பெயர் : ஆஸ்கர் ஆஃப்கன்
பிறந்த தேதி : 22-12-1987
பிறந்த தேதி : 22-12-1987

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஊர்: கபூல், ஆப்கானிஸ்தான்
ரோல் : மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்
பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்
பெளலிங் ஸ்டைல் : வலது கை மீடியம் பேஸ்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 19-4-2009
ப்ளேயிங் ஸ்டைல்
கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அப்கானிஸ்தானின் முன்னாள் கேப்டனான இவர், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் வேலையை கனகச்சிதமாக செய்கிறார். அனுபவம் எந்த அளவுக்கு ஒருவரின் ஆட்டத்தை மெருகேற்றும் என்பதை அறிய மற்ற ஆஃப்கானிஸ்தான் வீர்ரகளின் ஆட்டத்தோடு இவரின் ஆட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால் புரியும். டாப் ஆர்டர் சொதப்பும் போதெல்லாம் மிடில் ஆர்டரில் இறங்கி இவர் ஆட்டத்தை கட்டமைப்பதில் அத்தனை முதிர்ச்சி காண்பிக்கிறார்.

பொதுவாக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடும் இவர் எதிரில் அடித்து விளையாடுபவருக்கு நல்ல சப்போர்ட் கொடுத்து ஆடுவர். நன்றாக செட் ஆனதும் அதிரடியை காட்டத் தொடங்கிவிடுவார். அணியில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடிய இவர், இந்த உலககோப்பையில் கேப்டனாக இல்லாவிட்டாலும் இவரின் அனுபவம் மூலம் நிச்சயம் அணிக்கு பலம் சேர்க்கிறார்.
கிரிக்கெட் பயணம்
2004-ல் ஆப்கானிஸ்தான் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்ற ஆஃப்கான், பிறகு ஆப்கானிஸ்தான் சீனியர் அணியில் இடம்பெற்றார். 2009 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆடிய போட்டிதான் அவரின் முதல் ஒருநாள் போட்டி. 2010 ACC கோப்பையை வென்றதில் இவர் முக்கிய அங்கம் வகித்தார். அந்த தொடரில் ஆஃப்கான் சதம் உட்பட 253 ரன்கள் குவித்து, அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் மூன்றவது இடம்பிடித்தார்.
2014 வங்கதேசம் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் விளாசியது அவருக்கு மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அணிக்கே திருப்புமுனையாக அமைந்தது. டெஸ்ட் அந்தஸ்துள்ள ஒரு அணியை முதல்முறையாக ஆப்கானிஸ்தான் வென்று சரித்திரம் படைத்தது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதே எங்கள் கனவு. அதற்காகத்தான் உழைத்தோம். இன்று அந்த கனவு நினைவாகியிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்ஆஸ்கர் அஃப்கான்
2015–ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு இவரிடம் வர, அது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புனையாக அமைந்தது. அந்தச் சவாலை துணிவோடு ஏற்று இன்று வரை ஆப்கானிஸ்தான் கண்டுள்ள சிறந்த கேப்டனாக விளங்குகிறார். கத்துக்குட்டியாக பாவிக்கப்படும் ஆப்கன், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை வீழ்த்தி உலக்கோப்பை வரை முன்னேறியதில், ஆப்கனின் பங்கும் உள்ளது.
இன்று அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்படுள்ளது. ஆனால், அதெயெல்லாம் பற்றி கவலைப்படும் வீரர் அல்ல ஆஃப்கான். தங்கள் நாட்டில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக தன் பெயரையே மாற்றியவர் அவர். இந்த புறக்கணிப்புகளை எல்லாம் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்காக பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆட காத்துக்கொண்டிருக்கிறார்.
சிறந்த பர்ஃபாமன்ஸ்
அயர்லாந்து அணியுடனான உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது ஆப்கானிஸ்தான். அந்த சமயம் ஒட்டுக்குடல் நோயால் அவதிப்பட்டார். சிகிச்சை முடிந்து இரண்டே வாரத்தில் விளையாட வந்த ஆஃப்கான் அன்றைய போட்டியில் ஃபினிஷராக அசத்தினார். கடைசி கட்டத்தில் களமிறங்கி 29 பந்துகளில் 39 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணி, கெளரமான ஸ்கோரை எடுக்க உதவினார். விளையாடும்போது ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் அவர் ஆடிய ஆட்டம் நிச்சயம் ஒரு ‘கேப்டன்ஸ் நாக்’.

2014 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்ற அந்த அணி முதல் முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியை வென்று சரித்தரம் படைத்தது. அந்தப் போட்டியில் 90-5 என்ற மோசமான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தானை 90 ரன்கள் அடித்து அந்த அணி நல்ல ஸ்கோர் (254) அடைய உதவினார். அனுபவம், பொறுமை, நேர்த்தியின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அஸ்கர் ஆஃப்கன் ஸ்பெஷல்
ரோல்மாடல் - முகமது யூசஃப்
கேப்டனாக ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து தரப்பிலும் விளையாடிய ஒரே வீரர்.
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை நிலைநாட்டுவதற்காக தன் பெயரை ஆஃப்கான் என மாற்றினார்.