் ஏ போட்டிகளில், நம்பர் 8 பொசிஷனில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்திருப்பார். 2016-ல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 95 ரன்கள் அடித்ததே நம்பர் -8 அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

ஆண்ட்ரே ரஸல் சொன்னது போலவே, பாகிஸ்தானை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஷார்ட் பால் டெக்னிக் வெஸ்ட் இண்டீஸுக்கு கைகொடுத்தது. உஸ்மான் கவாஜா இரண்டு முறை ஹெல்மெட்டில் அடிவாங்கினார். பாடி லைனில் வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறினார் ஆரோன் ஃபின்ச்.

பேக் ஆஃப் லென்த்தில் விழுந்த பந்தை டிரைவ் செய்வதற்கு பதிலாக கட் செய்ய முயன்று தோற்றார் டேவிட் வார்னர். உடம்பை குறிவைத்து வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பாலை புல் ஷாட் அடிக்க முயன்று தோற்றார் மேக்ஸ்வெல். அதுவும் சந்தித்த இரண்டாவது பந்திலேயே…

Steve Smith
Steve Smith

ஆனால், இந்த ஷார்ட் பால் டெக்னிக் ஸ்மித்திடம் பலிக்கவில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், கூல்டர் நைல்… அவரிடம் ஷார்ட் பால் டெக்னிக் சுத்தமாக எடுபடவில்லை.

ஆரம்பத்தில் அவரும் தடுமாறினார் ஆனாலும், செட்டிலான பின் ஷார்ட் பிட்ச்சில் விழுந்த பந்துகளை எளிதாக புல் ஷாட் அடித்தார் . ஃபுல் லென்த்தில் வந்த பந்துகளை ஃப்ளிக் செய்தார். அவர் எடுத்த ரன்களில் 21 ரன்கள் புல் ஷாட்டில் எடுத்தவை. தவிர, 80 சதவீதம் லெக் சைடில் அடிக்கப்பட்டவை. 70 ரன்கள் அடித்தபின்னரே ஆஃப் சைடில் பவுண்டரி அடித்தார்.

Coulter-Nile
Coulter-Nile
AP

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அழகாக வியூகம் வகுத்த வெஸ்ட் இண்டீஸ் பெளலர்கள், டெய்லெண்டர்தானே என கூல்டர் நைலை அலட்சியம் செய்திருப்பார்கள் போல. அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசியவர்கள், கூல்டர் நைலுக்கு லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தனர்.

ரஸல் வீசிய பாடி லைன் அட்டாக், பெளன்சரையே எளிதாக சமாளித்த கூல்டர் நைல், லெக் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் பிட்ச்சில் விழுந்த பந்துகளை எதிர்கொள்வதில் எந்த சிரமமும்படவில்லை. ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கேட்ச் டிராப் செய்ததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். விளைவு, சரிவில் சென்ற ஆஸ்திரேலியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்து, நம்பர் -8 பொசிஷனுக்கு புதிய இலக்கணம் வகுத்து விட்டார்.

Andrew Russell
Andrew Russell

கூல்டர் நைல் இன்னிங்ஸை விட பெரிதும் பாராட்டுக்குரியது ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸ். வேறு என்ன சொல்ல, மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார், இந்த ஆஸி முன்னாள் கேப்டன். 38-4 என்ற சூழலில் ஆஸி தடுமாறிய போது, விக்கெட் கீப்பர் கேரி, ஸ்டாய்னிஸ், கூல்டர் நைல் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியைக் கரை சேர்த்து, வெற்றிபெறச் செய்த பெருமை அவருக்கு உண்டு. இன்னும் 5 ஓவர்கள்தான் இருக்கிறது அடித்து ஆடலாம் என வேகமெடுத்தபோது, லாங் லெக்கில் இருந்து இந்த உலகக் கோப்பையின் பெஸ்ட் கேட்ச் ஒன்றைப் பிடித்தார் காட்ரெல்.

சச்சின் எத்தனை உலகக் கோப்பைகளில் ஆடியுள்ளார்? கிரிக்கெட் க்விஸ்! #WorldCup2019

அதிரடி கூல்டர்நைல், அட்டகாச ஸ்டார்க்... #AUSvWI மேட்ச் ஆல்பம்

ஸ்போர்ட்ஸில் அடிக்கடி ஒன்று சொல்வார்கள், `இது அவர்கள் கையில் இருந்த கேம்.’ சேஸிங்கில் ஒரு கட்டத்தில் அப்படித்தான், வெற்றி வெஸ்ட் இண்டீஸ் கையில் இருந்தது. கிறிஸ் கெய்லுக்கு அம்பயர் அநீதி இழைத்திருக்கலாம், பிராத்வெய்ட் சொல்வது போல, அம்பயர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பாரபட்சமாக நடந்திருக்கலாம், இதையெல்லாம் கடந்தும் அவர்களால் ஜெயித்திருக்க முடியும். ஸ்மித் எப்படி மறுமுனையில் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் பொறுமையாக, பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸ் பில்ட் செய்தாரோ, அப்படியொரு இன்னிங்ஸை ஆடத் தவறிவிட்டார் ரஸல்.

Mitchell Starc
Mitchell Starc

அவர் இன்னும் ஐபிஎல் ஹேங்ஓவரில் இருந்து மீளவில்லை. டி-20 மோடிலேயே இருக்கிறார். அதைப் பெருமையாகவும் சொல்லியிருக்கிறார். `என்னால் எளிதாக சிக்ஸர்கள் பறக்கவிட முடியும். ஒருநாள் போட்டிகளையும் டி-20 போலவே அணுகுவேன்’ என்று, உலகக் கோப்பை தொடங்கும் முன் சொல்லியிருந்தார். அப்படி அணுகக்கூடாது என தலையில் தட்டியிருக்கிறது ஆஸ்திரேலியா. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணமிது.

`70 ரன்கள் தேவை, ஐந்து விக்கெட்டுகள் போய்விட்டது. எதிர்த்து விளையாடுவது பலமான ஆஸ்திரேலியா அணி எனும்போது ஒரு அனுபவ பேட்ஸ்மேன் என்ற முறையில், ரஸல் களத்தில் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஷாட் செலக்ஷனில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்’ என வருத்தப்பட்டார், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேரன் கங்கா. அவர் சொல்வது நிஜம்.

Steve Smith
Steve Smith

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பால்களில் திணறுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் ரஸல். அதேபோல, பெளலிங்கில் நேற்று 2 விக்கெட் எடுத்தவர், பேட்டிங்கிலும் தனி ஆளாக மேட்ச்சை முடித்துக் கொடுத்து மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்திருக்கலாம். அவசரமும், மோசமான ஷாட் செலக்ஷனும் ஆஸிக்கு இரண்டு புள்ளிகளை தாரை வார்த்துவிட்டது.

`இந்த உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர்கள்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்’ என்று ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்லியிருக்கிறார்.

Mitchell Starc
Mitchell Starc
AP

ஷகிப் அல் ஹசன், ஸ்டோக்ஸ், மொயின் அலி என ஒவ்வொரு ஆல் ரவுண்டரும் அதை மெய்ப்பித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ரஸல் இடம்பெற வேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு